செய்திகள் :

Jana Nayagan: "'ஜன நாயகன்' லீக் ஆனபோது விஜய் சார் என்கிட்ட சொன்ன விஷயம்..." - அ. வினோத்

post image

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Jana Nayagan - Vijay
Jana Nayagan - Vijay

படத்தின் ரிலீஸையொட்டி நம் 'சினிமா விகடன்' யூடியூப் சேனலுக்கு அ. வினோத் பேட்டியளித்திருக்கிறார். இந்தப் பேட்டியில் 'ஜன நாயகன்' தொடர்பாகப் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார்.

இந்தப் பேட்டியில், "அஜித் சார் எப்போதும் அவருடைய இயக்குநர்களிடம், 'அடுத்து விஜய் சார், ரஜினி சாருக்கு படம் பண்ணுங்கள்' என்றுதான் சொல்வார். அஜித் சார் எப்போதும் அவருடைய இயக்குநர்களை குடும்பத்தில் ஒருவராகத்தான் பார்ப்பார்.

சமீபத்தில் நான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருந்தேன். அதற்கும் அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் எங்களுக்கு மெண்டாராகவும் இருக்கிறார். அஜித் சார், விஜய் சார் அவ்வளவு உயரத்தில் இருப்பதற்கு இதுதான் காரணம்.

Jana Nayagan - H Vinoth
Jana Nayagan - H Vinoth

படத்தின் ரிலீஸ் தாமதமாகி, படம் லீக் ஆன பிறகு விஜய் சார் என்னை அழைத்து 'கவலைப்பட வேண்டாம்; இது மாதிரிதான் நடக்கும்' என ஆறுதல் தெரிவித்தார். படத்தில் நிறைய அரசியல் சார்ந்த வசனங்கள் இருக்கின்றன.

அந்த வசனங்கள் மிகவும் முக்கியமானவை என்பேன். 'ஜன நாயகன்' இப்போது மட்டுமல்லாமல், இன்னும் பல வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் இருக்கும் விஷயங்களுக்காகப் பேசப்படும்" என்றார்.

National Awards: "தனுஷூக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது!" - கஸ்தூரி ராஜா பேசியது என்ன?

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்... மேலும் பார்க்க

Jana Nayagan: "ஜனநாயகனுக்கு 'ஏ' சான்றிதழ் வாங்கியதற்கான காரணம் இதான்" - அ. வினோத் பேட்டி

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறா... மேலும் பார்க்க

Jana Nayagan Exclusive: "நிறைய பேர் 'ஜன நாயகன்' படத்தைப் பார்த்துவிட்டார்கள்; ஆனால்..." - அ. வினோத்

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கி... மேலும் பார்க்க

"100 கோடி கொடுத்தாலும் இனி சோசியல் மீடியாவுக்கு வரமாட்டேன்; ஏன்னா..." - ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் சமீபத்தில் 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன்... மேலும் பார்க்க

திரைகக்தை மன்னன் கே.பாக்யராஜ் vs நம்ம கே.பாக்யராஜ்! - திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் முடிவுகள்

மறைந்த நடிகர் பாக்யராஜ் தலைவராக இருந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது.2026 -29 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் பெப்சி தலைவர் ஆர்.... மேலும் பார்க்க

"ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தப்போ அதை நினைச்சு விலகியிருந்தால்..." - தேசிய விருது பற்றி சாச்சனா பேட்டி

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் பிரிவில் அனல் அரசுக்கும் ம... மேலும் பார்க்க