செய்திகள் :

"கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்"- அதிமுகவில் இருந்து விலகிய கௌதமி

post image

நடிகை கெளதமி அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கழக அடிப்படை உறுப்பினர் மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து இன்று முதல் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

இன்று 14/06/2026 முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

நடிகை கௌதமி
நடிகை கௌதமி

கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர் பெருமக்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் பிற அணி மாநில செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் நகரக் கழக செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி என்னை கழகத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் பாணியில் ஆபீஸில் மதிய சாப்பாடு; பவானிசாகர் எம்எல்ஏ ரீல்ஸ்! எதிர்க்கட்சியினர் சொல்வதென்ன?

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் த.வெ.க வேட்பாளராகப் போட்டியிட்டவர் தமிழ்ச்செல்வி. தனக்கு எதிராக களத்தில் நின்ற தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர், அ.தி.மு.க வேட்பாளர் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கடன்கள், ஏறும் டீசல் விலை... 60 நாட்களுக்குப் பிறகு பாயக் காத்திருக்கும் படகுகள்

"ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் முடிஞ்சாச்சு. இனி எப்படியாவது கடலுக்குப் போய் நம்ம வண்டியை ஓட்டணும். ஆனா, முன்ன மாதிரி இப்ப நிம்மதியா தொழில் பண்ண முடியலை" என்று பெருமூச்சுடன் கூறுகிறார் புதுக்கோட்டை மாவட... மேலும் பார்க்க

"தன் மகனை அரசியலுக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி டிராமா செய்கிறார்" - சி.வி.சண்முகம் தாக்கு

அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் இன்று (ஜூன்.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ''அதிமுகவின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நடந்து முடிந்த... மேலும் பார்க்க

சபரிமலை தங்கக் கொள்ளை: குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்தின் வக்கீல் அரசு வழக்கறிஞரா? எதிர்ப்பால் ராஜிநாமா

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிலையில் 2019-ம் ஆண்டு தங்க முலாம் பூசியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தடினமாக இருந்த தங்கப் பூச்ச... மேலும் பார்க்க

'அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகிறது?' - ட்ரம்ப் சொல்வது என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை நிறுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுபறியாகவே இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று அமைதி... மேலும் பார்க்க

``பாஜகவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி; மோடியைத்தான் கட்டிப்பிடிப்பார்" - பினராயி விஜயன் விமர்சனம்

ஜூன் 8 - அன்று 'இந்தியா' (INDIA) கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து தங்கள் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தனர். 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே, சிபிஐ(எம்)-ன் பொது... மேலும் பார்க்க