செய்திகள் :

`21 ஆண்டில் 25 முறை இடமாறுதல்' - IAS அதிகாரியின் நடடிக்கையால் கலக்கத்தில் பால்பண்ணைகள், உணவகங்கள்

post image

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. 2005ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான துகாராம் முண்டே, தான் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் துணிச்சலுடன் செயல்படக்கூடியவர். இதற்காகவே அவர் கடந்த 21 ஆண்டு பணியில் 25 முறை இடமாறுதல் பெற்று இருக்கிறார். தற்போது மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சர் நர்ஹரி ஸிர்வால் நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறார்.

அமைச்சர் நர்ஹரியும் சர்ச்சையில் சிக்கியவர். எனவே அவர் மீது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிருப்தியில் இருந்தார். எனவே சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற துகாராம் முண்டேயை நர்ஹரியின் கீழ் பணிபுரிய அனுப்பி இருக்கிறாார். முன்னதாக புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுத்துறை கமிஷனராக துகாராம் முண்டே நியமிக்கப்பட்டார். அதற்கு பா.ஜ.க அமைச்சர் கிரிஷ் மகாஜன் கடும் எதிர்ப் பு தெரிவித்தார்.

உடனே அவரது நியமனம் ரத்து செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இப்போது அவர் அமைச்சர் நர்ஹரியின் கீழ் வந்து இருக்கிறார். இப்பதவிக்கு வந்ததில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளால் உணவகங்கள் மற்றும் மருந்து கம்பெனிகள் அச்சத்தில் உள்ளன. மும்பையில் மிகவும் பிரபலமான ஒரு ஐஸ் கிரீம் கடை சுகாதாரம் இல்லாமல் செயல்படுவதாக கூறி அதனை மூட உத்தரவிட்டுள்ளார். துக்காராம் முண்டே எப்டிஏ (FDA) ஆணையராகப் பொறுப்பேற்ற மே 25 அன்றே இந்த விரிவான அதிரடி சோதனை தொடங்கப்பட்டது.

பால் உற்பத்தி நிலையங்கள், போக்குவரத்து வாகனங்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் என பால் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு பகுதியையும் நேரடியாகக் குறிவைத்து, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாக்குமாறு அவரது தலைமையிலான எப்டிஏ உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து துகாராம் முண்டே அளித்த பேட்டியில், ''பால் என்பது வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான குழந்தைகள், தாய்மார்கள், நோயாளிகள் மற்றும் முதியவர்களின் முக்கிய ஊட்டச்சத்துக்கான அடிப்படை அடித்தளம் ஆகும். பாலில் கலப்படம் செய்வது என்பது பொதுமக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுவதற்குச் சமம். இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் மகாராஷ்டிராவில் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது. தீவிர சோதனையைத் தொடர்ந்து சந்தைக்கு வரும் பால் மற்றும் பன்னீரின் விநியோக அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.

சந்தையில் ரசாயனங்கள் மற்றும் யூரியா கொண்டு தயாரிக்கப்பட்டு வந்த செயற்கை பால் மற்றும் போலி பன்னீர் விநியோகம் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது எங்கள் நடவடிக்கை தொடரும். மக்களும் விதிமுறைகளைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் சுகாதாரத் தரங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்" என்று முண்டே கூறினார்.''

எப்டிஏ அதிகாரிகளின் சோதனையில் மாட்டிவிடக் கூடாது என்ற பயத்தில், கலப்படக் கும்பல்கள் பாலை சாக்கடையில் கொட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வாழ்க்கையை மாற்றிய மகள், மனைவியின் பிறந்தநாள் - அபுதாபியில் மலையாளிக்கு அடித்த ரூ.68 கோடி லாட்டரி!

வாழ்க்கையை மாற்றுவது எது? முடிவில்லாத உழைப்பா அல்லது ஒரே ஒரு தருணத்தில் கதவைத் தட்டும் அதிர்ஷ்டமா? இந்த கேள்விக்கு அபுதாபியில் வசிக்கும் சுனில் குமார் சதாசிவன் என்ற இந்தியரின் வாழ்க்கை இப்போது ஒரு பதி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: `வராத குடிநீருக்கு வரி' மல்லிகைப்பூ, அல்வா, காலிக்குடம்... திமுக கவுன்சிலர் போராட்டம்!

புதுக்கோட்டை மாநகராட்சியின் 42-வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களுக்குக் குடிநீரே வழங்... மேலும் பார்க்க

ஈரோடு: பழைய இரும்பு வியாபாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பணம் - அதிர்ச்சியில் GST அதிகாரிகள்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான செல்வக்குமார் பெருந்துறை அருகில் உள்ள ஈங்கூர் பகுதியில் பழைய இரும்பு வியாபார கடை நடத்தி வருகிறார். வேறு சில தொழில்களும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந... மேலும் பார்க்க

அமெரிக்காவை உலுக்கிய லேசி பீட்டர்சன் கொலை வழக்கு: தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் புதிய ஆவணப்படம்!

அமெரிக்காவின் நீதித்துறை வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லேசி பீட்டர்சன் கொலை வழக்கில், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. தனது கர்ப்பிணி மனைவியைக் கொன்றதாகக் குற்... மேலும் பார்க்க

`தீர்ப்பு சாதகமா வரணும்' - நீதிபதியின் இருக்கையில்`வெள்ளை கடுகு' தூவி பில்லிசூனியம் வைத்த பெண்

சிவில் வழக்கு ஒன்றில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன், கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் மேடை, மேஜை மற்றும் தலைமை அதிகாரி அமரும் நாற்காலிக்கு அருகில் வெள்... மேலும் பார்க்க

'வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி' - ஓய்வூதியத் தொகையை எடுக்க சென்ற 82 வயது முதியவர் அதிர்ச்சி!

வங்கிகளில் சில நேரம் சாப்ட்வேர் பிரச்னை காரணமாக சிலரது வங்கிக்கணக்கில் அதிக பணம் இருப்பதாக கணக்கு காட்டும். இது போன்று பல முறை நடந்திருக்கிறது. பீகாரில் 82 வயது முதியவர் வங்கிக்கணக்கில் ரூ.759 கோடி இர... மேலும் பார்க்க