செய்திகள் :

இன்டெக்ஸ் ஃபண்டுகளே போதும் என்று நினைத்து முதலீடு செய்வதால் அதிக லாபத்தை அடைய முடியுமா?

post image

இந்தியாவில் நேரடியாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் பலரும் முதலீடு செய்வதற்கு முக்கியமான காரணம், ரெகுலர் ஃபண்டுகளில் அதாவது, மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்கள் மூலம் முதலீடு செய்யும்போது இந்த எக்ஸ்பென்ஸ் ரேஷியோ டைரக்ட் ஃபண்டுகளைவிட 0.5% முதல் 1% வரை அதிகமாக இருப்பதுதான். கூடுதலான இந்தக் கட்டணத்தை ஏன் தரவேண்டும் என்று நினைக்கும் சில முதலீட்டாளர்கள் டைரக்ட் முறையில் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்வதே பெஸ்ட் என்று நினைக்கத் துவங்கிவிடுகிறார்கள்.

Mutual Fund | மியூச்சுவல் ஃபண்ட்

அவர்கள் இப்படி நினைக்கும்போது, சமீபத்தில் அதிக லாபம் தந்த ஃபண்டுகளைத் தேர்வு செய்து, அதில் முதலீடு செய்யும் தவறைச் செய்கிறார்கள். இன்னும் சிலர், யாரோ சொல்வதைக் கேட்டு அந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து, எதிர்பார்த்த லாபம் வரவில்லை எனில், அடிக்கடி ஃபண்டுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சிலர் செக்ட்ரோல் ஃபண்டுகளைத் தேர்வு செய்து பெரிதாக நஷ்டம் கண்டபின் அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். ஆனால், மிகச் சிலர் மட்டும்தான் இன்டெக்ஸ் ஃபண்டுகளைத் தேர்வு செய்கிறார்கள்.

இன்டெக்ஸ் ஃபண்டுகள் என்பவை ஒரு குறிப்பிட்ட இன்டெக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யக்கூடிய ஃபண்ட் திட்டங்கள் ஆகும். உதாரணமாக, நிஃப்டி 50 இன்டெக்ஸ் குறியீட்டில் 50 முக்கியமான பங்குகள் உள்ளன. இந்த இன்டெக்ஸில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பங்கின் வெயிட்டேஜ்-க்குக்கேற்ப முதலீடு செய்வது ஒரு வகை. 50 பங்குகளிலும் சரிசமமாக (equal weightage) முதலீடு செய்வது இன்னொரு வகை.

இன்டெக்ஸ் ஃபண்டு வகைகளில் நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஃபண்ட் என்பது பிரபலமானது. இது போல, மொத்தம் 210 வகையான இன்டெக்ஸ் ஃபண்டுகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பல வகையான திட்டங்களை அறிமுகம் நடத்தி வருகின்றன.

இந்த இன்டெக்ஸ் ஃபண்டுகள் பேசிவ்-ஆக நிர்வாகம் செய்யப்படுபவை. அதாவது, இன்டெக்ஸ் குறியீடு எந்த அளவுக்கு வளர்ச்சி காண்கிறதோ, அந்த அளவுக்கான லாபம் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். இந்தத் திட்டங்களை நிர்வாகம் செய்யும் ஃபண்ட் மேனேஜருக்கு முதலீட்டை நிர்வாகம் செய்வதில் பெரிய அளவில் வேலை இருக்காது என்பதால் இதற்கான நிர்வாகக் கட்டணம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த இன்டெக்ஸ் ஃபண்டுகளில் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஃபண்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 9% லாபமும், 10 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 11.5% லாபமும், 20 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 12.44% லாபம் தந்துள்ளன. இது நல்ல லாபமா என்று கேட்டால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் நல்ல லாபம்தான் என்று சொல்லலாம்.

Nifty / நிஃப்டி

இன்டெக்ஸ் ஃபண்டு வகைகளில் நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஃபண்ட் என்பது பிரபலமானது. இது போல, மொத்தம் 210 வகையான இன்டெக்ஸ் ஃபண்டுகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பல வகையான திட்டங்களை அறிமுகம் நடத்தி வருகின்றன.

இந்த இன்டெக்ஸ் ஃபண்டுகள் பேசிவ்-ஆக நிர்வாகம் செய்யப்படுபவை. அதாவது, இன்டெக்ஸ் குறியீடு எந்த அளவுக்கு வளர்ச்சி காண்கிறதோ, அந்த அளவுக்கான லாபம் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். இந்தத் திட்டங்களை நிர்வாகம் செய்யும் ஃபண்ட் மேனேஜருக்கு முதலீட்டை நிர்வாகம் செய்வதில் பெரிய அளவில் வேலை இருக்காது என்பதால் இதற்கான நிர்வாகக் கட்டணம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த இன்டெக்ஸ் ஃபண்டுகளில் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஃபண்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 9% லாபமும், 10 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 11.5% லாபமும், 20 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 12.44% லாபம் தந்துள்ளன. இது நல்ல லாபமா என்று கேட்டால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் நல்ல லாபம்தான் என்று சொல்லலாம்.

Money

ஆனால், இது அதிக லாபமா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், பேசிவ்-ஆக நிர்வாகம் செய்யப்படும் இன்டெக்ஸ் ஃபண்டுகளைவிட ஆக்டிவ்-ஆக நிர்வாகம் செய்யப்படும் ஃபண்டுகள் அதிக லாபத்தைத் தருகின்றன. இன்டெக்ஸ் ஃபண்டுகளில் உள்ள பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யாமல், லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என எந்த வகை சார்ந்த பங்குகளாக இருந்தாலும் அவற்றில் அதிக வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பங்குகளில் முதலீடு செய்து, அதிக லாபம் பெற்றுத் தர வழிசெய்து பங்குகள்தான் ஆக்டிவ்-ஆக நிர்வாகம் செய்யப்படும் ஃபண்டுகள் ஆகும்.

இவற்றில் அதிக லாபம் கிடைக்கும் என்பதால், எக்ஸ்பென்ஸ் ரேஷியோ என்பது சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்தத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் லாபம் என்பது அதிகமாகவே இருக்கும். அதிலும் சரியாக நிர்வாகம் செய்யப்படும் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது கிடைக்கும் லாபம் என்பது இன்டெக்ஸ் ஃபண்டுகளைவிட நீண்ட காலத்தில் மிக அதிகமாக இருக்கும்!

profit growth

உதாரணம், நிப்பான் மற்றும் ஐசிஐசிஐ நிறுவனங்களின் லார்ஜ் கேப் ஃபண்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் தந்த குறைந்தபட்ச லாபம் 15.8%. 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 14% லாபம் தந்துள்ளன. இன்டெக்ஸ் ஃபண்டுகள் தந்த வருமானத்துடன் இந்த வருமானத்தை ஒப்பிடும்போது முதலீட்டாளர்களுக்குத் திரும்பக் கிடைக்கும் பணம் மிகப் பெரிய அளவில் அதிகமாக இருக்கும்.

ஆக்டிவ்-ஆக நிர்வாகம் செய்யப்படும் ஃபண்டுகள் அதிக லாபம் தர வல்லவை என்பதால், இன்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது தவறு என்று சொல்லிவிட முடியாது. ஒரு முதலீட்டாளர் தனது மொத்த முதலீட்டில் 10% முதல் 20% முதலீட்டை அவருடைய வயதைப் பொறுத்தும், ரிஸ்க் எடுக்க நினைக்கிற அளவைப் பொறுத்தும் முதலீடு செய்யலாம்.

ஒரு முதலீட்டாளர் தன்னிடம் உள்ள எல்லாப் பணத்தையும் இன்டெக்ஸ் ஃபண்டுகளில் மட்டுமே முதலீடு செய்தால், அவற்றில் கிடைக்கிற வருமானம் அளவுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். எனவே, சராசரியாக லாபம் தரும் ஃபண்டுகள், அதிக லாபம் தரும் ஃபண்டுகள் எனப் பலவற்றிலும் அசெட் அலோகேஷன் முறையில் முதலீடு செய்தால் மட்டுமே கூடுதலான லாபம் கிடைக்கும்!

நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமா?

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

ITR தாக்கலில் வருமான கணக்கை தவறாக காட்டினால்... தாமதமாக தாக்கல் செய்தால் என்ன அபராதம்?

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதை தவறும் போதும், தாக்கல் செய்யும் போது சில தவறுகளை செய்வதாலும் வருமான வரித் துறை நமக்கு அபராதங்களை விதிக்கும். அந்த அபராதங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்...பிரிவு ... மேலும் பார்க்க

இரண்டு சம்பளம் வாங்கும் கணவன் மனைவியா? ₹1 கோடி ஈஸியா சேர்க்கும் வழி இதுதான்!

மாதம் பிறந்தால் இரண்டு சம்பளம் அக்கவுண்ட்டில் விழுகிறது. ஐடி பார்க், ஏசி காற்று, வார இறுதியில் மால், காபி ஷாப் என வாழ்க்கை சொகுசாகத்தான் நகர்கிறது. 35 வயதைத் தாண்டிய இரட்டை வருமானத் தம்பதிகளுக்கு வெளி... மேலும் பார்க்க

40 வயதில் முதலீடு; 10 ஆண்டுகளில் ₹2.3 கோடி; வளைகுடா NRI-களுக்கான பிளான் என்ன?

வணக்கம். வளைகுடா நாட்டின் தகிக்கும் வெயிலையும், குடும்பத்தைப் பிரிந்திருக்கும் ஏக்கத்தையும் கடந்து நீங்கள் தினமும் உழைக்கிறீர்கள். நாற்பது வயதைக் கடந்த உங்களுக்கு, உழைப்பின் முக்கியத்துவம் மட்டுமல்ல, ... மேலும் பார்க்க

'சொந்த வீடு வேண்டாம்; வாடகை வீடே போதும்.!' - இன்றைய இளைஞர்கள் இப்படி யோசிக்க என்ன காரணம்?

புதிதாக வேலைக்குச் சேர்ந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே வங்கிக் கடனில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் அண்மைக் காலம் வரை இளைஞர்களின் சிந்தனைப் போக்காக இருந்தது. ஆனால், சமீப காலமாக 'சொந்த வ... மேலும் பார்க்க

Personal Finance: இந்த மாதிரி பட்ஜெட் போட்டா, 10 வருஷத்துல ₹23 லட்சம் சேர்க்கலாம்!

"நாம என்ன தப்பு பண்றோம், நம்மளால ஒரு நாளும் பெரிய ஆளாக முடியாதா?"ங்கிற அந்த ஒரு பயமும், குற்ற உணர்ச்சியும் மனசை அப்படியே அமுக்கும் பாத்தீங்களா... அது ரொம்பக் கொடுமையானது.நிஜத்தைச் சொல்லணும்னா, தப்பு உ... மேலும் பார்க்க

ITR Filing: ITR-1 முதல் ITR-4 வரை - புதிய வருமான வரிச் சட்டத்தில் யாருக்கு எந்த ITR Form?

தற்போது அறிமுகமாகி உள்ள புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ், யார் எந்த ஐ.டி.ஆர் ஃபார்மைப் பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்...ITR - 1: சம்பளம், ஓய்வூதியம், இரண்டு வீடுகள் வரையிலான சொத்துகள், வட்டி... மேலும் பார்க்க