செய்திகள் :

"எனது சொந்தக்காரர் 100 கோடிக்கு நிலம் வாங்கினாரா?" - பத்திரப்பதிவு சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்!

post image

பழனி அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6-ஆம் தேதி தனிநபர்கள் இருவரின் பெயர்களில் வெறும் ரூ. 2 கோடிக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு இந்தச் சம்பவம் நடந்துள்ளதால், தவெக அரசு மீதும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீதும் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள், எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.

பழனி
பழனி

குறிப்பாக தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலத்தை அமைச்சர் ரமேஷ் உறவினர்கள் வாங்கியதாக தகவல் வெளியானது. மேலும் அமைச்சர் ரமேஷ்க்கும் இதில் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கோயில் விவகாரத்தில் உண்மை தெரியாமல் பேசுகின்றனர். அரசின் மீது ஊழல் கரையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.

எனது சொந்தக்காரர் ஒருவர் ரூ.100 கோடிக்கு நிலம் வாங்கியதாக பொய் செய்தி பரப்புகின்றனர். அப்படி ஒரு சொந்தக்காரர் இருப்பதே நீங்கள் சொல்லித்தான் தெரியும்.

அரசு மீது ஊழல் கரையை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றனர். இதெல்லாம் பொய், புரட்டு, வேண்டும் என்றே கங்கணம் கட்டிக்கொண்டு வன்மத்துடன் இப்படியெல்லாம் பொய் பரப்புகின்றனர்.

அமைச்சர் ரமேஷ்
அமைச்சர் ரமேஷ்

நிலத்தை பதிவு செய்த சார் பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோயில் நிலங்களில் ஒரு இன்ச் நிலத்தை கூட யாருக்கும் கொடுக்க எங்களுக்கு விருப்பம் கிடையாது. பொய், புரட்டு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பேசியிருக்கிறார்.

லாக்கப் மரணம்: 'அடித்தே கொன்ற காவல்துறையினரைப் முதல்வர் விஜய் பாதுகாக்கிறாரா?'- சீமான் கண்டனம்

நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காவல் மரணம... மேலும் பார்க்க

கிண்டி: ரயில்வே நிலைய மேம்பாலம் அருகே நிலவும் சுகாதார சீர்கேடு; முகம் சுளிக்கும் மக்கள்!

சென்னையின் மையத்தில் உள்ள மிக முக்கியமான கிண்டி ரயில் நிலையத்தில், ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைமேடை உள்ளது.அதில் ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த... மேலும் பார்க்க

காவல் மரணம்: சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகிக்கு ஒரு சட்டமா? - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளான குட்கா விற்பனை செய்ததாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்டபோது நல... மேலும் பார்க்க

E20 : `நீங்களோ நானோ, காரின் மைலேஜை சரியாக கணக்கிட முடியாது!' - அமைச்சர் நிதின் கட்கரி புது விளக்கம்

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகப் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு காரின் எரிபொருள் சிக்கனத்தை அதன் உரிமையாளர் தாமாகவே துல்லியமாகக் கணக்கிட முடியாது என்றும், அ... மேலும் பார்க்க

'அதிமுக சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய்தான் களவாணி!' - எடப்பாடி கடும் தாக்கு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசியிருக்கும் அவர், "அண்மையில் கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய் திமுக... மேலும் பார்க்க