செய்திகள் :

பொள்ளாச்சி: கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டுப்பன்றி கூட்டம்; வனத்துறை போராடி மீட்டது எப்படி?

post image

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்று வட்டாரக் கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் பகுதிக்குள் நேற்று மாலை 4 குட்டிகள் உட்பட 10 காட்டுப்பன்றிகள் கொண்ட ஒரு கூட்டம் நுழைந்துள்ளது.

அப்பகுதியில் சுற்றித்திரிந்த அந்தக் காட்டுப்பன்றி கூட்டம், அப்பகுதியில் உள்ள சிவராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது.

காட்டுப்பன்றிகள் மீட்பு
காட்டுப்பன்றிகள் மீட்பு

அப்போது எதிர்பாராதவிதமாக 10 காட்டுப்பன்றிகளும் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளன. இதுகுறித்து தோட்டத்தில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கிணற்றுக்குள் வலை வீசி காட்டுப்பன்றிகளை மீட்க முயன்றனர்.

பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு 4 குட்டிகள் உட்பட 10 காட்டுப்பன்றிகளையும் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்தக் காட்டுப்பன்றிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு சென்று வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோத்தகிரி: வீடுகளை நோக்கி படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள்; அச்சத்தில் மக்கள்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் கடந்த ஒருவாரமாக லட்சக்கணக்கான பறக்கும் பூச்சிகள் வீடுகளை நோக்கி படையெடுத்து வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இது குறித்த... மேலும் பார்க்க

கோவை அருகே காட்டு யானை – மனித எதிர்கொள்ளல்... பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான மதுக்கரை, போளுவாம்பட்டி, ஆனைகட்டி பகுதிகளில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கந்தே... மேலும் பார்க்க

தாமிரபரணி ஆற்றங்கரையை பசுமைவனமாக்கிய லூர்துராஜா!

ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளை தெய்வமாகவும், தாயாகவும் பார்க்கின்ற இதே சமூகம்தான் அவற்றில் குப்பை, அழுக்குத் துணிகளை வீசி நீர்நிலைகளையும், ஆற்றின் கரைகளையும் நாசப்படுத்தி வருகிறது. எவற்றையும், எந்த வ... மேலும் பார்க்க

Birds: "இந்தப் பூமி வெறும் மனிதர்களுக்கானது மட்டுமல்ல..." - கண்ணாடிச் சுவர்களால் பலியாகும் பறவைகள்

மலைகளின் அரசியான நீலகிரி மலையில் இயற்கை எழிலைச் சிதைத்து கட்டப்பட்டு வரும் ஆடம்பர தங்கும் விடுதிகளால் ஏற்படும் சூழலியல் பாதுகாப்புகள் ஒருபுறம் என்றால் தங்கும் விடுதிக்குள் இருந்தவாறே இயற்கை எழிலைக் கண... மேலும் பார்க்க

Vulture: மின்கம்பியில் முடிந்த பாறு கழுகின் வனாந்திர பெருங்கனவு - வேதனையில் ஆய்வாளர்கள்!

இயற்கையின் பெருங்கொடைகளில் ஒன்றாக அறியப்படும் பாறு கழுகுகள் பறவையினம், கானகத்தின் தூய்மைக் காவலனாகப் பெரும் பங்காற்றி வருகின்றன. வனத்தில் செத்து மடியும் சடலங்களை உண்டு வாழும் இவை, இறந்த சடலங்களால் மற்... மேலும் பார்க்க