செய்திகள் :

அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குளறுபடி: தலைவர் சுனேத்ரா பவார் பதவி விலக 15 நாள் கெடு!

post image

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் இந்த ஆண்டு தொடக்கத்தில் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார். அதோடு கட்சியின் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவார் கட்சிக்குள் மீண்டும் ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக சுனேத்ரா பவார் இப்பதவிகளை ஏற்றுக்கொண்டார். கட்சி தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாது கட்சியின் நிர்வாகிகளையும் மாற்றியமைத்தார்.

ஆரம்பத்தில் கட்சியின் தேசிய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் இருந்தார். தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிய கடிதத்தில் பிரபுல் பட்டேல் தேசிய செயற்குழு உறுப்பினர் என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தார். அது தற்போது சுனேத்ரா பவாருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபுல் பட்டேல்

அஜித் பவாரின் மகனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபை எம்.பியுமான பார்த் பவாரின் ஆதிக்கம் அதிகரித்து வருவதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சச்சிதானந்த் சிங் கட்சி தலைவர் சுனேத்ரா பவாருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், கட்சியில் பல விதிமுறை மீறல்கள் நடந்து இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். பிப்ரவரி 26 அன்று சுனேத்ரா பவார் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலும் கட்சியின் சட்டத்திற்கு எதிரானது என்றும், சுனேத்ராவின் பதவியை செல்லாது என அறிவிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சச்சிதானந்த் சிங் அனுப்பியுள்ள சட்டப்பூர்வ நோட்டீஸில், 15 நாள்களுக்குள் அண்மையில் மாற்றி அமைக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபுல் பட்டேலும், சுனேத்ரா பவாரின் தேர்வுக்கு முதன் முறையாக தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,''அஜித் பவாரின் வெற்றிடத்தை நிரப்புவது எளிதான காரியம் அல்ல. கட்சிக்குள் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்று குறிப்பிட்டார். சமீப காலமாக பிரபுல் பட்டேல் கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரியலூர்: `டாஸ்மாக் கடை மீது காட்டிய அக்கறையை மாணவர்கள் மீது காட்டவில்லை'- போலீஸ் மீது குற்றச்சாட்டு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் கடந்த 11ம் தேத... மேலும் பார்க்க

பழனி கோயில் சொத்துகள் முறைகேடாக பத்திரப் பதிவு; சார் பதிவாளர் சஸ்பெண்ட்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் அடிவார பகுதியில் கோயிலுக்கு சொந்தமாக 100 கோடி மதிப்பிலான1.40 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலம் 1888 ஆம் ஆண்டு தண்டாயுதபாணி சுவாமி திருமடத்திற்கு பர... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதிக்கு ஜாக்பாட்; முதல் கட்டமே ரூ.1,013 கோடி - முழு விவரம் தெரியுமா?

தமிழக முதல்வரும், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜய், தனது எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவின் போது தொகுதி குறித்து ஆய்வு செய்ததன் அடிப்படையில், பெரம்பூர் தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அ... மேலும் பார்க்க

America: ``ஹார்முஸைக் கடக்கும் கப்பல்களுக்கு 20% வரி வேண்டும்'' - அதிபர் ட்ரம்ப் பதிவும் சர்ச்சையும்

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலகின் மிக முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழ... மேலும் பார்க்க

``அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன" - மாணிக்கம் தாக்கூர்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் தொடங்கி, விருதுநகர், குடியாத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் காங்கிரஸ் கட்சியால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த விழாக்களின் ஒரு ... மேலும் பார்க்க