செய்திகள் :

ITR Filing சீசன் இது; இன்னும் ஆதார் - பான் எண்ணை இணைக்கவில்லையா? என்ன, எப்படி செய்யலாம்? | How to

post image

ஆதார் கார்டும், பான் கார்டும் இணைக்க வேண்டும். அப்படியில்லை என்றால், பான் கார்டு செல்லாது என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த வலியுறுத்தல் எப்போது முக்கியமோ, இல்லையோ, இப்போது இதை கட்டாயம் கவனிக்க வேண்டும்.

வருமான வரி ரீஃபண்ட், அதற்கான வரி, TDS போன்றவற்றிற்கு பான் கார்டு மிக மிக முக்கியம். அதனால், இப்போதாவது பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைத்துவிடுவது நல்லது.

ஒருவேளை, இணைக்காமல், பான் கார்டு செல்லாமல் போய்விட்டால், ரீஃபண்டிற்கு நாம் தான் படாதபாடு பட வேண்டியதாக இருக்கும்.

பான் அட்டை
பான் அட்டை

ஆதார் - பான் இணைப்பிற்கான இலவச காலக்கெடு முடிந்துவிட்டாலும், இப்போது கட்டணம் செலுத்தி ஆதார் - பான் இணைக்க முடியும்.

அது எப்படி?

ஆதார் - பான் கார்டை இணைப்பதற்கு முன், அதற்கான கட்டணத்தை முதலில் கட்ட வேண்டும். அதற்கான நடைமுறை...

> e-filing வலைதளத்திற்குள் செல்லவும்.

> 'Home' பேஜில் உள்ள 'Quick Links'-ல் உள்ள 'Link Aadhaar'-ஐ கிளிக் செய்யவும்.

> அதில் பான் மற்றும் ஆதார் விவரங்களைப் பதிவிட்டு, 'Validate'-ஐ தேர்ந்தெடுக்கவும்.

> அதன் பிறகு வரும் 'Continue to Pay Through e-Pay Tax' ஆப்ஷனை தொடவும்.

> இப்போது பான் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும். இப்போது OTP வரும். அதை பதிவிட்டப் பிறகு, 'e-Pay Tax' பகுதிக்குள் செல்லவும்.

> தற்போதைய நடப்பு வரி ஆண்டு அல்லது நிதியாண்டைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆதார் கார்டு| Aadhar Card
ஆதார் கார்டு | Aadhar Card

> இங்கே Tax Payment > Fee for delay in Linking PAN with Aadhaar கொடுக்கவும்.

> இங்கே தானாகவே கட்டணத் தொகையாக ரூ.1,000 நிரப்பப்பட்டிருக்கும். உங்களுக்கு தோதான பேமெண்ட் முறையை கிளிக் செய்து பேமெண்ட் பண்ணவும்.

இதன் பிறகு தான், ஆதார் - பான் எண்ணை இணைக்க முடியும்.

> இப்போது மீண்டும் e-filing-ன் ஹோம் பேஜிற்குள் வரவும்.

> Quick Links > Link Aadhar-ஐ கிளிக் செய்யவும்.

> பான், ஆதார் எண்ணை பதிவிட்டு, 'Validate' கொடுக்கவும்.

> கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும், 'Continue'-ஐ கிளிக் செய்யுங்கள்.

> அங்கே கேட்கும் தகவல்களை உள்ளிட்டு 'Submit' கொடுக்கவும்.

> இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உள்ளிட்டு கொள்ளவும்.

> இதன் பிறகு, ஆதார் - பான் இணைப்பிற்கான கோரிக்கை வெற்றிகரமாக Submit ஆகி விடும்.

ஆதார் - பான் கார்டு இணைப்பு
ஆதார் - பான் கார்டு இணைப்பு
ஆதார் - பான் இணைப்பு சில மணிநேரங்கள் முதல் 7 வேலை நாள்களுக்கு ஆகிவிடும். இணைப்பு முடிந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள...

> மீண்டும் e-filing வலைதளம்.

> Quick Links > Link Aadhaar/View Status ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

> பான், ஆதார் எண்களை உள்ளிடவும்.

> 'View Link Aadhaar Status'-ஐ தேர்ந்தெடுத்தால், லிங்க் ஸ்டேட்டஸ் தெரிந்துவிடும்.

PF: ரூ.5 லட்சத்திற்கு Auto settlement, 75% பணம் எடுக்கலாம், கூடுதல் வட்டி - EPFO புது அப்டேட் லிஸ்ட்

சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி வலைதளம் மற்றும் அதன் ஆப்பான UMANG அப்டேட் செய்யப்பட்டது. இந்த அப்டேட் மூலம் என்னென்ன விஷயங்கள் எளிதாக்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்...> புதிய CITES திட... மேலும் பார்க்க

கரூர்: `நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக அரசு பணி வழங்கலாம்' - உயர் நீதிமன்றம்

கரூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழ்நதவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் விஜய் கருணை அடிப்படையிலான அரசு பணி நியமன ஆணைகளை வழங்கவிருக்கிறார். இந்நிலையில் கரூர் கூட்... மேலும் பார்க்க

`நடுநிலைப் பள்ளிகளில் 0% Dropout Rate; தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அபாரம்!' - UDISE அறிக்கை விவரம்

மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் (UDISE) புதிய அறிக்கையில், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் இருப்பு, உள்கட்டமைப்பு மற்றும்... மேலும் பார்க்க

சுயதொழில் தொடங்க ஆசையா? - தமிழ்நாடு அரசின் 4 அதிரடி தொழில் மேம்பாட்டுப் பயிற்சிகள் - முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள தனது வளாகத்தில், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்காக பல்வேறு குறுகிய கால தொழில் மேம்பாட்... மேலும் பார்க்க

தமிழ்நாடு மின்துறையில் நுழையும் AI: சென்னை ஐஐடி-யுடன் கைகோக்கும் மின்வாரியம்! - பலன் என்ன?

தமிழக மின்கட்டமைப்பை தரம் உயர்த்தி, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ... மேலும் பார்க்க

Nalam AI: தவெக அரசின் நலம் ஏஐ சாட்போட்; பயன்படுத்துவது எப்படி? - முழு விவரம்!

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட "நலம்AI" என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள்... மேலும் பார்க்க