செய்திகள் :

National Awards: "தனுஷூக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது!" - கஸ்தூரி ராஜா பேசியது என்ன?

post image

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

Raayan - 72nd National Awards
Raayan - 72nd National Awards

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தேசிய விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய பயணம், முயற்சி, சிந்தனை என எல்லாமே சரியாக இருக்கும்போது, அதற்கான அங்கீகாரம் தானாகவே தேடி வந்துவிடுகிறது.

இதில் நாம் பரிந்துரை செய்யவோ அல்லது இன்ப்ளூயன்ஸ் செய்யவோ எதுவும் இல்லை இது முழுக்க முழுக்க அவருடைய உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

ஜூரிக்கள் சேர்ந்து எடுக்கும் முடிவுதான் இந்த விருது. என் மகனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பது ஒரு தகப்பனாக எனக்கு மிகுந்த பெருமையளிக்கிறது.

அவர் தொடர்ந்து இதேபோல் பல விருதுகளை வெல்வார் என்று நம்புகிறேன். நாங்கள் அவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த நற்செய்தி வந்தது. வீட்டில் கேக் வெட்டிக் கொண்டாடினோம். ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் இது மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது." என்றார்.

 தனுஷ், செல்வராகவன், கஸ்தூரி ராஜா
தனுஷ், செல்வராகவன், கஸ்தூரி ராஜா

மேலும் தொடர்ந்த அவர், "தனுஷை விடப் பெரிய நடிகர்கள் எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இன்ப்ளூயன்ஸ் செய்து விருதை வாங்கிவிட முடியுமா என்ன?

இது அரசின் முடிவே தவிர வேறு எதுவும் இல்லை. நான்கு பேரிடம் பேசி, 'இந்த விருதை எனக்குக் கொடுங்கள்' என விருதுகளுக்கு தனுஷ் ஏங்குபவர் கிடையாது. அந்த அளவுக்குத் தனுஷுக்குப் புத்திசாலித்தனம் கிடையாது. இதற்கு முன்பே 'ஆடுகளம்', 'அசுரன்' படங்களுக்காக அவர் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். விருது அறிவிக்கப்படும்போது அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்கிறோம், அவ்வளவே" என்று கூறினார்.

சமீபத்தில் தனுஷின் ரசிகர் மன்ற கொடி அறிமுகப்படுத்தப்பட்டு, சமூக வலைதளங்களில் அது அரசியல் வருகைக்கான அறிகுறியா என்ற விவாதம் தீவிரமாகப் பேசப்பட்டது.

இதுகுறித்து அவர், "அவர் கட்சி ஆரம்பிக்கப் போகிறாரா இல்லையா என்பது பற்றியெல்லாம் நாங்கள் அவரிடம் கேட்பதில்லை. நாங்கள் சந்தித்துக் கொள்ளும்போது படம், சம்பளம், அரசியல் அல்லது இந்த மாதிரி கொடி விஷயங்களைப் பற்றிப் பேசுவதில்லை." என்றார்.

பிதாமகன் : அன்பின் ஈரம்! | ஆதி தாமிரா | சினி'ஸ்கோப் 08

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!சினி'ஸ்கோப் 08பிதாமகன் : அன்பின் ஈரம்!”பெத்தவ புகையோடிப் போச்சேவளத்தவன் புகைகூட... மேலும் பார்க்க

Jana Nayagan: "'ஜன நாயகன்' லீக் ஆனபோது விஜய் சார் என்கிட்ட சொன்ன விஷயம்..." - அ. வினோத்

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறா... மேலும் பார்க்க

Jana Nayagan: "ஜனநாயகனுக்கு 'ஏ' சான்றிதழ் வாங்கியதற்கான காரணம் இதான்" - அ. வினோத் பேட்டி

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறா... மேலும் பார்க்க

Jana Nayagan Exclusive: "நிறைய பேர் 'ஜன நாயகன்' படத்தைப் பார்த்துவிட்டார்கள்; ஆனால்..." - அ. வினோத்

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கி... மேலும் பார்க்க

"100 கோடி கொடுத்தாலும் இனி சோசியல் மீடியாவுக்கு வரமாட்டேன்; ஏன்னா..." - ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் சமீபத்தில் 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன்... மேலும் பார்க்க

திரைகக்தை மன்னன் கே.பாக்யராஜ் vs நம்ம கே.பாக்யராஜ்! - திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் முடிவுகள்

மறைந்த நடிகர் பாக்யராஜ் தலைவராக இருந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது.2026 -29 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் பெப்சி தலைவர் ஆர்.... மேலும் பார்க்க