செய்திகள் :

Train: ``'விடுதலை' படத்திலிருந்தே விஜய் சேதுபதி எங்களில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார்" - வெற்றிமாறன்

post image

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ``மிஷ்கின் எப்போதுமே புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருப்பார். மியூசிக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று கூறி எதையாவது வாசித்துக் கொண்டிருப்பார். ஆனால், ஒரு முழு நீளத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு எப்படி இவ்வளவு தன்னம்பிக்கை வந்தது என்று நான் வியந்ததுண்டு.

Train டீசர் வெளியீடு
Train டீசர் வெளியீடு

மிஷ்கின் படங்களின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், நாம் எதிர்பார்க்காத தருணங்களில் மனிதர்களுக்குள் இருக்கும் 'கிரே ஷேடை' தாண்டி இருக்கும் மனிதநேயத்தை அவர் வெளிப்படுத்துவார். நாமும் அவர் படங்களைப் பார்க்கும்போது அப்படிப்பட்ட உணர்வுப்பூர்வமான தருணங்களை எதிர்பார்த்தே செல்வோம்.

மிகக் குறுகிய நிமிடங்களிலேயே பார்ப்பவர்களை எமோஷனலாகத் தொட்டு, கதாபாத்திரங்களை நம்மோடு அரவணைக்கச் செய்யும் ஒரு மாபெரும் எழுத்தாளர் அவர். படத்திற்காகத் தன் 100% உழைப்பைக் கொடுப்பார்.

இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போதே நான் செட்டிற்குச் சென்றிருந்தேன். எல்லாமே ஒரு புதிய திரைத்துறை பரிசோதனையாக இருந்தது. ஒரு இயக்குநராக அந்த ரிஸ்க்கை எடுத்துப் பரிசோதிக்க எவ்வளவு தைரியம் வேண்டுமோ, அதே அளவு துணிச்சலோடு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சார் இந்த ரிஸ்க்கை ஏற்றுப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படம் த்ரில்லர் பாணியில் மிரட்டியிருக்கிறது. 'விடுதலை' படத்தில் வொர்க் பண்ணியதில் இருந்தே விஜய் சேதுபதி எங்களுடைய பல பயணங்களில் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல, மிஷ்கின் படங்களில் இருக்கும் அந்த நல்ல குணம் நிஜ வாழ்க்கையிலும் நிறைந்த ஒரு உன்னத மனிதர். யாருக்காவது ஒரு மனவருத்தம் இருந்தால் கூட, அவர்களுக்குள் இருக்கும் நல்லதை மட்டுமே பார்க்கக்கூடிய குணம் கொண்டவர் சேதுபதி. இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படப்பிடிப்பு தளம் எவ்வளவு கலகலப்பாகவும் அன்பாகவும் இருந்திருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது.

இந்தப் படம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் ஒரு சிறந்த த்ரில்லர் படமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தத் திரைப்படம் தியேட்டர்களில் பெரிய வெற்றியை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Train: ``விஜய் சேதுபதி சார் கொடுத்த ஆதரவே காரணம்.!" - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்த... மேலும் பார்க்க

"விஜய் படத்தில் விஜய்யை மட்டும்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள்; அதை மாற்றியது இந்த இருவர்தான்" - அமீர்

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'Train'. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் டீசர் மற்றும்... மேலும் பார்க்க

Train: ``கடந்த 6 வருஷத்துல மிஷ்கின் சந்தித்த துரோகங்கள், ஏமாற்றங்கள் ஏராளம்" - இயக்குநர் ராம்

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்த... மேலும் பார்க்க

Train: ``இவரைப் பார்த்தால் சைக்கோ மாதிரி இருக்கும்" - விஜய் சேதுபதி கலகல பேச்சு!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. ரயிலில் ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு 'டார்க் த்ரி... மேலும் பார்க்க

Anbe Diana: ``நான் இந்த இடத்திற்கு வரக் காரணமாய் இருந்த தனுஷ் சாருக்கு நன்றி" - ரம்யா ரங்கநாதன்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

Janaki: ``என் மெட்டுக்கு மெருகேற்றியவர்; பாட்டுக்கு அமுதூட்டியவர்" - டி.ராஜேந்தர் இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர் பாடகி ஜானகி. இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்... மேலும் பார்க்க