செய்திகள் :

'மன்னித்துவிடுங்கள்; தர்மேந்திர பிரதானைக் காப்பாற்றுவதற்காக.!' - அபிஜித் தீப்கே வேதனை

post image

நேற்று டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர் காக்ரோச் ஜனதா கட்சி.

தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களது முக்கிய கோரிக்கை.

நாடாளுமன்றம் அருகே பேரணி சென்றதும், காவல் துறையினர் அவர்களைக் கலைந்துபோகச் சொல்லி அறிவுறுத்தினர். போராட்டக்காரர்கள் மறுத்ததால், அவர்கள் மீது தடியடி நடத்தியது போலீஸ்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே...
போராட்டம்
போராட்டம்

"எங்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும், குறிப்பாக ஆண் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் பிள்ளைகளிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் இன்னும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். டெல்லி காவல்துறையின் இந்த மனிதநேயமற்ற செயல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க நான் இன்னும் சிறந்த முறையில் செயல்பட்டிருக்கலாம்.

20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மரணத்திற்குப் பொறுப்பான தர்மேந்திர பிரதான் என்பவரைக் காப்பாற்றுவதற்காக, இன்னும் பல இளம் மாணவர்களின் ரத்தத்தைச் சிந்தக்கூட இந்த அரசு தயாராக இருந்தது.

ஒருவேளை நீங்கள் இதில் காயமடைந்து, இந்தப் பதிவைப் பார்க்கிறீர்கள் என்றால், தயவுசெய்து எனக்கு நேரடியாகச் செய்தி அனுப்புங்கள். நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்." என்றிருக்கிறார்.

பாடகர் அறிவு கைது: ``பாஜக என்ற பெயரைச் சொல்லக் கூட தயங்குகிறது இந்த அரசு" - கனிமொழி கண்டனம்

முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை தி... மேலும் பார்க்க

'அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்' - தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்; ஹை அலர்ட்டில் உளவுத்துறை!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் CJP கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் CJP கட்சியின் தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.Cockroach Protestநீட் வினாத்தாள் கசிவுக்க... மேலும் பார்க்க

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் து... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" - ராகுல் காந்தி கேள்வி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க