செய்திகள் :

"முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்" - கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள்

post image

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக  2006 முதல் 2011 வரை இருந்து வந்தவர் ஜான் ஜோசப். சி.பி.எம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது வீட்டில் கடந்த 15-ம் தேதி மின் தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியத்திற்குப் புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று கலெக்டரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜோசப் வீட்டில் மின் இணைப்பைச் சரிசெய்தனர்.

இதுபற்றி ஜான் ஜோசப் கூறுகையில், "எனது வீட்டில் கடந்த 15-ம் தேதியிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுபற்றி கொல்லங்கோடு மின்சார வாரிய அலுவலகத்துக்கு நான் நேரில் சென்று அங்கிருக்கக்கூடிய புகார் புத்தகத்தில் புகாரைப் பதிவுசெய்தேன்.

மின்தடை
மின்தடை

அதுபற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதால், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மொபைல் ஆப்பில் புகார் செய்தேன், அதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியம் மின்னகம் சார்பாக புகார்கள் பெறுவதற்காக ஒரு வாட்ஸ் அப் நம்பர் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த எண்ணில் வாட்ஸ் அப் மூலம் புகார் செய்தேன். அதையும் கண்டுகொள்ளவில்லை. கொல்லங்கோடு மின்சார வாரிய இளநிலை பொறியாளரின் வாட்ஸ் அப் எண்ணில் தொடர்புகொண்டு மின்சாரம் இல்லாதது குறித்து தகவல் தெரிவித்தேன்.

'நோட்டட் சார்' என எனக்கு வாட்ஸ் அப்பில் ரிப்ளே கொடுத்தார். ஆனாலும், என்னுடைய வீட்டில் மின் இணைப்பை சரிசெய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜோசப்
முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜோசப்

ஐந்து நாட்களாக வீட்டில் மின்சாரம் இல்லாததால் 6-வது நாளான நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு அளித்தேன். பக்கத்து வீடுகளில் எல்லாம் மின்சாரம் இருந்தது. என் வீட்டுக்கு மின்சாரம் வரும் லைனில் ஏதோ பிரச்னை என்பதை ஏற்கனவே புகாரில் பதிவு செய்திருந்தேன்.

நான் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அதிகாரிகளும், ஊழியர்களும் உடனடியாக என் வீட்டுக்கு வந்து மின் இணைப்பைச் சரிசெய்தனர். வீட்டுக்கு மின் இணைப்பு வரும் சர்வீஸ் ஒயருக்கும், மின்கம்பத்தில் உள்ள லைனுக்கும் இடையே பாசிபோன்று உருவாகி இருந்ததே மின் சப்ளை வராமல் இருந்ததற்கு காரணம்.

அதைச் சரிசெய்து மீண்டும் மின் இணைப்பு கொடுத்துள்ளனர். நான் மின்சார வாரியம் மீது சில புகார்கள் அளித்ததை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் அலட்சியமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்த உடனே மின் இணைப்பைச் சரிசெய்துவிட்டனர்" என்றார்.

"டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது" - அமைச்சர் விக்னேஷ் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்... மேலும் பார்க்க

"16 வருச உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்" - வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெகிழ்ச்சி

வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தவெக நிர்வாகியான சிவாவை நியமித்து நியமன ஆணையையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.Sivaசிவா, தவெகவின் பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர். சென்னையிலேயே அதிகமாக பெரம்பூர... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்" - தவெக

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாக மாறியிருக்கிறது" - பா.ரஞ்சித்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

பெயர் மாறிய 'தாயுமானவர்' திட்டம்? 'நான் முதல்வன்', 'விடியல்' வரிசையில் தவெக அரசின் அடுத்த மாற்றம்?

திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தை தவெக அரசு 'திறன் தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்தது நினைவிருக்கலாம். அதேபோல மகளிர் இலவசமாகப் பயணம்... மேலும் பார்க்க