செய்திகள் :

சென்னை: `தனிமையில் இருக்கலாம்' - ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்

post image

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்) (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் பிரத்கேய செல்போன் செயலி மூலம் சுதாகர் என்பவர் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது இருவரும் தனிமையில் இருக்கலாம் என ராஜாவிடம் சுதாகர் கூறியிருக்கிறார். அதை நம்பிய ராஜாவும், சுதாகர் கூறிய தி.நகர் வீட்டுக்கு 19.07.2026-ம் தேதி மாலை தனியாக சென்றிருக்கிறார்.

அங்கு ராஜாவை சுதாகர் அன்பாக வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வீட்டுக்குள் மேலும் இருவர் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து ராஜாவை கத்தி முனையில் மிரட்டி ஜி பே மூலம் 15,000 ரூபாயை பறித்திருக்கிறார்கள். பின்னர் ஏ.டி.எம்மிற்குச் சென்று 20,000 ரூபாயையும் எடுத்திருக்கிறார்கள். இதையடுத்து இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி விட்டு அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

சதீஷ்

பணத்தை இழந்த ராஜா, மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குபதிவு செய்து ராஜாவின் ஜி பே-விலிருந்து எந்த வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்பட்ட விவரத்தை சேகரித்தனர். அதன்அடிப்படையில் தி.நகரைச் சேர்ந்த .சுதாகர் (20), அவரின் நண்பர்கள் சதீஷ் (20) அசோக் நகரைச் சேர்ந்த விக்னேஷ்வர் (27) ஆகிய மூன்று பேரை பிடித்தனர். அவர்களிடமிருந்து 21,000 ரூபாயையும் ஒரு செல்போன், கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சுதாகர் மீது ஏற்கெனவே ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சதீஷ், விக்னேஷ்வர் ஆகியோர் பைக் ஹோரூமில் வேலை செய்து வருகிறார்கள்.

ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசையைக் காட்டி பணம் பறித்த சம்பவம் தி.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகச் செயல்

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். தற்போது அதுபோ... மேலும் பார்க்க

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க

சேலம்: மூக்குத்தி, கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை - அச்சத்தில் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதி. மூத்த குடிமக்களான‌ இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு ... மேலும் பார்க்க

மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் - நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் வி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு - வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை!

திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்... மேலும் பார்க்க

கேரள மருத்துவ மாணவர் நிதின்ராஜ் தற்கொலை வழக்கு; 3 மாதங்களுக்குப்பின் HOD கைது - நடந்தது என்ன?

கேரள மாநிலம் கண்ணூர் அஞ்சரகண்டி தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டி.எஸ் மாணவர் நிதின் ராஜ் கடந்த 10.04.2026 அன்று கல்லூரி விடுதி கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ... மேலும் பார்க்க