செய்திகள் :

ITR தாக்கலில் வருமான கணக்கை தவறாக காட்டினால்... தாமதமாக தாக்கல் செய்தால் என்ன அபராதம்?

post image

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதை தவறும் போதும், தாக்கல் செய்யும் போது சில தவறுகளை செய்வதாலும் வருமான வரித் துறை நமக்கு அபராதங்களை விதிக்கும்.

அந்த அபராதங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்...

பிரிவு 234F

வருமான வரிக் கணக்கு தாக்கலை குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் செய்யவில்லை என்றால், தாமதக் கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படும். ஒருவேளை, தாக்கல் செய்பவரின் வருமானம் ரூ.5 லட்சம் தாண்டவில்லை என்றால், தாமதக் கட்டணம் வெறும் ரூ.1,000 மட்டுமே.

வருமான வரி
வருமான வரி

பிரிவு 140A(3)

பிரிவு 140A(1)-ன் கீழ் செலுத்த வேண்டிய சுய மதிப்பீட்டு வரி, கூடுதல் சலுகை வரி, வட்டி, கட்டணம் போன்றவற்றை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செலுத்தத் தவறும்போது, அபராதத் தொகையை வரி வசூல் அதிகாரி முடிவு செய்வார்.

பிரிவு 234G

வரித் தாக்கலின் போது, பிரிவு 35, பிரிவு 80G-இன் கீழ் தேவைப்படும் அறிக்கை அல்லது சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறும்போது, விதிமீறல் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் தலா ₹200 கட்டணம் விதிக்கப்படும்.

பிரிவு 158BFA(2)

வருமான வரிக் கணக்குத் தாக்கலின் போது, மறைக்கப்பட்ட வருமானத்திற்கு, அந்த வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய வரியில் 50% அபராதமாக விதிக்கப்படும்.

பிரிவு 221(1)

வருமான வரியை செலுத்த தவறும் போது, அபராதத் தொகையானது வரி வசூல் அதிகாரியால் விதிக்கப்படும். இது நிலுவையில் உள்ள வரித் தொகையை விட அதிகமாக இருக்காது.

பிரிவு 234E

பிரிவு 200(3), பிரிவு 206C(3)-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கால வரம்பிற்குள் TDS/TCS அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறும்போது, தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹200 அபராதம் விதிக்கப்படும்.

பிரிவு 270A(1)

வருமான வரிக் கணக்குத் தாக்கலில் வருமானத்தைக் குறைத்துக் காட்டும்போது அல்லது தவறாகக் காட்டும்போது, குறைத்துக் காட்டப்பட்ட வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய வரியில் 50 சதவிகிதத்திற்கு இணையான தொகை அபராதமாக விதிக்கப்படும்.

ஒருவேளை வருமானத்தைத் தவறாகக் காட்டியிருந்தால், அபராதம் குறைத்துக் காட்டப்பட்ட வருமானத்திற்கான வரியில் 200% ஆக உயரும்.

இன்டெக்ஸ் ஃபண்டுகளே போதும் என்று நினைத்து முதலீடு செய்வதால் அதிக லாபத்தை அடைய முடியுமா?

இந்தியாவில் நேரடியாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தை சார்ந்த மியூச்சு... மேலும் பார்க்க

இரண்டு சம்பளம் வாங்கும் கணவன் மனைவியா? ₹1 கோடி ஈஸியா சேர்க்கும் வழி இதுதான்!

மாதம் பிறந்தால் இரண்டு சம்பளம் அக்கவுண்ட்டில் விழுகிறது. ஐடி பார்க், ஏசி காற்று, வார இறுதியில் மால், காபி ஷாப் என வாழ்க்கை சொகுசாகத்தான் நகர்கிறது. 35 வயதைத் தாண்டிய இரட்டை வருமானத் தம்பதிகளுக்கு வெளி... மேலும் பார்க்க

40 வயதில் முதலீடு; 10 ஆண்டுகளில் ₹2.3 கோடி; வளைகுடா NRI-களுக்கான பிளான் என்ன?

வணக்கம். வளைகுடா நாட்டின் தகிக்கும் வெயிலையும், குடும்பத்தைப் பிரிந்திருக்கும் ஏக்கத்தையும் கடந்து நீங்கள் தினமும் உழைக்கிறீர்கள். நாற்பது வயதைக் கடந்த உங்களுக்கு, உழைப்பின் முக்கியத்துவம் மட்டுமல்ல, ... மேலும் பார்க்க

'சொந்த வீடு வேண்டாம்; வாடகை வீடே போதும்.!' - இன்றைய இளைஞர்கள் இப்படி யோசிக்க என்ன காரணம்?

புதிதாக வேலைக்குச் சேர்ந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே வங்கிக் கடனில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் அண்மைக் காலம் வரை இளைஞர்களின் சிந்தனைப் போக்காக இருந்தது. ஆனால், சமீப காலமாக 'சொந்த வ... மேலும் பார்க்க

Personal Finance: இந்த மாதிரி பட்ஜெட் போட்டா, 10 வருஷத்துல ₹23 லட்சம் சேர்க்கலாம்!

"நாம என்ன தப்பு பண்றோம், நம்மளால ஒரு நாளும் பெரிய ஆளாக முடியாதா?"ங்கிற அந்த ஒரு பயமும், குற்ற உணர்ச்சியும் மனசை அப்படியே அமுக்கும் பாத்தீங்களா... அது ரொம்பக் கொடுமையானது.நிஜத்தைச் சொல்லணும்னா, தப்பு உ... மேலும் பார்க்க

ITR Filing: ITR-1 முதல் ITR-4 வரை - புதிய வருமான வரிச் சட்டத்தில் யாருக்கு எந்த ITR Form?

தற்போது அறிமுகமாகி உள்ள புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ், யார் எந்த ஐ.டி.ஆர் ஃபார்மைப் பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்...ITR - 1: சம்பளம், ஓய்வூதியம், இரண்டு வீடுகள் வரையிலான சொத்துகள், வட்டி... மேலும் பார்க்க