செய்திகள் :

Vishal: "இறுதிக்கட்ட பணிகளில் நடிகர் சங்கம் கட்டடம்..." - நடிகர் விஷாலின் அப்டேட் என்ன?

post image

நடிகர் விஷால் தற்போது இயக்குநராக 'மகுடம்' படத்தின் வேலைகளில் பரபரப்பாக இயங்கிவருகிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

இந்நிலையில், நேற்றைய தினம் நடிகர் சங்க அலுவலகத்தில் நடந்த மீட்டிங் பற்றியும், அங்கு சக நடிகர்களை அவர் சந்தித்தது பற்றியும், நடிகர் சங்கக் கட்டடம் திறப்பு பற்றியும் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "நடிகர் சங்க அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் எனது திரையுலகக் குடும்பத்தைச் சந்தித்தேன். எங்களது நீண்ட நாள் கனவான, அந்தப் பாரம்பர்யமிக்க 'தென்னிந்திய நடிகர் சங்க' (SIAA) கட்டடத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக ஒட்டுமொத்தக் குழுவும் முழு வீச்சில் தயாராக உள்ளது.

அவர்கள் அனைவரையும் சந்திக்கும் போதெல்லாம் எப்போதும் ஒரு நேர்மறையான, மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும்.

பல கட்டப் போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள், தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் பல தடைகளைக் கடந்து, நாம் நினைத்ததை நிஜமாக்கிக் காட்டுவதற்கு ஒரு மிகப்பெரிய கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.

ஆம், அந்தப் பெருமிதமான தருணத்தை நோக்கி நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். அது மிகத் தொலைவில் இல்லை. இறைவனின் அருள் நிலைக்கட்டும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு மாணவர்களிடையே விஷால் உரையாற்றினார். அப்போது அவர் கூடிய விரைவில் நடிகர் சங்கக் கட்டடம் திறக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

Brigida Saga: 'தங்கமே தங்கமே சந்தனம் வைக்குற தங்கமே!' - நடிகை பிரிகிடா நிச்சயதார்த்த கிளிக்ஸ்|Photos

``ரஜினி சாரும், ரஹ்மான் சாரும் சொன்ன அந்த வார்த்தைகள்..." - பிரிகிடா சகா மேலும் பார்க்க

Brigida Saga: 'காதல் கதைகள் திட்டமிடல்களுடன் தொடங்குவதில்லை' - நடிகை பிரிகிடாவுக்கு நிச்சயதார்த்தம்!

நடிகை பிரிகிடா சகாவுக்கும், நடிகர் - இயக்குநர் அனந்துக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அவருடைய நீண்ட நாள் காதலரான அனந்த்தை அறிம... மேலும் பார்க்க

`ஊரெல்லாம் இப்படி நிறைய சாமி இருக்கு!' அன்பே சிவம்: நிகழும் உரையாடல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 06

அன்பே சிவம்`சினி'ஸ்கோப் 06சமூக அக்கறையும், அரசியல் புரிதலும் இல்லாதவர்கள் என்று இப்போதைய ஜென்-சி தலைமுறையை பற்றி நம்மில் சிலருக்கு ஒரு குறை இருக்கிறது அல்லவா, அது போன்ற ஒரு புதிய தலைமுறை இளைஞனாக, இந்த... மேலும் பார்க்க

`` 'நல்லா இருக்கு... இன்னும் சிறப்பா செய்வீங்க'ன்னு சொன்னாங்க!'- எஸ்.ஜானகி நினைவுகள் பகிரும் சிற்பி

ஒரு குரல் மௌனமாகிவிட்டது. ஆனால், அந்த மௌனம்கூட இசையாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது.ரேடியோவின் மெல்லிய சத்தத்தில்... அதிகாலை கோயில் திருவிழா மேடைகளில்... பேருந்து ஜன்னலோரப் பயணங்களில்... காதலை முதன்முதலா... மேலும் பார்க்க

காளி வெங்கட்: 'திரும்ப ஸ்கூலுக்குள்ள போகும்போது வந்த பதற்றம் இருக்கே!' - கழுகுமலை ஸ்கூல் ரீயூனியன்

"சின்ன வயசுல எனக்கு ஸ்கூல்ல கிடைச்ச ஒவ்வொரு கைதட்டல்களும் இன்னைக்கு நான் சினிமாக்குள்ள வர்றதுக்கு ஒரு தொடக்கப் புள்ளி" என்று தன் பள்ளிகால நினைவுகளை ஹேப்பியாக பகிர தொடர்கிறார் நடிகர் காளி வெங்கட் . நேற... மேலும் பார்க்க

Train: ``விஜய் சேதுபதி சார் கொடுத்த ஆதரவே காரணம்.!" - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்த... மேலும் பார்க்க