செய்திகள் :

சகோதரியின் கணவர் மீது காதல்: வருங்கால கணவனை வரவைத்து கொலை செய்து வனவிலங்குகளுக்கு உணவாக்கிய பெண்

post image

புனேயில் ஷியா என்ற பெண் தனது காதலனோடு சேர்ந்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சிக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இச்சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் அது போன்ற ஒரு சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரித்ஹ் மாவட்டத்தில் உள்ள ஜமுவா சோக் என்ற இடத்தை சேர்ந்த நீரஜ்(20) என்ற வாலிபருக்கு அதே ஊரைச்சேர்ந்த ஊர்மிளா என்பவருடன் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஊர்மிளா தனது சகோதரியின் கணவர் சுபாஷ் பஸ்வான் என்பவரை காதலித்து வந்தார்.

வீட்டில் பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் தனது சகோதரியின் கணவனை இழக்க நேரிடும் என்று ஊர்மிளா நினைத்தார். இது தொடர்பாக ஊர்மிளா தனது காதலன் பஸ்வானுடன் கலந்து ஆலோசித்தார்.

இதில் வருங்கால மணமகனை கொலை செய்துவிட இருவரும் முடிவு செய்தனர். இதற்காக ஊர்மிளா தனது வருங்கால கணவன் நீரஜை தொடர்பு கொண்டு பீகார் எல்லையில் உள்ள பேலா வனப்பகுதிக்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.

அங்கு ஏற்கனவே பஸ்வானும் ஊர்மிளாவும் வந்து காத்திருந்தனர். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நீரஜை கத்தியால் குத்திக்கொலை செய்தனர். அதன் பிறகு உடலை வனவிலங்குகள் சாப்பிட்டுவிடும் என்ற நம்பிக்கையில் வனப்பகுதியில் போட்டுவிட்டு சென்றனர். நீரஜ் காணாமல் போனது குறித்து அவரது தந்தை போலீஸில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் நீரஜ் மொபைல் போன் சிக்னலை மையமாக வைத்து பேலா வனப்பகுதியில் சென்று தேடினர்.

அங்கு நீரஜ் உடல் கிடைத்தது.

விசாரணையில் நீரஜ் குடும்பத்திற்கு யாரும் பகை இல்லை என்று தெரிய வந்தது. அதேசமயம் நீரஜ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து ஊர்மிளாவின் பக்கம் போலீஸாரின் பார்வை திரும்பியது. கொலை நடந்த இடத்தில் ஊர்மிளாவின் மொபைல் போனும் இருந்தது தொழில் நுட்ப ஆய்வில் தெரிய வந்தது. உடனே ஊர்மிளாவை பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரது சகோதரியின் கணவன் பஸ்வானும் கைது செய்யப்பட்டார்.

ரத்தவெள்ளத்தில் கணவன்; உயிருக்குப் போராடிய மகன்; போனை பார்த்துகொண்டிருந்த தாய்; பெங்களூருவில் பகீர்

கர்நாடகா மாநிலம் தார்வாடு என்ற இடத்தில் வசித்தவர் டாக்டர் கிரண். இவரது மனைவி பிரியங்கா. இவரும் டாக்டர் ஆவார். இத்தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கிரண் உறவினர்கள் அடிக்கடி டாக்டர் வீட்டிற்கு ... மேலும் பார்க்க

விருதுநகர்: நிச்சயத்துக்கு பின் திருமணத்துக்கு மறுப்பு - இளம்பெண்ணையும், தாயையும் வெட்டிய மணமகன்

விருதுநகரில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் அரிவாளால் சரமாரியாக வெட்டிய நிலையில், தடுக்க முயன்ற தாயையும் வெட்டியுள்ளார். இதில் பெண்ணின் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்... மேலும் பார்க்க

"நான் திவ்யா பேசுறேன்.!" - ஒரு வாட்ஸ்அப் மெசேஜ்; ரூ.21 கோடி இழந்த ஆடிட்டர் - முழுப் பின்னணி!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 70 வயது மூத்த ஆடிட்டர் (CA) அசோக் விஜயவர்கியா. இவர் மத்தியப் பிரதேச வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் தலைமை தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த... மேலும் பார்க்க

லாக்கப் மரணம்: 'தலையில் ரத்தக்கட்டு, கழுத்தில் காயம்' - கடும் தாக்குதலால் கொல்லப்பட்ட சபரி வர்மன்

நாகர்கோவில் கிளைச் சிறையில் சபரிவர்மன் (34) என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர... மேலும் பார்க்க

சபரி வர்மன் லாக்கப் மரணம்: 'மனைவிக்கு அரசு வேலை வழங்க உறுதி' - கடைசிவரை போராடிய திமுக எம்.எல்.ஏ

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (34) சிறையில் அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர்... மேலும் பார்க்க

பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; சாகும்வரை ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இன்ஜினியர் சுஜி பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் நெருக்கமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் 2020-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தன்னைக் காத... மேலும் பார்க்க