செய்திகள் :

பெண் ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரிக்கு டார்ச்சர் - சக ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரி மீது வழக்கு!

post image

பயிற்சி பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக ஐ.பி.எஸ் அதிகாரி உதயகிருஷ்ணா ரெட்டி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எஸ். அதிகாரி

யுபிஎஸ்சி தேர்வெழுதி தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ் தகுதி பெறுபவர்களுக்கு தெலுங்கானா மாநிலம் ஹைதாராபாத்திலுள்ள தேசிய காவல் அகடாமியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு பயிற்சி பெற்று வரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், அதே அகாடமியில் பயிற்சி பெறும் மற்றொரு ஆண் ஐபிஎஸ் அதிகாரி மீது அருகிலுளள காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், 'அகாடமியில் என்னுடன் பயிற்சி பெற்றுவரும் ஐபிஎஸ் அதிகாரியான உதயகிருஷ்ணா ரெட்டி, என்னிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார். மொபைல் போனில் ஆபாச தகவல்களையும் படங்களையும் அனுப்பி வந்ததோடு கடந்த 9 மாதங்களாக என்னை மிரட்டியும் வந்தார். மற்றவர்கள் மத்தியில் என் கண்ணியத்தை குறைக்கும் வகையில் அவதூறாக பேசுகிறார்" என்று தெரிவித்திருந்தார்.

பாலியல் ரீதியாக டார்ச்சர்

இப்புகாரைத் தொடர்ந்து உதயகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றச்செயல்களை தடுக்கும் காவல்துறையினருக்கு உத்தரவிடும் உயர் பொறுப்பில் அமரும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் மையத்தில் நடந்துள்ள இந்த சம்பவம், ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகச் செயல்

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். தற்போது அதுபோ... மேலும் பார்க்க

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க

சேலம்: மூக்குத்தி, கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை - அச்சத்தில் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதி. மூத்த குடிமக்களான‌ இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு ... மேலும் பார்க்க

மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் - நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் வி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு - வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை!

திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்... மேலும் பார்க்க

கேரள மருத்துவ மாணவர் நிதின்ராஜ் தற்கொலை வழக்கு; 3 மாதங்களுக்குப்பின் HOD கைது - நடந்தது என்ன?

கேரள மாநிலம் கண்ணூர் அஞ்சரகண்டி தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டி.எஸ் மாணவர் நிதின் ராஜ் கடந்த 10.04.2026 அன்று கல்லூரி விடுதி கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ... மேலும் பார்க்க