செய்திகள் :

Jana Nayagan: "ஜனநாயகனுக்கு 'ஏ' சான்றிதழ் வாங்கியதற்கான காரணம் இதான்" - அ. வினோத் பேட்டி

post image

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Jana Nayagan - Vijay
Jana Nayagan - Vijay

படத்தின் ரிலீஸையொட்டி நம் 'சினிமா விகடன்' யூடியூப் சேனலுக்கு அ. வினோத் பேட்டியளித்திருக்கிறார். இந்தப் பேட்டியில் 'ஜன நாயகன்' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் பெற்றது குறித்து பேசியிருக்கிறார்.

"விஜய்யின் வெற்றிக்கு குழந்தைகள் முக்கியப் பங்காக இருந்திருக்கிறார்கள் என்பதை அவரே சொல்கிறார். படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்திருப்பதால் குழந்தைகளால் படத்தைப் பார்க்க முடியாது. இது படக்குழுவினருக்கு வருத்தத்தைக் கொடுக்கிறதா?" எனக் கேட்டோம்.

பதில் தந்தவர், "குழந்தைகள் எப்போதும் விஜய் சார் படத்தைப் பார்க்க வருவார்கள். இம்முறை அதை மிஸ் செய்வேன். சென்சார் கிடைப்பதே பெரிய விஷயமாக இருந்தது.

அதில் அவர்கள் 'ஏ' சான்றிதழ்தான் கொடுக்க முடியும் எனச் சொல்லும்போது, அதனை மறுத்துப் பேச முடியவில்லை.

Jana Nayagan - Vijay
Jana Nayagan - Vijay

பிறகு தயாரிப்பாளரிடம் பேசி 'ஏ' சான்றிதழ் பெற்றுக்கொண்டோம். இதில் விஜய் சார் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் வருத்தம்தான். அனிருத் மிகப்பெரிய உழைப்பாளி. மிக வேகமாக வேலையை முடித்துவிடுவார்.

அவர் மாஸ் மியூசிக் டைரக்டர். மாஸ் ஹீரோக்களுக்கு இசை அமைக்கும் இசையமைப்பாளர்கள் இந்தியாவில் குறைவு. ஆனால், அனிருத் எல்லா நேரங்களிலும் சர்ஃப்ரைஸ் செய்கிறார்" என்றார்.

National Awards: "தனுஷூக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது!" - கஸ்தூரி ராஜா பேசியது என்ன?

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்... மேலும் பார்க்க

Jana Nayagan: "'ஜன நாயகன்' லீக் ஆனபோது விஜய் சார் என்கிட்ட சொன்ன விஷயம்..." - அ. வினோத்

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறா... மேலும் பார்க்க

Jana Nayagan Exclusive: "நிறைய பேர் 'ஜன நாயகன்' படத்தைப் பார்த்துவிட்டார்கள்; ஆனால்..." - அ. வினோத்

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கி... மேலும் பார்க்க

"100 கோடி கொடுத்தாலும் இனி சோசியல் மீடியாவுக்கு வரமாட்டேன்; ஏன்னா..." - ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் சமீபத்தில் 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன்... மேலும் பார்க்க

திரைகக்தை மன்னன் கே.பாக்யராஜ் vs நம்ம கே.பாக்யராஜ்! - திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் முடிவுகள்

மறைந்த நடிகர் பாக்யராஜ் தலைவராக இருந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது.2026 -29 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் பெப்சி தலைவர் ஆர்.... மேலும் பார்க்க

"ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தப்போ அதை நினைச்சு விலகியிருந்தால்..." - தேசிய விருது பற்றி சாச்சனா பேட்டி

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் பிரிவில் அனல் அரசுக்கும் ம... மேலும் பார்க்க