செய்திகள் :

'நான் சிங்கப்பூருக்கு ஓடி, ஒளிந்துவிட்டேனா?' - முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு எ.வ.வேலு பதிலடி

post image

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவர் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் கடந்த ஜூன் 25-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அடுத்த நாளான 26-ம் தேதி எ.வ.வேலு சிங்கப்பூர் சென்றார்.

இதனிடையே நேற்று முன்தினம் (ஜுலை. 10) கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய், "கைதுக்குப் பயந்து ஒருத்தர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். உடனே ஸ்டாலின் சார் என நினைக்காதீர்கள். எனக்கு ஸ்டாலின் சார் மீது தனிப்பாசம் உண்டு. வேறு ஒருத்தர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனாரே... அவரைச் சொன்னேன்" என்று எ.வ வேலுவை மறைமுகமாகச் சாடியிருந்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய எ.வ வேலு செய்தியாளர்களைச் சந்தித்து முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

"ஓடுவது, ஒளிவது, பதுங்கும் பழக்கம் திமுகவுக்கு இல்லை. கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் எங்களை அப்படி வளர்க்கவில்லை.

அரசியலை அரசியலாகச் சந்திக்க திமுக என்றும் தயங்கியதில்லை. 2016-ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இதயம் தொடர்பான சிகிச்சை பெற்று வருகிறேன். 2016-ம் ஆண்டு முதன் முறையாக நான் அங்கு சென்று சிகிச்சை பெற்றேன். அதன் பிறகு தொடர்ந்து அங்கு சென்று வருகிறேன்.

2023-ம் ஆண்டு சென்று அதே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றேன். சிங்கப்பூர் செல்ல கடந்த மாதம் 15ம் தேதியே விசாவுக்கு விண்ணப்பித்தேன். 15ம் தேதி விண்ணப்பித்து விசா கிடைத்தவுடன் 17ம் தேதி டிக்கெட் எடுத்தேன்.

சிங்கப்பூர் புறப்பட்டுக் கொண்டிருந்த அன்றுதான் போலீசார் சோதனைக்கு வந்தார்கள். போலீசார் சோதனைக்கு வந்ததால் சிங்கப்பூர் பயண டிக்கெட்டை மாற்றி புக் செய்தேன். ஜூலை 3இல் கொடுத்த சம்மனுக்கு 10 நாள்களுக்குப் பிறகு வருவதாக கடிதம் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் பதில் அளித்தேன்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

மீண்டும் 9ஆம் தேதி வரச்சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அளித்தது. விசாரணைக்கு ஒத்துழைப்பாக நான் கூறியும் ஓடுகிறேன். ஒளிகிறேன் எனக் கூறுகின்றனர். ஓடுவது, ஒளிவது, பதுங்குவது திமுகவினர் பழக்கம் கிடையாது.

ஜூலை 15ஆம் தேதி விசாரணைக்கு கட்டாயம் ஆஜராவேன், எந்தத் தேதியில் சம்மன் கொடுத்தாலும் ஆஜராவேன். சிங்கப்பூருக்குச் சென்றபின் பல்வேறு கற்பனைகள் அவிழ்த்துவிடப்பட்டன" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

"கூட்டணியிலிருந்தும் தவெக அரசைக் கடுமையாக விமர்சிப்பதற்குக் காரணம் இதுதான்" - ஆதவன் தீட்சண்யா

'''தீக்கதிர்' நாளிதழுக்கு அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் சந்தா செலுத்திய செய்தியைக் குறிப்பிட்ட போது, தொண்ணூறுகளில் 'வாச்சாத்தி சம்பவம்' நிகழ்ந்தபோது அவர் குறித்துச் செய்திகள் வெளியான பழைய இதழ்களையும் ... மேலும் பார்க்க

“தவெக-வினர் ஸ்க்ரிப்ட்டுக்கு வாயசைக்கிறார் தோழர் பெ.சண்முகம்” - பரந்தாமன் 'பகீர்' குற்றச்சாட்டு

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருக்கு, அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் விஜய் வழங்கியதைத் தொடர்ந்து, ‘கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறார் முதல்வர்’ என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்... மேலும் பார்க்க

``துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் குருகுல கல்வியைச் செயல்படுத்த முடியவில்லை" - ஆளுநர் அர்லேக்கர்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ் கல்லூரியின் (தன்னாட்சி) 59-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதன்மை ... மேலும் பார்க்க

சரத்பவார் கட்சி எம்பி-க்கள் 6 பேர் பாஜக கூட்டணிக்குத் தாவ முயற்சி? காங். தலைவர் கருத்தால் சலசலப்பு

மகாராஷ்டிராவில் ஏற்கனவே சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்து இரு கட்சிகளாகச் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 6 எம்.பி.க்... மேலும் பார்க்க

‘கோவை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்குக’ – வானதி சீனிவாசன் கோரிக்கை

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தன... மேலும் பார்க்க

`துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பத்திற்கு அரசு பணி வழங்கியபோது தடுக்காதது ஏன்?' - செங்கோட்டையன்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் விதமாக கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து ... மேலும் பார்க்க