செய்திகள் :

CAGR Calculator: உங்க லாபத்தைத் துல்லியமாகக் கணக்கிட உதவும் CAGR கால்குலேட்டர்; உங்க போன்ல இருக்கா?

post image

முதலீடு என்று வரும்போது எல்லோரும் பார்க்கும் முக்கியமான விஷயம் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கிறது. இந்த லாபம் எவ்வளவு கிடைத்திருக்கிறது என்பதை எப்போதும் மொத்தக் கணக்கில் பார்க்கக்கூடாது.

உதாரணமாக, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். இன்றைக்கு அது மூன்று லட்சம் ரூபாய் ஆகிவிட்டது என்று சொன்னால் நமக்கும் பெருமையாகத்தான் இருக்கும். நம்மையும் மற்றவர்கள் பெருமையாகத்தான் பார்ப்பார்கள்.

ஆனால், இப்படி நாம் கணக்கு பார்க்கவே கூடாது. ஒருவர் செய்த முதலீட்டுக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைத்திருக்கிறது, அந்த லாப வளர்ச்சி ஆண்டு தோறும் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்ப்பதுதான் சரியாகக் கணக்கிட்டுப் பார்ப்பதாகும்!

இப்படிக் கணக்கிட்டுப் பார்ப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பதுதான் சி.ஏ.ஜி.அர் CAGR - Compounding Annual Growth Rate முறை ஆகும்!

calculator
calculator

CAGR முறையில் கணக்கிட்டுப் பார்த்தால், உங்கள் முதலீடு ஆண்டு ஆண்டுதோறும் எந்த அளவுக்கு லாபம் கிடைத்திருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடியும். இந்த அடிப்படையில் கணக்கிட்டு ஆண்டுதோறுமான லாப வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிட்டால், முதலீட்டுக்கு எந்த அளவுக்கு லாபம் கிடைக்கிறது என்பதை நாம் சரியாக அளந்து பார்க்க முடியும் என்பதுடன், பல்வேறு முதலீடுகளுடன் கிடைக்கக்கூடிய லாப விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும் முடியும்!

சில உதாரணங்களைப் பார்ப்போம். முதலில் தங்கத்தை எடுத்துக்கொள்வோம்.

தங்கம் விலை ஒரு கிராம் கடந்த 2005-ஆம் ஆண்டில் ரூ.700-ஆக இருந்தது. இப்போது அது ரூ.13,500-ஆக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு கிராம் தங்கம் கடந்த 20 ஆண்டுகளில் தந்த லாபம் 15.98% ஆகும். இந்த லாபம் என்பது ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கவில்லை.

சில ஆண்டுகள் விலை உயராவிட்டாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் விலை அதிகம் உயர்ந்ததால்தான், 20 ஆண்டுகளில் 15.98% லாபம் கிடைத்திருக்கிறது. தங்கம் மூலம் கிடைத்த லாபம் 12 மடங்கு என்று பார்க்காமல், ஆண்டுதோறும் 15.98% லாபம் கிடைத்திருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும்.

தங்கம் | Gold Investment
தங்கம் | Gold Investment

அடுத்து, ரியல் எஸ்டேட் மூலம் கிடைக்கும் லாபத்தைப் பார்ப்போம். ரியல் எஸ்டேட் முதலீடு என்பது எல்லோரும் ஒரே அளவில் லாபம் கிடைக்காது. ஒவ்வொரு இடத்திலும் டிமாண்ட், சப்ளைக்கேற்ப விலை மாறுபடும் என்பதை நாம் மறக்கக்கூடாது.

அந்த வகையில், 2005-ஆம் ஆண்டில் ஒருவர் 20 லட்சம் ரூபாயை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருக்கிறார். இன்றைக்கு அது ஒரு கோடி ரூபாய் ஆகிவிட்டது எனில், கடந்த 20 ஆண்டுகளில் இந்த ரியல் எஸ்டேட் மூலம் கிடைத்த லாபம் 8.38% ஆகும். 20 லட்சம் ரூபாய் ஒரு கோடி ரூபாயாக ஆகிவிட்டது என்று பார்க்காமல், 8.38% அளவுக்கு லாபம் கிடைத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

இனி பங்குச் சந்தையை எடுத்துக்கொள்வோம். ஒரு முதலீட்டாளர் 2005-ம் ஆண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தார். இப்போது அது ரூ.20 லட்சம் ஆகிவிட்டது எனில், 10 மடங்கு லாபம் அடைந்திருப்பதாக நினைக்காமல், ஆண்டுதோறும் 12.20% லாபம் கண்டிருக்கிறோம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

கடைசியாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எடுத்துக்கொள்வோம். 2005-ஆம் ஆண்டில் ரூ.2 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார். இப்போது அது 25 லட்சம் ரூபாயாக அதிகரித்துவிட்டது எனில், அவருக்கு ஆண்டுதோறும் 13.46% லாபம் கிடைத்திருக்கிறது.

இப்படி சி.ஏ.ஜி.ஆர் கால்குலேட்டர் மூலம் முதலீட்டுக்கான வருமானத்தைக் கணக்கிடும்போது, ஆண்டுதோறும் கிடைத்த லாபத்தின் அளவை பர்சன்டேஜ் கணக்கில் மிகத் துல்லியமாக அளக்க முடிவதுடன், வேறொரு முதலீட்டுடன் பொருத்திப் பார்த்து, எதில் அதிகமான லாபம் கிடைத்திருக்கிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்!

முதலீடு
முதலீடு

இந்த சி.ஏ.ஜி.ஆர் கால்குலேட்டரைப் பயன்படுத்துவது மிக எளிது. கூகுள் ஸ்டோரில் CAGR Calculator என டைப் செய்தால், பல சி.ஏ.ஜி.ஆர் கால்குலேட்டர்கள் வரும். இதில் ஒன்றைத் தேர்வு செய்து ஆரம்பத்தில் நீங்கள் செய்த முதலீடு, இப்போது அந்த முதலீட்டின் மதிப்பு, எத்தனை ஆண்டுகளில் இந்த லாபம் கிடைத்திருக்கிறது என்கிற விவரங்களைத் தந்தால், ஆண்டுதோறும் உங்களுக்குக் கிடைக்கும் லாப விகிதம் தெளிவாகத் தெரிந்துவிடும்.

எந்தவொரு முதலீடாக இருந்தாலும் சரி, கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளில் ஆண்டுதோறும் வெறும் 6% லாபம் மட்டுமே கிடைத்துள்ளது எனில், அது நல்ல முதலீடே அல்ல. 8% மேலும் சுமார் 12% வரையில் ஒரு முதலீட்டின் மூலம் ஆண்டுதோறும் லாபம் கிடைத்திருந்தால் அதை நல்ல முதலீடு எனலாம்!

நீங்கள் செய்துள்ள முதலீட்டுக்கு ஆண்டுதோறும் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உடனே CAGR Calculator-யை டவுன்லோட் செய்யுங்கள்!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா?

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

தங்கத்தை Gold ETF & Gold ETF FoF மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் வாங்கினால் எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் தங்கத்திலும் வெள்ளியிலும் எளிதாக முதலீடு செய்யலாம்! தங்க, வெள்ளி நகைகளை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்கிற வகையில் பெரும் இழப்பு ஏற்படுகிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் மூலம... மேலும் பார்க்க

இன்டெக்ஸ் ஃபண்டுகளே போதும் என்று நினைத்து முதலீடு செய்வதால் அதிக லாபத்தை அடைய முடியுமா?

இந்தியாவில் நேரடியாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தை சார்ந்த மியூச்சு... மேலும் பார்க்க

ITR தாக்கலில் வருமான கணக்கை தவறாக காட்டினால்... தாமதமாக தாக்கல் செய்தால் என்ன அபராதம்?

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதை தவறும் போதும், தாக்கல் செய்யும் போது சில தவறுகளை செய்வதாலும் வருமான வரித் துறை நமக்கு அபராதங்களை விதிக்கும். அந்த அபராதங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்...பிரிவு ... மேலும் பார்க்க

இரண்டு சம்பளம் வாங்கும் கணவன் மனைவியா? ₹1 கோடி ஈஸியா சேர்க்கும் வழி இதுதான்!

மாதம் பிறந்தால் இரண்டு சம்பளம் அக்கவுண்ட்டில் விழுகிறது. ஐடி பார்க், ஏசி காற்று, வார இறுதியில் மால், காபி ஷாப் என வாழ்க்கை சொகுசாகத்தான் நகர்கிறது. 35 வயதைத் தாண்டிய இரட்டை வருமானத் தம்பதிகளுக்கு வெளி... மேலும் பார்க்க

40 வயதில் முதலீடு; 10 ஆண்டுகளில் ₹2.3 கோடி; வளைகுடா NRI-களுக்கான பிளான் என்ன?

வணக்கம். வளைகுடா நாட்டின் தகிக்கும் வெயிலையும், குடும்பத்தைப் பிரிந்திருக்கும் ஏக்கத்தையும் கடந்து நீங்கள் தினமும் உழைக்கிறீர்கள். நாற்பது வயதைக் கடந்த உங்களுக்கு, உழைப்பின் முக்கியத்துவம் மட்டுமல்ல, ... மேலும் பார்க்க

'சொந்த வீடு வேண்டாம்; வாடகை வீடே போதும்.!' - இன்றைய இளைஞர்கள் இப்படி யோசிக்க என்ன காரணம்?

புதிதாக வேலைக்குச் சேர்ந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே வங்கிக் கடனில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் அண்மைக் காலம் வரை இளைஞர்களின் சிந்தனைப் போக்காக இருந்தது. ஆனால், சமீப காலமாக 'சொந்த வ... மேலும் பார்க்க