செய்திகள் :

Brigida Saga: 'காதல் கதைகள் திட்டமிடல்களுடன் தொடங்குவதில்லை' - நடிகை பிரிகிடாவுக்கு நிச்சயதார்த்தம்!

post image

நடிகை பிரிகிடா சகாவுக்கும், நடிகர் - இயக்குநர் அனந்துக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அவருடைய நீண்ட நாள் காதலரான அனந்த்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.

அனந்த், 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் மூலம் நமக்கு நடிகராகப் பரிச்சயமானார்.

Brigida Saga - Ananth Engagement
Brigida Saga - Ananth Engagement

பிறகு, 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் இயக்குநராகவும் அறிமுகமானார். இந்நிலையில் நேற்றைய தினம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது.

இது குறித்து நடிகை பிரிகிடா சகா, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "சில நேரங்களில், மிகச்சிறந்த காதல் கதைகள் பெரிய திட்டமிடல்களுடன் தொடங்குவதில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் மனதாரத் தேர்ந்தெடுக்கும் இருவரிடமிருந்தே அவை தொடங்குகின்றன.

இன்று, எங்களது குடும்பங்களின் ஆசியுடன், எங்களை ஒன்றிணைத்த காதலையும் போற்றும் வகையில், எங்களது இரு குடும்ப வழக்கத்தின்படி எங்கள் நிச்சயதார்த்தத்தைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.

எங்கள் பயணத்தை இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்களது வாழ்த்துகளைப் பார்த்தோம். உங்களது அன்பை உணர்ந்தோம்.

அதற்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். இங்கிருந்துதான் எங்கள் 'என்றென்றும்' தொடங்குகிறது" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

பிரிகிடா சகாவுக்கும், அனந்துக்கும் தமிழ் திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Brigida Saga: 'தங்கமே தங்கமே சந்தனம் வைக்குற தங்கமே!' - நடிகை பிரிகிடா நிச்சயதார்த்த கிளிக்ஸ்|Photos

``ரஜினி சாரும், ரஹ்மான் சாரும் சொன்ன அந்த வார்த்தைகள்..." - பிரிகிடா சகா மேலும் பார்க்க

Vishal: "இறுதிக்கட்ட பணிகளில் நடிகர் சங்கம் கட்டடம்..." - நடிகர் விஷாலின் அப்டேட் என்ன?

நடிகர் விஷால் தற்போது இயக்குநராக 'மகுடம்' படத்தின் வேலைகளில் பரபரப்பாக இயங்கிவருகிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால்இந்நிலையில், நேற்றைய தினம் நடிகர் ... மேலும் பார்க்க

`ஊரெல்லாம் இப்படி நிறைய சாமி இருக்கு!' அன்பே சிவம்: நிகழும் உரையாடல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 06

அன்பே சிவம்`சினி'ஸ்கோப் 06சமூக அக்கறையும், அரசியல் புரிதலும் இல்லாதவர்கள் என்று இப்போதைய ஜென்-சி தலைமுறையை பற்றி நம்மில் சிலருக்கு ஒரு குறை இருக்கிறது அல்லவா, அது போன்ற ஒரு புதிய தலைமுறை இளைஞனாக, இந்த... மேலும் பார்க்க

`` 'நல்லா இருக்கு... இன்னும் சிறப்பா செய்வீங்க'ன்னு சொன்னாங்க!'- எஸ்.ஜானகி நினைவுகள் பகிரும் சிற்பி

ஒரு குரல் மௌனமாகிவிட்டது. ஆனால், அந்த மௌனம்கூட இசையாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது.ரேடியோவின் மெல்லிய சத்தத்தில்... அதிகாலை கோயில் திருவிழா மேடைகளில்... பேருந்து ஜன்னலோரப் பயணங்களில்... காதலை முதன்முதலா... மேலும் பார்க்க

காளி வெங்கட்: 'திரும்ப ஸ்கூலுக்குள்ள போகும்போது வந்த பதற்றம் இருக்கே!' - கழுகுமலை ஸ்கூல் ரீயூனியன்

"சின்ன வயசுல எனக்கு ஸ்கூல்ல கிடைச்ச ஒவ்வொரு கைதட்டல்களும் இன்னைக்கு நான் சினிமாக்குள்ள வர்றதுக்கு ஒரு தொடக்கப் புள்ளி" என்று தன் பள்ளிகால நினைவுகளை ஹேப்பியாக பகிர தொடர்கிறார் நடிகர் காளி வெங்கட் . நேற... மேலும் பார்க்க

Train: ``விஜய் சேதுபதி சார் கொடுத்த ஆதரவே காரணம்.!" - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்த... மேலும் பார்க்க