செய்திகள் :

வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் பரிதாப மரணம்!

post image

வியட்நாமின் புகழ்பெற்ற புக்குவக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான Hon May Rut Ngoai தீவிலிருந்து புறப்பட்ட அந்தப் படகு, 'அன் தோய்' சர்வதேச துறைமுகத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. துறைமுகத்திற்குச் சற்று தொலைவில், சுமார் 400 மீட்டர் தூரத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகப் படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அந்தப் படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 4 ஊழியர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மோடி
மோடி

விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த பிற படகுகளும், வியட்நாம் எல்லைப் பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படகில் சிக்கியிருந்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகப் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் படகின் உள்பகுதியில் மாட்டிக்கொண்டதால், அவர்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து குறித்து வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``விபத்து குறித்த துல்லியமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காகத் தலைநகர் ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரில் அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வியட்நாம் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன."எனத் தெரிவித்திருக்கிறது.

ராகுல் காந்தி
காங்கிரஸ் ராகுல் காந்தி

இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``வியட்நாமின் புக்குவக் தீவு அருகே இந்தியப் பிரஜைகள் பயணித்த படகு விபத்துக்குள்ளான சோகமான செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இதில் தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நமது தூதரகமும், தூதரகக் கிளையும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. நமது அதிகாரிகள் வியட்நாம் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகின்றனர்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``இந்தத் துயரமான சம்பவத்தைக் கேட்டு நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் காணாமல் போனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல், மிகுந்த தவிப்புடன் காத்துக்கொண்டிருக்கும் அவர்களது குடும்பத்தினரின் வேதனையில் நானும் பங்கெடுக்கிறேன்.

வியாட்நாம் விபத்து
வியாட்நாம் விபத்து

தற்போது நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் சாத்தியமான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் இந்திய அரசும், வெளியுறவு அமைச்சகமும் வியட்நாம் அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வியட்நாமின் 'ஹா லாங்' வளைகுடாவில் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக 'வொண்டர் சீ' என்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்து 39 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், தற்போது புக்குவக் தீவில் நடந்துள்ள இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: நேருக்கு நேர் மோதிக்கொண்ட டேங்கர் லாரி - கார்; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சோகம்

சேலம் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவரின் கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களின் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், ப... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி; ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்

மகாராஷ்டிரா முழுக்க தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் ஒடிந்து விழுந்து வருகிறது. மின்வயர்களும் அறுந்து விழுந்து வருகிறது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள காம்க... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு:‌ அவசரக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர்; மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 265 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழை காரணமாக மேப்... மேலும் பார்க்க

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; மீட்புப் பணிகள் தீவிரம்; கேரளாவில் மீண்டும் சோகம்

கேரள மாநிலத்தின் மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் 'ஆனக்கம்பொயில் - மேப்பாடி' சுரங்கப்பாதை திட்டப் பணிகள் தற்போது மேனகாட்சி பாலம் அருகே நடைபெற்று வருகின்றன. மலப்புறம் மற்றும் வயநாடு இடையே... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: நெல் மூட்டைகள் சரிந்து பெண் பணியாளர் பலியான சோகம்; இழப்பீடு வழங்க கோரிக்கை

தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள... மேலும் பார்க்க

திருவள்ளூர் அமோனியா கசிவு: இறப்பு எண்ணிக்கை 18-ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழி... மேலும் பார்க்க