செய்திகள் :

Janaki: 55 வருடங்களுக்குப் பிறகு பத்ம பூஷனா? விருதை வாங்க மறுத்த ஜானகி; வைரலாகும் வீடியோ

post image

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பாடி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பின்னணிப் பாடகி ஜானகி நேற்று (ஜுலை.11) காலமானார்.

இவர் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த பத்ம பூஷன் விருதை ஜானகி வாங்க மறுத்திருக்கிறார்.

ஜானகி
ஜானகி

இதுதொடர்பாக அவர் பேசியிருந்த வீடியோ தற்போது வைரல் வருகிறது.

அந்த வீடியோவில், "திரைத்துறையில் 55 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல மொழிகளில், எண்ணற்ற பாடல்களை நான் பாடியிருக்கிறேன்.

இவ்வளவு அற்புதமாகப் பாடியிருக்கும் போது, என்ன மாதிரியான விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்?

பாரத ரத்னா போன்ற மிக உயரிய விருதை வழங்கியிருந்தால் கூட அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்.

அதைத் தவிர எனக்கு வேறு எந்த விருதும் வேண்டாம். எனக்கு விருதுகள் மீதும் துளிக்கூட ஆர்வமில்லை.

நான் எந்த ஒரு விருதுக்காகவும் பாட வரவில்லை. நான் பாடியதெல்லாம் என்னுடைய அன்பான ரசிகர்களுக்காக மட்டுமே.

ஜானகி
ஜானகி

அரசுக்கு விருப்பமிருந்தால் அவர்கள் பாரத் ரத்னா கொடுக்கட்டும், இல்லையென்றால் எந்த விருதும் கொடுக்கத் தேவையில்லை.

என் ரசிகர்களும் நண்பர்களும் எப்போதும் என்னோடு இருக்கிறார்கள். அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி.

அதைவிடப் பிரமாண்டமான ஒரு விருது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை" என்று பேசியிருக்கிறார்.

Anbe Diana: ``நான் இந்த இடத்திற்கு வரக் காரணமாய் இருந்த தனுஷ் சாருக்கு நன்றி" - ரம்யா ரங்கநாதன்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

Janaki: ``என் மெட்டுக்கு மெருகேற்றியவர்; பாட்டுக்கு அமுதூட்டியவர்" - டி.ராஜேந்தர் இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர் பாடகி ஜானகி. இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்... மேலும் பார்க்க

ஜானகி மறைவு: "சொந்த வாழ்வில் எத்தனையோ துக்கங்களைத் தாங்கியிருக்கிறார்..." - இளையராஜா இரங்கல்

பின்னணி பாடகி ஜானகியின் மறைவிற்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் இளையராஜா ஜானகியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியி... மேலும் பார்க்க

"ஒரு தாயிடம் ஒருபோதும் விளையாடாதீர்கள்" - மகள்கள் மீதான உருவக்கேலிக்கு குஷ்பு பதிலடி

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவின் மகள்கள் உருவக்கேலியைச் சந்தித்து வந்த நிலையில் குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அ... மேலும் பார்க்க

Anbe Diana:``'பெரம்பூர்' சுற்றுலாத் தலம் போல மக்களின் கவனத்தை ஈர்க்கப்போகிறது" - நடிகர் சமுத்திரகனி

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

"கேலி செய்வது கோழைத்தனம்" - குஷ்பு மகள்களுக்கு நடந்த உருவக்கேலிக்கு நடிகை ராதிகா கண்டனம்

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி ஆகியோரின் இரண்டாவது மகள் அனந்திதா. இயக்குநர் மணிரத்னத்திடம் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப... மேலும் பார்க்க