செய்திகள் :

Kurinji: 'நீலக் கம்பளம் விரித்தார் போல்...' - பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்!

post image

நீலக்குறிஞ்சி மலர்கள் (Strobilanthes)‌ மலையெங்கும் பூத்துக்குலுங்கி நீல நிறத்தில் காட்சியளிப்பதாலேயே நீலகிரி என்று காரணப்பெயரை கொண்டிருக்கிறது நீலகிரி மலை.

குறிஞ்சி மலையான இங்கு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி முதல் 12, 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சியினங்கள் வரை பல்வேறு வகையான குறிஞ்சி பூக்களின் நிலமாக விளங்கி வருகிறது. வன வளத்தின் குறியீடாக ஆய்வாளர்கள் கருதப்படும் குறிஞ்சி மலர்கள் பெரிய அளவில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றன.

அதிகரித்து வரும் அந்நிய களைத் தாவரங்களின் ஆக்கிரமிப்பு, காடழிப்பு, கட்டுமானங்கள், சாலை விரிவாக்கம் முறையற்ற வளர்ச்சிப்‌ பணிகள் உள்ளிட்ட காரணங்களால் குறிஞ்சி புதர்களின் பரப்பளவு வேகமாகக் குறைந்து வருகின்றன.

இந்த நிலையில், கூடலூர் அருகில் உள்ள ஓவேலி பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தற்போது ஒட்டுமொத்தமாக குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.

குறிஞ்சி மலர்கள்
குறிஞ்சி மலர்கள்

கண்களுக்கு எட்டும் தொலைவு வரை நீலக் கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கும் நீலக் குறிஞ்சி மலர்களை நோக்கி தேனீக்கள் படையெடுத்து வருகின்றன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும் யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் இவை என்பது குறித்தும் வனத்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில், குறிப்பிட்ட பருவத்தில்தான் இந்தப் பகுதியில் பூத்துள்ளனவா பருவநிலை மாற்றத்தின் தாக்கம் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வுகளை முன்னெடுக்க உள்ளனர்.

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் அதிகளவில் அரிதான நீர் வாத்துகள் | Photo Album

கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வ... மேலும் பார்க்க

திருச்சி தீரன்நகர்: குவியும் குப்பை... பாழாகும் கோரையாறு - சுகாதார சீர்கேட்டுக்கு தீர்வு காணப்படுமா?

திருச்சி தீரன்நகர் பகுதியில் சுமார் 2,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதியை முக்கிய சாலையுடன் இணைக்கும் பாலம், அப்பகுதி மக்களின் அன்றாட போக்குவரத்துக்கும், அருகிலுள்ள தமிழ்நாடு அரசு பஸ் டிப்போ... மேலும் பார்க்க

ஜவ்வாது மலை: அதானி மின் திட்டம்; ஒன்றிய அரசு அனுமதி! - பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, அல்லேரியில் நீரேற்று மின் நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம்,... மேலும் பார்க்க

கோத்தகிரி: வீடுகளை நோக்கி படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள்; அச்சத்தில் மக்கள்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் கடந்த ஒருவாரமாக லட்சக்கணக்கான பறக்கும் பூச்சிகள் வீடுகளை நோக்கி படையெடுத்து வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இது குறித்த... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டுப்பன்றி கூட்டம்; வனத்துறை போராடி மீட்டது எப்படி?

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்று வட்டாரக் கிராமப் பகுதிகளுக்குள் நுழ... மேலும் பார்க்க

கோவை அருகே காட்டு யானை – மனித எதிர்கொள்ளல்... பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான மதுக்கரை, போளுவாம்பட்டி, ஆனைகட்டி பகுதிகளில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கந்தே... மேலும் பார்க்க