செய்திகள் :

நட்டா உடன் CJP சந்திப்பு; அமித் ஷாவை சந்தித்த தர்மேந்திர பிரதான்! நடந்தது என்ன?

post image

போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, காக்ரோச் ஜனதா கட்சி நேற்று (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர்.

நேற்று தான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வேறு தொடங்கியது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே காக்ரோச் ஜனதா கட்சியின் பேரணி, நாடாளுமன்றத்திற்குள்ளே எதிர்க்கட்சிகளின் அமளி என நேற்று மத்திய அரசிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா
cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா

இருதரப்பின் கோரிக்கையுமே ஒன்று தான் - நீட் உள்ளிட்ட தேர்வுகளின் முறைகேடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்... மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

காக்ரோச் ஜனதா கட்சியின் பேரணியை லத்தி சார்ஜ் மூலமும், எதிர்க்கட்சிகளின் அமளியை சபை ஒத்திவைப்பு மூலமும் எதிர்கொண்டது மத்திய அரசு.

மேலும், காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்த இருவர் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தங்களது கோரிக்கையை கொடுத்தனர். போராட்டம் தொடங்கியதில் இருந்து மத்திய அரசு, போராட்டத் தரப்பு இருவருக்கும் இடையே நடந்த முதல் பேச்சுவார்த்தை இது தான்.

முக்கியமாக, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - தர்மேந்திர பிரதான் சந்திப்பு நடந்துள்ளது.

கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் நீடித்த இந்தச் சந்திப்பு எதற்காக நடந்தது... சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை.

தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெ என்கிற கோரிக்கை வலுத்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது கவனம் பெறுகிறது.

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் து... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" - ராகுல் காந்தி கேள்வி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சக... மேலும் பார்க்க

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' - பெ.சண்முகம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழ... மேலும் பார்க்க