செய்திகள் :

Anbe Diana: ``டப்பிங் பேசும்போது எனக்கு கண்ணீர் வந்தது" - 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரோஜா!

post image

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடைபெற்றது.

அன்பே டயானா படக்குழு
அன்பே டயானா படக்குழு

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் 'அன்பே டயானா' படத்தின் மூலம் 'ரீ என்ட்ரி' கொடுத்திருக்கிறார் நடிகை ரோஜா. இப்படத்தில் அவர் 'வக்கலங்கா சரளா' என்ற அன்பான, அதே சமயம் பவர்புல்லான அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்தது குறித்து பேசிய நடிகை ரோஜா, ``ஒவ்வொரு காட்சியிலும் என் சொந்தக் குடும்பத்தில் என் பையன், பொண்ணு, கணவர் செல்வாவோடு நான் எப்படி இருப்பேனோ, அதுவே எனக்கு நினைவுக்கு வந்தது.

குடும்பப் பாசம், டாமினேஷன், கிளைமாக்ஸில் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள் என அனைத்தையும் இயக்குநர் பாரி அழகன் மிக அழகாக எடுத்துள்ளார். இப்படத்தில் என் மூத்த மகனாக பாரியும், இளைய மகனாக சுதர்சனும் நடித்துள்ளனர்.

அன்பே டயானா ரோஜா
அன்பே டயானா ரோஜா

மேலும், இப்படத்தின் டப்பிங் பேசும்போது எனக்கே கண்ணீர் வந்தது. கேமராமேன் ஷெல்லி ப்ரோ சிங்கிள் ஷாட்களுக்காக கிம்பல் தூக்கிக்கொண்டு மிகவும் ரிஸ்க் எடுத்து உழைத்துள்ளார். மியூசிக் டைரக்டர் பரத் சங்கர் நல்ல பாடல்களைத் தந்துள்ளார். நிறைவாக உணர்கிறேன்'' என்றார்.

"ஒரு தாயிடம் ஒருபோதும் விளையாடாதீர்கள்" - மகள்கள் மீதான உருவக்கேலிக்கு குஷ்பு பதிலடி

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவின் மகள்கள் உருவக்கேலியைச் சந்தித்து வந்த நிலையில் குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அ... மேலும் பார்க்க

Anbe Diana:``'பெரம்பூர்' சுற்றுலாத் தலம் போல மக்களின் கவனத்தை ஈர்க்கப்போகிறது" - நடிகர் சமுத்திரகனி

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

"கேலி செய்வது கோழைத்தனம்" - குஷ்பு மகள்களுக்கு நடந்த உருவக்கேலிக்கு நடிகை ராதிகா கண்டனம்

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி ஆகியோரின் இரண்டாவது மகள் அனந்திதா. இயக்குநர் மணிரத்னத்திடம் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப... மேலும் பார்க்க

Anbe Diana: ``'டைரக்ஷன் மட்டும் பண்ணுங்க; ஹீரோவா வேணாம்' என்றார்கள்; ஆனால்..." - பாரி இளவழகன்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர... மேலும் பார்க்க

Anbe Diana:``ஒரு படைப்பாளியின் பாதையை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்" - சசிகுமார்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

Janaki: ``உங்களது பெயரைத் தாங்கி நடித்திருப்பது, என் வாழ்நாளின் பெருமை" - திரிஷா இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர் பாடகி ஜானகி. இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்... மேலும் பார்க்க