செய்திகள் :

``எழுத்தாளர் பூமணியின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை" - முதல்வர் விஜய் அறிவிப்பு

post image

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமையும், சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான பூமணி (79), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார்.

கரிசல் மண்ணின் யதார்த்த வாழ்க்கையைத் தன் எழுத்துகளால் செதுக்கிய அவரது மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

எழுத்தாளர் பூமணி
எழுத்தாளர் பூமணி

அதன் அடிப்படையில், முதல்வர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான திரு. பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

திரு. பூமணி அவர்கள் கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார். அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாகும்.

மேலும், அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது. திரு. பூமணி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலக்கியத் துறையில் திரு. பூமணி அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ITR Filing சீசன் இது; இன்னும் ஆதார் - பான் எண்ணை இணைக்கவில்லையா? என்ன, எப்படி செய்யலாம்? | How to

ஆதார் கார்டும், பான் கார்டும் இணைக்க வேண்டும். அப்படியில்லை என்றால், பான் கார்டு செல்லாது என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த வலியுறுத்தல் எப்போது முக்கியமோ, இல்லையோ, இப்போது இதை கட... மேலும் பார்க்க

PF: ரூ.5 லட்சத்திற்கு Auto settlement, 75% பணம் எடுக்கலாம், கூடுதல் வட்டி - EPFO புது அப்டேட் லிஸ்ட்

சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி வலைதளம் மற்றும் அதன் ஆப்பான UMANG அப்டேட் செய்யப்பட்டது. இந்த அப்டேட் மூலம் என்னென்ன விஷயங்கள் எளிதாக்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்...> புதிய CITES திட... மேலும் பார்க்க

கரூர்: `நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக அரசு பணி வழங்கலாம்' - உயர் நீதிமன்றம்

கரூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழ்நதவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் விஜய் கருணை அடிப்படையிலான அரசு பணி நியமன ஆணைகளை வழங்கவிருக்கிறார். இந்நிலையில் கரூர் கூட்... மேலும் பார்க்க

`நடுநிலைப் பள்ளிகளில் 0% Dropout Rate; தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அபாரம்!' - UDISE அறிக்கை விவரம்

மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் (UDISE) புதிய அறிக்கையில், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் இருப்பு, உள்கட்டமைப்பு மற்றும்... மேலும் பார்க்க

சுயதொழில் தொடங்க ஆசையா? - தமிழ்நாடு அரசின் 4 அதிரடி தொழில் மேம்பாட்டுப் பயிற்சிகள் - முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள தனது வளாகத்தில், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்காக பல்வேறு குறுகிய கால தொழில் மேம்பாட்... மேலும் பார்க்க

தமிழ்நாடு மின்துறையில் நுழையும் AI: சென்னை ஐஐடி-யுடன் கைகோக்கும் மின்வாரியம்! - பலன் என்ன?

தமிழக மின்கட்டமைப்பை தரம் உயர்த்தி, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ... மேலும் பார்க்க