செய்திகள் :

'சொந்த வீடு வேண்டாம்; வாடகை வீடே போதும்.!' - இன்றைய இளைஞர்கள் இப்படி யோசிக்க என்ன காரணம்?

post image

புதிதாக வேலைக்குச் சேர்ந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே வங்கிக் கடனில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் அண்மைக் காலம் வரை இளைஞர்களின் சிந்தனைப் போக்காக இருந்தது. ஆனால், சமீப காலமாக 'சொந்த வீடு வேண்டாம்! வாடகை வீடே போதும்' என்கிற யோசிக்கத் தொடங்கி இருக்கிறது இளைஞர் சமுதாயம். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

சொந்த வீடு கட்ட: பட்ஜெட் எளிய வழிகாட்டி!
சொந்த வீடு

'சொந்த வீடு வேண்டாம்! வாடகை வீடே போதும்' என இன்றைய இளைஞர்கள் கருதுவதாக 'நோ புரோக்கர்' என்கிற ஆன்லைன் தளம் சொல்கிறது. இந்த நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், தற்போது வாடகை வீட்டில் குடியிருக்கும் 46% தொடர்ந்து வாடகை வீட்டிலேயே குடியிருக்க விரும்புவதாக சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, தற்போது வாடகை வீட்டில் குடியிருக்கும் 25 வயது முதல் 34 வயதுக்குள் இருப்பவர்களும், 35 வயது 44 வயதுக்குள் இருப்பவர்களும் சொந்தமாக வீடு வாங்குவதைவிட வாடகை வீட்டிலேயே தொடர்ந்து இருக்கப் போவதாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் இப்படி நினைப்பதற்கு முக்கியமான காரணம், ரியல் எஸ்டேட்டுகளின் விலை மிகவும் அதிகரித்துவிட்டதுதான். இன்றைக்கு இந்தியாவின் எந்த நகரத்தை எடுத்துக்கொண்டாலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை நகர்ப்புறங்களில் மிக அதிகமாக இருக்கிறது. அதை விட சற்றுக் குறைந்த விலையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை வாங்க வேண்டும் எனில், நகர்ப்புறத்தை விட்டு வெளியே வரவேண்டியிருக்கிறது. ஆனால், நகரின் மையப்பகுதியில்தான் அலுவலகம் இருப்பதால், தினமும் கஷ்டப்பட்டுத்தான் அலுவலகத்துக்கு வந்துசெல்ல வேண்டி இருக்கிறது.

அடுக்குமாடிக் குடியிருப்புக்கே இவ்வளவு கஷ்டம் எனில், நகர்ப்புறத்தில் தனி வீடு வாங்க மிக அதிகமான பணம் செலவாகும். நகர்ப்புறத்துக்கு வெளியே வாங்க வேண்டும் எனில், செலவு கொஞ்சம் குறைந்தாலும், குழந்தைகளின் பள்ளி, கல்லூரிப் படிப்பு, அலுவலகம் என அலைய வேண்டி இருக்கிறது.

வீட்டுக் கடன்

அடுத்த முக்கியமான காரணம், வங்கிக் கடன் மூலம் சொந்த வீடு வாங்கும்போது அதற்குக் கட்டவேண்டிய இ.எம்.ஐ தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது. இன்றைய நிலையில், மாதந்திரம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் எனில், அதில் 60% - 70% வரை வீட்டுக்கடனுக்கான இ.எம்.ஐ தொகையைக் கட்டவே சரியாகப் போய்விடுகிறது. மீதமுள்ள 30% - 40% பணத்தை வைத்துத்தான் வீட்டுக்கான சாப்பாட்டுச் செலவு, குழந்தைகளின் பள்ளி, கல்லூரிக் கட்டணம், துணிமணிகள், மருத்துவச் செலவு என எல்லாச் செலவுகளையும் செய்ய வேண்டி இருக்கிறது.

''என் சம்பளத்தில் 60 சதவிகிதத்தை அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து திரும்பக் கட்டியாக வேண்டும் என்கிற கட்டாயம் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று நினைத்துத்தான் சொந்த வீடு வாங்கும் முடிவை கைவிட்டுவிட்டேன். சொந்த வீடு என்கிற ஒரே காரணத்திற்காக என் நிதிச் சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை'' என்கிறார் ஒரு இளைஞர்.

''நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். வேலை காரணமாக நான் வேறு வேறு ஊர்களுக்கு மாறிச் செல்ல வேண்டியிருக்கும். இந்த நிலையில், ஏதோ ஒரு நகரத்தில் வீட்டை வாங்கிவிட்டால், பிற்பாடு வேறொரு ஊரில் வாடகை வீட்டில்தானே இருக்க வேண்டும்? அதற்கு சொந்த வீட்டை வாங்காமலே இருந்துவிடலாமே!'' என்று கேட்கிறார் இன்னொரு இளைஞர்.

வீட்டு வாடகை

இன்றைக்கு இந்தியாவின் பல நகரங்களில் சொந்த வீட்டுக்காகக் கட்டும் இ.எம்.ஐ தொகை வீட்டுக்கான வாடகையைவிட மிக அதிகமாக இருக்கிறது. EMI-to-Rent Ratio என்கிற இ.எம்.ஐ மற்றும் வாடகை விகிதம் கூர்கானில் 1.86 - 2.68-ஆகவும், பெங்களூரில் 2.38-ஆகவும், ஹைதராபாத்தில் 2.47-ஆகவும் மும்பையில் 2.19-ஆகவும் இருக்கிறது. அதாவது, ஒரு லட்சம் ரூபாய் வாடகை தருகிற வீட்டுக்கு இரண்டு மடங்கு இ.எம்.ஐ தொகை கட்டவேண்டி இருப்பதைத்தான் இந்த விகிதம் எடுத்துச் சொல்கிறது.

தவிர, சொந்த வீட்டை வாங்கி அதை வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாம் என்றாலும், பெரிய வருமானம் கிடைப்பதில்லை. இந்திய அளவில் வாடகை வருமான வளர்ச்சி என்பது மும்பையில் 11 சதவிகிதமாகவும் சென்னையில் 8 சதவிகிதமாகவும் பெங்களூருவில் 7 சதவிகிதமாகவும் ஹைதராபாத் மற்றும் புதுடெல்லியில் வெறும் 3 சதவிகிதமாகவும் இருக்கிறது.

இது மாதிரியான காரணங்கள்தான் சொந்த வீடு வேண்டாமே என இன்றைய இளைஞர்கள் யோசிக்க வைத்திருக்கிறது. சரி, சொந்த வீடு வேண்டாம் என முடிவெடுத்திருக்கும் இன்றைய இளைஞர்கள் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை வேறு எதில் முதலீடு செய்கிறார்கள்?

மியூச்சுவல் ஃபண்ட் SIP

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் பங்குச் சந்தையிலும்தான் அதிகமான இளைஞர்கள் முதலீடு செய்து வருகிறார்கள். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது குறுகிய காலத்தில் ரிஸ்க்-ஆனது என்றாலும் நீண்ட காலத்தில் பணவீக்கத்தைவிட மிக அதிக வருமானம் தரத்தக்கது என்பதை இன்றைய இளைஞர்கள் சரியாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள். தவிர, இது டிஜிட்டல் வடிவில் இருப்பதால், ஆன்லைனில் எப்போதும் பத்திரமாக இருக்கும். சொந்த வீட்டை விற்பதற்குப் பல மாதங்கள் ஆகும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை சில நாள்களிலேயே விற்று, பணத்தைத் திரும்பப் பெற்றுவிடலாம். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அரசின் கண்காணிப்பில் இருக்கும் முதலீடு இது என்பதால், பெரிய அளவில் தில்லுமுல்லுகள் நடக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.

எனவே, சொந்த வீடு வாங்கி நிதிச் சுதந்திரத்தை இழப்பதைவிட, வாடகை வீட்டில் நிதிச் சுதந்திரத்துடன் இருப்பதைவிட மிகச் சரியானது என இன்றைய இளைஞர்கள் நினைப்பதால்தான், 'சொந்த வீடு வேண்டாம்! வாடகை வீடே போதும்' என நினைக்கத் தொடங்கி இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் பிராக்டிக்கலாக யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதையே சொந்த வீடு பற்றிய இந்த சிந்தனைப் போக்கு காட்டுகிறது.

முதலீட்டு ஆலோசனை வேண்டாமா?

'லாபம்' வழங்கும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் ₹1 கோடி சேர்ப்பது எப்படி? - 40+ வயதினருக்கான சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்!

வரும் புதன், ஜூலை 8 மாலை 7 மணிக்கு. இப்போதே பெயரை முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-jul08-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_jul08_2026

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

Personal Finance: இந்த மாதிரி பட்ஜெட் போட்டா, 10 வருஷத்துல ₹23 லட்சம் சேர்க்கலாம்!

"நாம என்ன தப்பு பண்றோம், நம்மளால ஒரு நாளும் பெரிய ஆளாக முடியாதா?"ங்கிற அந்த ஒரு பயமும், குற்ற உணர்ச்சியும் மனசை அப்படியே அமுக்கும் பாத்தீங்களா... அது ரொம்பக் கொடுமையானது.நிஜத்தைச் சொல்லணும்னா, தப்பு உ... மேலும் பார்க்க

ITR Filing: ITR-1 முதல் ITR-4 வரை - புதிய வருமான வரிச் சட்டத்தில் யாருக்கு எந்த ITR Form?

தற்போது அறிமுகமாகி உள்ள புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ், யார் எந்த ஐ.டி.ஆர் ஃபார்மைப் பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்...ITR - 1: சம்பளம், ஓய்வூதியம், இரண்டு வீடுகள் வரையிலான சொத்துகள், வட்டி... மேலும் பார்க்க

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் எந்த இடத்தில் இருக்கிறது?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்து வளர்ந்துகொண்டு வருகிறது. இன்றைக்கு இந்தியாவில் படித்த முதலீட்டாளர்கள் பலர், அரசினால் கண்காணிக்கப்படக் கூடிய ஒரு முதலீட்டில் முதல... மேலும் பார்க்க

அய்யய்யோ! என் பணம் போயிடுமா? சந்தை ஏற்ற இறக்கத்தில் என்ன செய்ய வேண்டும்?

சந்தையின் ஏற்ற இறக்கம் (Volatile Markets) என்பது தவிர்க்க முடியாத ஒரு இயற்கை விதி. புயல் வரும் என்று பயந்து கடலுக்குப் போகாமல் இருக்க முடியாது; ஆனால், கப்பலை எப்படிச் செலுத்த வேண்டும் என்று தெரிந்து க... மேலும் பார்க்க

வேலை செய்யும்போதே 2-வது வருமானம் பெறுவது எப்படி? Gulf NRI-களே கவனியுங்க!

ஷேக் சையத் ரோடில் காரை ஓட்டும்போது அல்லது மரீனா ஏரியாவில் காபி குடிக்கும்போது ஒவ்வொரு வளைகுடா (Gulf) வாழ் தமிழர்களும் தனக்குள்ளே சொல்லிக்கொள்ளும் மந்திரச் சொல் இது.கைநிறைய சம்பளம், டாக்ஸ்-ஃப்ரீ வருமான... மேலும் பார்க்க

தனிநபர் வருமானம்: குஜராத், உ.பி-யை முந்திய தமிழ்நாடு! - உலக வங்கி சொல்லும் புள்ளி விவரம் என்ன?

இன்றைக்குப் பலருக்கும் இருக்கிற மிகப் பெரிய குறை, நமக்குப் போதிய வருமானம் இல்லை என்பதுதான். பலரும் நேரம், காலம் பார்க்காமல் உழைக்கத்தான் செய்கிறார்கள். காலை 10 மணி தொடங்கி மாலை 7 மணி வரை கட்டாயம் வேலை... மேலும் பார்க்க