செய்திகள் :

'காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை' - பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

post image

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் காவலர் குடும்பநல அறக்கட்டளை தலைவர் சத்யபிரியா என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், “தமிழகத்தில் போலீசார் தினமும் அதிக நேரம் பணிபுரிவதால் அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. இதனால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியமால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.  

ஆங்கிலேயர் ஆட்சியில் சுதந்திரத்திற்குப் போராடியவர்களை ஒடுக்குவதற்கு பட்டாலியன் படை உருவாக்கப்பட்டது. அவர்கள் போன பல மாநிலங்களில் பட்டாலியன் படை கலைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் சிறப்புக் காவல் பட்டாலியன் என்கிற பெயரில் 16 ஆயிரம் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.  

இவர்களை ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு அழைத்து செல்வதற்கு அரசுக்குத் தேவையற்ற போக்குவரத்து செலவு ஏற்படுகிறது. ஒரு இடத்தில் பிரச்னை என்றால் முதலில் செல்வது சட்டம் ஒழுங்கு போலீசாரும் அதன்பின் ஆயுதப்படை போலீசாரும் கடைசியாகத்தான் பட்டாலியன் போலீசார் வருகின்றனர். இவர்கள் உயரதிகாரிகள் தங்களுடைய வீட்டு வேலைகள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.

சிறப்புக் காவல் பட்டாலியனின் பணிகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். இந்தத் துறையைய மறுசீரமைப்பு செய்து சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைக்க பரிசீலிக்க வேண்டும்.

காவலர்கள்

அனைத்து போலீசாரும் தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றாமல் இருப்பதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தர விட வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகளைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த் திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு, “தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி ஆகியோர்  8 வாரங்களில் பதில் மனு தாக்கல் உத்தரவு” பிறப்பித்தனர்.

பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு எதிரான வழக்கில் மறு விசாரணையா? - உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்ன?

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குற்றவாளியாக உள்ள வழக்கில், மறு விசாரணை நடத்த வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி தொடர்ந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்... மேலும் பார்க்க

`கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி ஜீவனாம்சம் கோர முடியாது' - கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கணவரை விட கணிசமாக அதிக ஊதியம் பெறும் மனைவி, அவரிடமிருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக, அந்த மனைவிக்கு வேறு எந்தப் பொறுப்புகளோ அல்லது கடன்களோ... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவருக்கு `மரண தண்டனை'- 60 நாள்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு

புனே அருகில் உள்ள நஸ்ராபூர் என்ற இடத்தில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட சிறுமி விடுமுறைக்காக ​​தனது பாட்டி வீட்டிற்... மேலும் பார்க்க

உள்நோக்கத்துடன் நடவடிக்கை?– லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சஸ்பென்ஷனுக்கு இடைக்கால தடை

லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த ஆய்வாளர் விமலா, ஒரு அரசு அதிகாரி மீதான ஆரம்பகட்ட கண்காணிப்பு விசாரணையை மேற்கொண்டபோது, அவரிடம் லஞ்சம் கேட்டதாக உள்துறை கண்காணிப்பில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்... மேலும் பார்க்க

`நெல் கொள்முதல் செய்யாததால் ஒரு நாள் மழையில், பல மாத உழைப்பு வீணாகிறது' - நீதிபதிகள் வேதனை

தஞ்சையைச் சேர்ந்த அமிர்தராஜ் ஹமீதுதீன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், `தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல்... மேலும் பார்க்க

டெலிகிராம்: `கட்டுப்பாடற்ற அரக்கனைப் போல.!' - மத்திய அரசின் கடும் வாதம்; தடையை உறுதி செய்த கோர்ட்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வில் மீண்டும் வினாத்தாள் கசிவு போன்ற... மேலும் பார்க்க