செய்திகள் :

``உலக அழகிகளை உருவாக்கியுள்ள இந்தியா, ஏன் உலகக் கவிகளை உருவாக்கவில்லை?" - வைரமுத்து கேள்வி

post image

டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் கரண்சிங், கவிஞர் வைரமுத்துவுக்கு ஞான பீடம் விருதை வழங்கி கவுரவித்தார்.

ஞானபீடம் விருது பெறும் 60-வது இலக்கியவாதியான வைரமுத்து, விழாமேடையில் பேசியபோது, ``சாகித்ய அகாடமி விருது, தேசிய விருதுகள், மாநில விருதுகள், பத்மபூஷன், பத்மஸ்ரீ எனப் பல விருதுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் இந்த ஞானபீடம் விருது பெறும் பொழுது அதிக மகிழ்ச்சி கொள்கிறேன்.

எனக்கு கிடைத்த இந்த ஞானபீட விருதை தமிழ் சமூகத்துக்குப் பகிர்ந்து கொடுக்கிறேன். காகிதம் மற்றும் வாசகர்கள் இவர்கள்தான் ஓர் எழுத்தாளனுக்கு மிக முக்கியம். ஆனால் இவை இரண்டும் குறைந்து கொண்டே வருகின்றன. இந்தியாவில் இலக்கியத்திற்கான தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்” என்று அவர் கூரினார்.

வைரமுத்து
வைரமுத்து

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், ``24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்துள்ள இந்த ஞானபீட விருது ஒவ்வொரு தமிழனுக்கும் காணிக்கையாக்கப்படுகிறது. இதனைத் தமிழர்கள் தங்களின் வீட்டு விருதாகக் கருதி கொண்டாட வேண்டும்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த விருதின் பெருமையையும், தமிழின் அருமையையும் அடுத்த தலைமுறைக்குப் பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

ஞானபீட விருதுகளில் அதிகபட்சமாக இந்தி மொழி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இதுவரை மூன்று பேருக்கு மட்டுமே இந்த விருது கிடைத்துள்ளது. பிற மொழிகளைவிட தமிழ் குறைவாக விருது பெற்றுள்ளது என்பது மொழியின் பலவீனமல்ல. இதில் தமிழ்ப் படைப்புகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்ற கூற்றில் ஒரு பகுதி உண்மை இருந்தாலும், நாம் நம்மைச் சரியாகப் வெளிப்படுத்தவில்லை என்ற உண்மையும் இதில் அடங்கியுள்ளது. இன்னும் 10, 15 ஆண்டுகளில் தமிழில் ஞானபீடம் பெறக்கூடிய இளம் படைப்பாளிகள் பெருகுவார்கள்.

வைரமுத்து
வைரமுத்து

ரவீந்திரநாத் தாகூரின் 'கீதாஞ்சலி' ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகே அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. தாகூருக்குப் பிறகு கடந்த 113 ஆண்டுகளில் இந்தியா பல உலக அழகிகளை உருவாக்கியுள்ளதே தவிர, ஏன் உலகக் கவிகளை உருவாக்கவில்லை? விருது என்று இருந்தால் அதற்கு எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்யும். எதிர்ப்பு இல்லாவிட்டால் அது விருதே இல்லை. அந்த எதிர்ப்புகள் சரியா தவறா என்பதைப் படைப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும்" என்றார்.

`லில்லி எனும் புதையலில் கிடைத்த கில்லி' | உளவன் 06

உளவன் - பாகம் 06`லில்லி எனும் புதையலில் கிடைத்த கில்லி'“ஏஜெண்ட் பெயர் என்ன?”ஜெர்மனியிலிருந்து உடுருவும் அப்வேர் உளவாளியை கொத்தித் தூக்கக் காத்திருந்தனர். MI5-க்கு கிடைக்கும் இன்னொரு துருப்புச் சீட்டு.... மேலும் பார்க்க

`கரிசல் இலக்கியத்தின் முகவரிகளில் ஒருவர்' - சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமையும், சாகித்திய அகாதமி விருது பெற்ற மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான பூமணி (79), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார். கரிசல... மேலும் பார்க்க

அல்காரிதம்களின் காலத்தில் ஜனநாயகம்: உண்மையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வல்லரசாவதற்கான 'மக்கள்தொகை வாய்ப்பு' - நமக்கிருப்பது இன்னும் எவ்வளவு காலம்?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

புகலிடமாகக் கிடந்த கீழ்ப்பாக்கத்தை நவீன சிகிச்சை மையமாக்கிய அற்புதம்! - இந்திய மனநல மறுவாழ்வின் தாய்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

‘பூனை’யால் அவமானப்பட்ட பிரிட்டன் | உளவன் 06

‘பூனை’யால் அவமானப்பட்ட பிரிட்டன்உளவன் 061942-ம் ஆண்டு. பிப்ரவரி 12-ம் தேதி. நண்பகல். டோவர் ஜலசந்தி - ஆங்கிலக் கால்வாய், பிரிட்டன்.திடீரென பீரங்கி சுடும் சப்தம். ஜெர்மன் கப்பல் படை அதிர்ந்தது. குண்டு எ... மேலும் பார்க்க