செய்திகள் :

டெல்லி மாணாவர்கள் போராட்டம்: "இந்தியாவின் எதிர்காலத்திற்காக வாங்சுக் போராடுகிறார்" - பிரீத்தி ஜிந்தா

post image

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.

இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது.

இந்தப் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் ஆளும் பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி தாக்குதல் எனக் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறது.

cjp protest
cjp protest

பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியான நிலையில், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் பா.ஜ.க அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா,``சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் அமைப்புகளுடன் நமது அரசாங்கம் ஒரு அர்த்தமுள்ள பேச்சைத் தொடங்கும் என்றும், அதனால் அவருடைய உடல்நலம் மேலும் மோசமடையாது என்றும் நம்புகிறேன்!

சோனம், தயவுசெய்து உங்கள் உண்ணாநோன்பை முடியுங்கள். இந்தப் போராட்டத்தைப் போலவே உங்கள் ஆரோக்கியமும் முக்கியமானது. நீங்களும் மாணவர்களும் இந்தியாவின் எதிர்காலத்திற்காகவும் நமது இளைஞர்களுக்காகவும் போராடுகிறீர்கள். நமது கல்வி முறையை உயர்த்தவும் மேம்படுத்தவும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு மாணவருக்கும், சோனமிற்கும் எனது மனமார்ந்த மற்றும் உறுதியான ஆதரவு உண்டு. உங்கள் அனைவருக்கும் மேலும் வலிமை சேரட்டும். ஜெய் ஹிந்த்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

டெல்லி மாணவர் போராட்டம்: "தடியடி தேவையில்லை; அரவணைக்கும் கைகள்தாம் தேவை" - நடிகர் சோனு சூட்

நீட் தேர்வு முறைகேடு, கல்வியில் சீர்திருத்தம் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா உட்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போ... மேலும் பார்க்க

வயதான தோற்றத்தில், சோர்வாக சல்மான் கான்: `அவருக்கு என்ன ஆச்சு?' - இணையத்தில் ரசிகர்கள் வேதனை

பாலிவுட் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் சல்மான் கான் மும்பையில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டார். குடிசை புனரமைப்ப... மேலும் பார்க்க

Ramayana: "சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!" - சாய் பல்லவி

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் பிரத்தியேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நேற்றைய தினம் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில்... மேலும் பார்க்க

72nd National Awards: 'பாஜக பிரசார படமாக இருந்தால் தேசிய விருது வழங்கப்படுமா?' - வலுக்கும் கண்டனம்!

72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருடமும் பாஜகவுக்கு ஆதரவான அரசியல் பேசும் படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.கடந்த 2024ஆம் ஆண்டு இயக்குநர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பால... மேலும் பார்க்க

ஆமீர் கானின் திருமணத்திற்கு எதிர்ப்பு; லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்; பின்னணி என்ன?

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண்டாகச் சேர்ந்து வாழ்ந்து வந்த கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் கெளரி முஸ்லிம் மதம் கிடையா... மேலும் பார்க்க

Sonam Wangchuk: "'3 இடியட்ஸ்' ராஞ்சோ கதாபாத்திரம் சோனம் வாங்சுக்தானா?' - நடிகர் ஆமீர் கான் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகள், கல்விச் சீர்திருத்தம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா போன்றவற்றை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கல்வி சீர்திருத்தவாதியும், பொறியியலாளரும், சமூக ஆர்வலரும... மேலும் பார்க்க