செய்திகள் :

தருமபுரி : 'அவனைக் காண நானும் செல்கிறேன்' - பிளஸ் டூ மாணவி எடுத்த விபரீத முடிவு

post image

பள்ளியில் தன்னுடன் படித்த காதலன் தற்கொலை செய்துகொண்டதால் அதன் துயரம் தாங்காமல் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாரியப்பன்-லட்சுமி தம்பதியின் மகள் அப்பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் தன்னுடைய அறையில் இருந்த மாணவி, மின் விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டிலுள்ளவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிக்க சம்பவ இடத்துக்கு வந்த பாலக்கோடு காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை
தற்கொலை

அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் பாட புத்தகத்திலிருந்த கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர்.

அந்த கடிதத்தில், 'என்னுடன் படித்த மாணவனுடன் பழகி காதலித்து வந்தேன். சமீபத்தில் அவன் தற்கொலை செய்துகொண்டான், அதனால் இந்த உலகில் வாழ விரும்பவில்லை. அவனைக் காண நானும் செல்கிறேன்' என எழுதியுள்ளார்.

மாணவன் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டான் என்பது தெரியாத நிலையில், அந்த துயரத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மையம்

பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகச் செயல்

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். தற்போது அதுபோ... மேலும் பார்க்க

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க

சேலம்: மூக்குத்தி, கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை - அச்சத்தில் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதி. மூத்த குடிமக்களான‌ இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு ... மேலும் பார்க்க

மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் - நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் வி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு - வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை!

திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்... மேலும் பார்க்க

கேரள மருத்துவ மாணவர் நிதின்ராஜ் தற்கொலை வழக்கு; 3 மாதங்களுக்குப்பின் HOD கைது - நடந்தது என்ன?

கேரள மாநிலம் கண்ணூர் அஞ்சரகண்டி தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டி.எஸ் மாணவர் நிதின் ராஜ் கடந்த 10.04.2026 அன்று கல்லூரி விடுதி கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ... மேலும் பார்க்க