செய்திகள் :

வயதான தோற்றத்தில், சோர்வாக சல்மான் கான்: `அவருக்கு என்ன ஆச்சு?' - இணையத்தில் ரசிகர்கள் வேதனை

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் சல்மான் கான் மும்பையில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

குடிசை புனரமைப்பு ஆணையத்தில் தரவு மற்றும் ஐ.டி சர்வர் அறையை சல்மான் கான் திறந்து வைத்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் சல்மான் கானின் தோற்றம் அனைவரும் கவலைப்படும் விதத்தில் இருக்கிறது. அவரது தோற்றம் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பது போன்று இருந்தது.

சல்மான் கானின் உடல் அமைப்பை பார்த்த ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மிகவும் கவலை தெரிவித்துள்ளனர். பலர் சமூக ஊடகங்களில் கவலை மற்றும் அவரது உடல்நிலையில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒருவர் தனது பதிவில், `அவர் உடம்பு சரியில்லை. கடவுள் அவரை ஆசீர்வதிப்பார்" என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், "அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்". என்று ஒருவரும், என் ராஜாவுக்கு என்ன ஆயிற்று” என்று மற்றொருவரும் கேட்டுள்ளனர்.

மற்றொரு ரசிகர், சல்மான் கானுக்கு என்ன ஆயிற்று?? முதலில் அவரை பார்த்து அது அவர் இல்லை என்று நான் நினைத்தேன், அவர் தர்மேந்திராவைப் போல் வயதாகிவிட்டார்" என்று தெரிவித்துள்ளார். ஒருவர் "இதைப் பார்த்தால் உண்மையில் வலி ஏற்படுகிறது. அவர் கண்களில் எவ்வளவு சோர்வாகவும், உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்பதை நீங்கள் உண்மையில் பார்க்கலாம்.

ஒரு திரைப்படத்தில் சல்மான் கான் தனியாக 50 பேருடன் சண்டையிட முடியும். ஆனால் இப்போது சல்மானைப் பார்த்தால், ஒளி முற்றிலும் மறைந்து, அவரது உடல்நிலை அவருக்கு தெளிவாகத் தெரிகிறது. சல்மான் கானுக்கு என்ன ஆனது? அவருக்கு ஏதேனும் நோய் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
மற்றொருவர், "அவரது முகத்தைப் பாருங்கள், அவர் ஒரு தாத்தாவைப் போல இருக்கிறார், அவருக்கு சரியாக நடக்க முடியவில்லை.. உண்மையில் 80 வயது முதியவர் போல் இருக்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர். அவர்கள் தங்களது பதிவில், இந்தியத் திரைப்பட சூப்பர் ஸ்டார் பகிரங்கமாக வயதானதை காட்டிக்கொள்ள அளப்பரிய தைரியம் தேவை. ரஜினிகாந்த் அதைச் செய்தார். பாலிவுட்டில் கேமராக்கள் முன் தனது வயதை மனதார ஏற்றுக்கொள்ளத் துணிந்த சல்மான் கான் மிகவும் மரியாதைக்குரியவர்." என்று குறிப்பிட்டுள்ளனர். சல்மான் கானின் மாத்ருபூமி படம் இப்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தவிர நயன்தாராவுடன் புதிய படம் ஒன்றிலும் சல்மான் கான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ramayana: "சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!" - சாய் பல்லவி

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் பிரத்தியேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நேற்றைய தினம் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில்... மேலும் பார்க்க

72nd National Awards: 'பாஜக பிரசார படமாக இருந்தால் தேசிய விருது வழங்கப்படுமா?' - வலுக்கும் கண்டனம்!

72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருடமும் பாஜகவுக்கு ஆதரவான அரசியல் பேசும் படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.கடந்த 2024ஆம் ஆண்டு இயக்குநர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பால... மேலும் பார்க்க

ஆமீர் கானின் திருமணத்திற்கு எதிர்ப்பு; லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்; பின்னணி என்ன?

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண்டாகச் சேர்ந்து வாழ்ந்து வந்த கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் கெளரி முஸ்லிம் மதம் கிடையா... மேலும் பார்க்க

Sonam Wangchuk: "'3 இடியட்ஸ்' ராஞ்சோ கதாபாத்திரம் சோனம் வாங்சுக்தானா?' - நடிகர் ஆமீர் கான் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகள், கல்விச் சீர்திருத்தம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா போன்றவற்றை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கல்வி சீர்திருத்தவாதியும், பொறியியலாளரும், சமூக ஆர்வலரும... மேலும் பார்க்க

"நான் திருமணம் செய்த பெண்கள் மதம் மாறவில்லை" - பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு ஆமீர் கான் பதிலடி

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த கெளரி என்ற பெங்களூரு பெண்ணை குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் குறித்து மகாராஷ்... மேலும் பார்க்க

``அமீர் கானைக் கொல்பவருக்கு ரூ.5 கோடி பரிசு" - பகிரங்க மிரட்டல் விடுக்கும் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகுக் கலை நிபுணரான கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். மும்பையில் பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையான... மேலும் பார்க்க