செய்திகள் :

ஜன நாயகன்: "அதை எதிர்த்து சண்டைப்போடுவதற்கான நேரம் எங்களிடம் இல்லை" - தடைகள் குறித்து அ. வினோத்

post image

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"நிறைய தடைகள் இருந்தன. பிரச்னைகள் இருந்தன. இவற்றையெல்லாம் தாண்டி இந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகிறது.

ஜனநாயகன்
ஜனநாயகன்

படத்துக்கு எல்லோரும் ஆதரவு கொடுங்கள். இந்தப் படத்திற்கு அநீதி நடந்திருக்கிறதா? அல்லது நல்லது நடந்திருக்கிறதா? என்று மக்களுக்குத் தெரியும். அதற்கான நீதியாக மக்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

'A' சான்றிதழ் கொடுத்தது எங்களுக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை எதிர்த்து சண்டைப்போடுவதற்கான நேரம் எங்களிடம் உண்மையிலேயே இல்லை.

இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதுதான் எங்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.

மக்கள் நினைத்திருந்தால் திரையரங்கிற்கு வராமல் கூட இருந்திருக்கலாம். அதற்கான வாய்ப்பு (படம் லீக்) அவர்களுக்கு இருந்தது.

ஆனால் மக்கள் அதையும் மீறி திரையரங்கில் படத்தைப் பார்க்க நினைக்கிறார்கள். அவர்களின் நேர்மைக்கு, விஜய் சார் மீது வைத்திருக்கும் மரியாதைக்குப் பெரிய சல்யூட்தான் கொடுக்க வேண்டும்.

காலத்திற்கும் நன்றிக்கடன்பட்ட ஒரு விஷயமாகத்தான் இதைப் பார்க்கிறேன். நிறைய இயக்குநர்கள் விஜய் சாருக்கு கதை சொன்னார்கள்.

எச். வினோத்
எச். வினோத்

அவருடைய கடைசிப் படம் எப்படி இருக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு ஆசை இருந்திருக்கும். எல்லாரும் சொன்ன கதையை விட இன்னொரு கதை பிடித்திருக்கிறது.

இந்த வாய்ப்பை அவர் யாருக்கு வேண்டுமானால் கொடுத்திருக்கலாம். அவர் என்னைக் கேட்கும்போது அதற்கு 'நோ' சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை.

விஜய் சாருடன் படம் பண்ண வாய்ப்பு கிடைப்பது என்பது பெரிய விஷயம். அதை நான் பயன்படுத்திக்கொண்டேன்" என்று பேசியிருக்கிறார்.

National Awards: "விருது அறிவித்த பிறகே Sound Designer-க்குத் தெரிந்தது!" - 'ப்ளூ' இயக்குநர் பேட்டி

2024-ம் ஆண்டுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்ததில் இந்த முறை 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதில் 'ப்ளூ' என்ற குறும்படத்தின் ஒலி வடிவமைப்புக்கு (டி.எஸ்.ஹரிஹரசுதன்) கிடைத... மேலும் பார்க்க

Kajal Aggarwal: ``தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் இதைக் கத்துக்கணும்" - நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். பாலிவுட்டில் 'சிங்கம்', 'தோ லஃப்சோன் கி கஹானி' போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பை... மேலும் பார்க்க

''ஜன நாயகன்' லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?' - அ. வினோத் அளித்த பதில் என்ன?

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்கள... மேலும் பார்க்க

CJP: "இது அரசியல் இல்லை... மனிதநேயம்!" - டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு வரலட்சுமி ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க

பிதாமகன் : அன்பின் ஈரம்! | ஆதி தாமிரா | சினி'ஸ்கோப் 08

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!சினி'ஸ்கோப் 08பிதாமகன் : அன்பின் ஈரம்!”பெத்தவ புகையோடிப் போச்சேவளத்தவன் புகைகூட... மேலும் பார்க்க

National Awards: "தனுஷூக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது!" - கஸ்தூரி ராஜா பேசியது என்ன?

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்... மேலும் பார்க்க