கட்டா குஸ்தி 2: 'இந்த மாதிரி படம்லாம் இப்போ வர்றதே இல்ல'; பாராட்டிய ரஜினி - நெகி...
Jr NTR: அரசியலுக்கு வருகிறாரா ஜூனியர் என்.டி.ஆர்!? - என்ன சொல்கிறது அவரின் குழு?
டோலிவுட் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் குடும்பத்திற்கு ஆந்திர அரசியலோடு நீண்ட காலத் தொடர்பு உண்டு. அதனால் தான், அவரைப் பற்றி வெளியாகும் சிறு அரசியல் செய்திகூட பெரும் வைரலாகப் பேசப்படுகிறது. சமீபத்தில், "RAW NTR" என்ற பெயரில் இயங்கும் அமைப்பு ஒன்று, தங்களின் நோக்கம் மற்றும் திட்டங்கள் குறித்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தது.
ஜூலை 18-ஆம் தேதி திருப்பதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை 18 அன்று ஜூனியர் என்.டி.ஆர் தனது அரசியல் வருகையை அறிவிக்கப்போகிறார் என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.

இது குறித்து விளக்கமளித்திருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் அலுவலகம், "எங்கள் கவனத்திற்கு வந்துள்ள தகவலின்படி, 'RAW NTR' என்ற பெயரில் இயங்கும் ஒரு அமைப்பு, என்.டி.ஆருடன் தங்களுக்குத் தொடர்பு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் சில செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
என்.டி.ஆருக்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ 'RAW NTR' அமைப்பின் செயல்பாடுகளிலோ, திட்டங்களிலோ எவ்விதத் தொடர்பும், பங்களிப்பும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்த அமைப்பிற்கு என்.டி.ஆர் சார்பாகப் பேசவோ அல்லது அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.
என்.டி.ஆர் சம்பந்தப்பட்ட எந்தவொரு அறக்கட்டளை உதவிகள், மக்கள் நலத் திட்டங்கள் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவாக இருந்தாலும், அவை என்.டி.ஆர் அல்லது அவரது அதிகாரப்பூர்வக் குழுவின் மூலமாக மட்டுமே நேரடியாக அறிவிக்கப்படும்.
இந்த விவகாரத்தில் இதுவே எங்களின் இறுதியான விளக்கம். இனிமேல் பரப்பப்படும் வதந்திகளை ஊடகங்களும் ரசிகர்களும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
An official statement from Mr NTR’s office. pic.twitter.com/TrOLo0N3S4
— Vamsi Kaka (@vamsikaka) July 14, 2026
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான மறைந்த என்.டி. ராமாராவின் பேரன் தான் ஜூனியர் என்.டி.ஆர் என்பது அனைவரும் அறிந்த தகவல்தான்.
அவரது தந்தை நந்தமுரி ஹரிகிருஷ்ணா, சித்தப்பா பாலக்கிருஷ்ணா, தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, லோகேஷ் என இவரது ஒட்டுமொத்தக் குடும்பமுமே அரசியலில் கோலோச்சி வருகிறது.
ஜூனியர் என்.டி.ஆர் முன்பு தெலுங்கு தேசம் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்திருந்தாலும், தேர்தலில் போட்டியிடவோ அல்லது கட்சியில் சேரவோ ஆர்வம் காட்டியதில்லை.
தற்போது, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் 'டிராகன்' (Dragon) திரைப்படத்திலும், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் திரைப்படத்திலும் ஜூனியர் என்.டி.ஆர் பிஸியாக நடித்து வருகிறார்.

.jpg)












