செய்திகள் :

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

post image

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது...

"கடந்த 2026 ஜூலை 19 அன்று மாலையில், ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 'எம்.வி கோல்டன் லியோ' என்ற சரக்குக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தச் சம்பவம் நடந்த போது, கப்பலில் 5 இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 மாலுமிகள் இருந்தனர்.

அறிக்கை
அறிக்கை

கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்தத் தாக்குதலில் துரதிர்ஷ்டவசமாக 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு இந்தியர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உக்ரைனில் உள்ள நமது இந்தியத் தூதரகம் இந்தச் சூழலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிடத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்த இந்தியர் விரைவில் முழுமையாகக் குணமடையப் பிரார்த்திக்கிறோம்.

இந்தியா இதுபோன்ற தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. வணிகக் கப்பல்களைக் குறிவைப்பது, அப்பாவி மாலுமிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மற்றும் வர்த்தகச் சுதந்திரத்தைத் தடுப்பது ஆகியவை கடுமையான கண்டனத்திற்குரியவை என்றும், இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்துகிறது".

இந்தியா கண்டன அறிக்கையில் ரஷ்யா என்கிற பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், இந்த அறிக்கை காட்டமாகவே உள்ளது.

மோடி - புதின்
மோடி - புதின்

பல ஆண்டுகளாக, இந்தியா, ரஷ்யா இடையே நல்ல நட்பு நீடித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல் இந்த உறவில் சிறு விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

2022-ம் ஆண்டிலிருந்து ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வந்தாலும், இந்தியாவை சேர்ந்த எந்த மாலுமிகளும் இதுவரை பாதிப்பிற்குண்டானது இல்லை.

எம்.வி கோல்டன் லியோ தாக்குதலில் நான்கு இந்தியர்கள் இறந்ததே முதல்முறை.

இதையடுத்து இந்திய அரசு இந்தியாவுக்கான ரஷ்யத் தூதரகப் பிரதிநிதியை அழைத்து தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது என்று தகவல்கள் கூறப்படுகின்றன.

"முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்" - கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக 2006 முதல் 2011 வரை இருந்து வந்தவர் ஜான்ஜோசப். சி.பி.எம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவ... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாக மாறியிருக்கிறது" - பா.ரஞ்சித்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

பெயர் மாறிய 'தாயுமானவர்' திட்டம்? 'நான் முதல்வன்', 'விடியல்' வரிசையில் தவெக அரசின் அடுத்த மாற்றம்?

திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தை தவெக அரசு 'திறன் தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்தது நினைவிருக்கலாம். அதேபோல மகளிர் இலவசமாகப் பயணம்... மேலும் பார்க்க

பாடகர் அறிவு கைது: ``பாஜக என்ற பெயரைச் சொல்லக் கூட தயங்குகிறது இந்த அரசு" - கனிமொழி கண்டனம்

முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை தி... மேலும் பார்க்க

'அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்' - தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்; ஹை அலர்ட்டில் உளவுத்துறை!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் CJP கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் CJP கட்சியின் தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.Cockroach Protestநீட் வினாத்தாள் கசிவுக்க... மேலும் பார்க்க