செய்திகள் :

கோத்தகிரி: வீடுகளை நோக்கி படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள்; அச்சத்தில் மக்கள்!

post image

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் கடந்த ஒருவாரமாக லட்சக்கணக்கான பறக்கும் பூச்சிகள் வீடுகளை நோக்கி படையெடுத்து வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள்," கடந்த சில நாள்களாக கடைகள் மற்றும் வீடுகளில் சிறிய அளவிலான கருப்பு ஈக்கள் போன்று லட்சக்கணக்கில் பூச்சிகள் வருகின்றன. இதனால் வீட்டில் உள்ள உணவுப்பொருள் அனைத்தும் வீணாகி வருகிறது. மின் விளக்குகளைச் சுற்றிலும் வட்டமிடும் இவை கண், காது, மூக்கு என புகுந்து விடுகின்றன. கடந்த சில வாரங்களாக குஞ்சப்பனை மற்றும் கொட்டகம்பை பகுதியில் இருந்து இவை அதிகளவில் வந்த நிலையில், தற்போது அரவேனு பகுதியிலும் வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது.

பூச்சிகள் படையெடுப்பு

பெரும்பாலான கடைகள் மற்றும் வீடுகளில் வெள்ளைத் தாள்களில் எண்ணெயைத் தடவி வைத்து இவற்றை கட்டுப்படுத்தி வருகிறோம். அப்படியிருந்தும் முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை. குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிக்கு வந்து முறையாக ஆய்வுகளை மேற்கொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்துவதுடன் திடீரென இவ்வளவு பூச்சிகள் வருவதற்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும்" என்றனர்.

நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம், " பூச்சியியல் நிபுணர்களை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்கிறோம். பூச்சியின் இனம் மற்றும் காரணம் குறித்து பின்னர் தெரிவிக்கிறோம்" என்றனர்.

பொள்ளாச்சி: கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டுப்பன்றி கூட்டம்; வனத்துறை போராடி மீட்டது எப்படி?

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்று வட்டாரக் கிராமப் பகுதிகளுக்குள் நுழ... மேலும் பார்க்க

கோவை அருகே காட்டு யானை – மனித எதிர்கொள்ளல்... பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான மதுக்கரை, போளுவாம்பட்டி, ஆனைகட்டி பகுதிகளில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கந்தே... மேலும் பார்க்க

தாமிரபரணி ஆற்றங்கரையை பசுமைவனமாக்கிய லூர்துராஜா!

ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளை தெய்வமாகவும், தாயாகவும் பார்க்கின்ற இதே சமூகம்தான் அவற்றில் குப்பை, அழுக்குத் துணிகளை வீசி நீர்நிலைகளையும், ஆற்றின் கரைகளையும் நாசப்படுத்தி வருகிறது. எவற்றையும், எந்த வ... மேலும் பார்க்க

Birds: "இந்தப் பூமி வெறும் மனிதர்களுக்கானது மட்டுமல்ல..." - கண்ணாடிச் சுவர்களால் பலியாகும் பறவைகள்

மலைகளின் அரசியான நீலகிரி மலையில் இயற்கை எழிலைச் சிதைத்து கட்டப்பட்டு வரும் ஆடம்பர தங்கும் விடுதிகளால் ஏற்படும் சூழலியல் பாதுகாப்புகள் ஒருபுறம் என்றால் தங்கும் விடுதிக்குள் இருந்தவாறே இயற்கை எழிலைக் கண... மேலும் பார்க்க

Vulture: மின்கம்பியில் முடிந்த பாறு கழுகின் வனாந்திர பெருங்கனவு - வேதனையில் ஆய்வாளர்கள்!

இயற்கையின் பெருங்கொடைகளில் ஒன்றாக அறியப்படும் பாறு கழுகுகள் பறவையினம், கானகத்தின் தூய்மைக் காவலனாகப் பெரும் பங்காற்றி வருகின்றன. வனத்தில் செத்து மடியும் சடலங்களை உண்டு வாழும் இவை, இறந்த சடலங்களால் மற்... மேலும் பார்க்க