கிண்டி: ரயில்வே நிலைய மேம்பாலம் அருகே நிலவும் சுகாதார சீர்கேடு; முகம் சுளிக்கும்...
Parithabangal: "நான், சுதாகர், டிராவிட் நடிச்ச படங்கள் அடுத்தடுத்த வாரங்கள்ல வருவது..." - கோபி
'ஜமா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கி, நடித்திருக்கும் 'அன்பே டயானா' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா ஆகியோர் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களோடு, 'பரிதாபங்கள்' கோபியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ரிலீஸையொட்டி நம் சினிமா விகடன் சேனலுக்குக் கோபி பேட்டியளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், "'அன்பே டயானா' படத்துல பெங்களூரு பாபாங்கிற கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். படம் முழுக்க பெங்களூரு தமிழ் பேசி நடிச்சிருக்கேன். இந்தக் கதாபாத்திரத்தின் தோற்றம், அவர் நடந்துகொள்ளும் விதம் என எல்லாமே எனக்குப் புதுசு.
என்கிட்ட அப்படியான விஷயத்தை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க. இது புதுமையானதாக இருக்கும். இதுக்கு முன்னாடி வெவ்வேறு வட்டார வழக்குகள்ல எங்களுடைய 'பரிதாபங்கள்' வீடியோவுல பேசியிருப்பேன்.
ஆனா, ஒரு முழுநீள கதாபாத்திரத்துக்கு இப்படியான ஒரு மொழியில பேசுறது கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது.
இயக்குநர் பாரி இளவழகன் எனக்கு அதை அழகாகச் சொல்லியும் தந்தார். ஆனா, அவர் பேசச் சொல்வதைத் தாண்டி, நடக்குறதுலையும் பெங்களூரு தமிழ்ல இருக்கணும்னு சொல்வார் (சிரித்துக்கொண்டே)" என்றவர், "எங்களுடைய 'பரிதாபங்கள்' டீம் நடிச்சிருக்கிற படங்கள் அடுத்தடுத்த வாரங்கள்ல வெளியாவது ரொம்பவே சந்தோஷம்.
சுதாகர், டிராவிட் நடிச்சிருந்த 'இதயம் முரளி' போன வாரம் ரிலீஸ் ஆகியிருந்தது. இந்த வாரம் நான் நடிச்சிருக்கிற 'அன்பே டயானா' வெளியாகுது.
இவ்வளவு பரபரப்புக்கு மத்தியிலும் நாங்க எல்லோரும் சேர்ந்து ஷூட் பண்ணிட்டுதான் இருக்கோம். சுதாகரும் நானும் பக்கத்து பக்கத்து வீட்டுலதான் இருக்கோம். நாங்க அடிக்கடி மீட் பண்ணுவோம்.

டிராவிட் இப்போ 'சூர்யா 47' படத்தின் எழுத்து வேலைகள்ல பிஸியாக இருக்கார். ஆனா, எங்க சப்ஸ்கிரைபர்ஸுக்காகத் தொடர்ந்து சேர்ந்து வீடியோ ஷூட் பண்ணிட்டுதான் இருக்கோம்.
எங்க மூணு பேருடைய ஆசையும் நடிப்பின் பக்கம்தான் இருக்கும். அதுக்காகத்தான் இத்தனை வருஷமா உழைச்சோம். அதனால, அதைச் சார்ந்துதான் இப்போ இயங்கிட்டு வர்றோம்.
அதையும் தாண்டி, சினிமா நம்மை எங்கு கூட்டிச் செல்லுதோ, அங்கேயும் பயணிக்க ஆர்வமாக இருக்கோம். வருங்காலத்துல ஒரு படத்தை இயக்கணும்னு எங்களுக்குள்ள ஆசை இருக்கு. பார்ப்போம்!" என்றார் உற்சாகத்துடன்.











.jpg)






