செய்திகள் :

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' - பெ.சண்முகம்

post image

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "பழநி கோயில் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருக்கிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

பழநி கோயில் நில மோசடி என்பதில் மேலிருந்து கீழ் வரை பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

மோசடியில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய முக்கிய பிரமுகராக இருந்தாலும் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி என்றே சொல்லலாம்.

சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெற வேண்டும்.

`இந்த அரசுக்கு நேரடியாக இதில் சம்பந்தம் இருக்கிறது. அமைச்சர்கள் அதில் 31 பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்' என்பது போன்று வெளியாகும் கருத்துகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

அந்த மாதிரியான எந்த விவரங்களும் வரவில்லை. மாறாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தை ஏமாற்றி, தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை கொண்டு வந்து பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள்.

அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதுதான் இப்போது வரை வந்துள்ள விவரம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

பெயர் மாறிய 'தாயுமானவர்' திட்டம்? 'நான் முதல்வன்', 'விடியல்' வரிசையில் தவெக அரசின் அடுத்த மாற்றம்?

திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தை தவெக அரசு 'திறன் தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்தது நினைவிருக்கலாம். அதேபோல மகளிர் இலவசமாகப் பயணம்... மேலும் பார்க்க

பாடகர் அறிவு கைது: ``பாஜக என்ற பெயரைச் சொல்லக் கூட தயங்குகிறது இந்த அரசு" - கனிமொழி கண்டனம்

முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை தி... மேலும் பார்க்க

'அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்' - தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்; ஹை அலர்ட்டில் உளவுத்துறை!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் CJP கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் CJP கட்சியின் தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.Cockroach Protestநீட் வினாத்தாள் கசிவுக்க... மேலும் பார்க்க

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் து... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" - ராகுல் காந்தி கேள்வி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க