செய்திகள் :

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் மோதும் அமெரிக்க - ஈரான்! போருக்கு காரணமான அமைதி ஒப்பந்தம்?

post image

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தானின் முன்னெடுப்பில் கையெழுத்தான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம், மை காய்வதற்குள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இரு தரப்பும் ஒப்பந்த விதிகளை மீறிவிட்டதாகப் பரஸ்பரம் அள்ளி வீசும் குற்றச்சாட்டுகளால், வளைகுடாப் பகுதியில் மீண்டும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதல், உலகளாவிய வர்த்தகத்தை முடக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "த்ற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது" என்று அறிவித்ததுதான் இந்தப் புதிய நெருக்கடியின் தொடக்கப்புள்ளி. ஒப்பந்தத்தில் உறுதியளித்தபடி ஈரான் நடக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், ஒருபடி மேலே சென்று, "ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதன் பாதுகாவலனாகச் செயல்படும்" என்று மிரட்டல் விடுத்தார். ட்ரம்ப்பின் இந்த ஆவேசப் பேச்சு, அமைதி முயற்சிகளுக்குச் சாவுமணி அடித்தது போல் ஒலித்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளது. "அமெரிக்காதான் ஒப்பந்தத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது" என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

"போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான 25 நாட்களுக்குள், அமெரிக்கா அதன் அத்தனை விதிகளையும் மீறிவிட்டது. ஈரானின் போக்குவரத்து உள்கட்டமைப்பு, மீன்பிடிக் கப்பல்கள், சரக்கு படகுகள் மற்றும் வானிலை ஆய்வு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இவை போர்க்குற்றங்களுக்கு நிகரான கடுமையான மீறல்கள்" என்று ஈரான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இந்த மோதலின் மையப்புள்ளியாக இருப்பது 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' 5-வது பிரிவுதான். இதன்படி, ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்து உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்றும், அடுத்த 60 நாட்களுக்கு ஈரான் எவ்விதக் கட்டணமும் வசூலிக்காமல் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் இந்த முக்கிய நீர்வழியை ஈரான் முற்றிலுமாக மூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தத்தின்படி, கட்டணம் வசூலிக்காமல் கப்பல் போக்குவரத்தை நிர்வகிக்கும் அதிகாரம் தங்களுக்கே உண்டு என்பது ஈரானின் வாதம். ஆனால், அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் இதை ஏற்கவில்லை. "கடல் போக்குவரத்தை முடக்க ராணுவ பலத்தைப் பயன்படுத்தாமல், பாதுகாப்பான பயணத்திற்கு ஈரான் உதவ மட்டுமே வேண்டும்" என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சம் என அவை வாதிடுகின்றன.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்

இந்த இழுபறிக்கு மத்தியில், ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், "ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும், ஈரானுடன் அல்லது ஈரான் இல்லாமல். நாங்கள் ஈரானிய முற்றுகையை மீண்டும் நிலைநிறுத்துகிறோம். இந்தப் பதற்றமான பகுதிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகும் செலவீனங்களை ஈடுகட்ட, அவ்வழியே செல்லும் அனைத்து சரக்குக் கப்பல்களிடமிருந்தும் 20% கட்டணம் வசூலிக்கப்படும்" என்று அறிவித்து, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியுள்ளார்.

இதற்குப் பதிலடியாக, ஈரான் அங்கீகரிக்கப்படாத வழிகளில் செல்ல முயன்றதாகக் கூறி சில கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக அறிவித்துள்ளது.

ஹார்முஸ் விவகாரம் ஒருபுறமிருக்க, பொருளாதார ரீதியான வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தின் 10-வது பிரிவின்படி, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கி, அதனுடன் தொடர்புடைய வங்கி, காப்பீடு மற்றும் கப்பல் சேவைகளுக்கும் அமெரிக்கா விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டது. இது, பல ஆண்டு காலத் தடைகளால் நலிவடைந்திருந்த ஈரான் பொருளாதாரத்திற்கு பெரும் ஆறுதலாகக் கருதப்பட்டது. ஆனால், ஜூலை 7 அன்று, ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கைகள் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" எனக் கூறி, எண்ணெய் விற்பனைக்கான உரிமத்தை அமெரிக்கா ரத்து செய்தது. இது ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல் என ஈரான் கொந்தளித்துள்ளது.

ஈரான் கச்சா எண்ணெய்
ஈரான் கச்சா எண்ணெய்

இதேபோல், ஒப்பந்தத்தின் 11-வது பிரிவின்படி, முடக்கப்பட்ட ஈரானின் நிதிய சொத்துக்களைப் பயன்படுத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டது. கத்தாரில் உள்ள வங்கிக் கணக்குகளில் இருக்கும் சுமார் 6 பில்லியன் டாலர் நிதியும் இதில் அடக்கம். ஆனால், ஜூன் 30 நிலவரப்படி, அந்த நிதி இன்னும் ஈரானுக்கு மாற்றப்படவில்லை என கத்தார் கூறியுள்ளது.

இதனிடையே, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், "விடுவிக்கப்படும் நிதி அமெரிக்கா மற்றும் கத்தாரின் மேற்பார்வையில் இருக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு சோளம், சோயாபீன்ஸ், கோதுமை போன்ற அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்கலாம்" என்று கூறியது, ஈரானை மேலும் கோபமூட்டியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே உண்டு என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

லெபனான்
லெபனான்

லெபனான் பதற்றமும் மறைமுகப் போரும்

இந்தச் சிக்கல்களுக்கு மத்தியில், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் ராணுவ நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் குற்றம்சாட்டுகிறது. மார்ச் 2 அன்று ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலின் இந்த ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது ஈரானின் வாதம்.

"இந்த ஒப்பந்தம் அதன் தெளிவற்ற தன்மையால் ஏற்கனவே நெருக்கடியில் உள்ளது. இதன் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டுமானால், ஒரு பின்தொடர் ஒப்பந்தம் அவசியம்," என்கிறார்கள் சர்வதேச அரசியல் பாரவையாளர்கள்.

அதிகாரப் போட்டியும், முரட்டுப் பிடிவாதங்களும் தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தி அமைதிப் பாதை ஆகுமா அல்லது உலகப் பொருளாதாரத்தை மூழ்கடிக்கும் புதைகுழியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!

காவல் மரணம்: சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகிக்கு ஒரு சட்டமா? - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளான குட்கா விற்பனை செய்ததாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்டபோது நல... மேலும் பார்க்க

E20 : `நீங்களோ நானோ, காரின் மைலேஜை சரியாக கணக்கிட முடியாது!' - அமைச்சர் நிதின் கட்கரி புது விளக்கம்

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகப் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு காரின் எரிபொருள் சிக்கனத்தை அதன் உரிமையாளர் தாமாகவே துல்லியமாகக் கணக்கிட முடியாது என்றும், அ... மேலும் பார்க்க

'அதிமுக சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய்தான் களவாணி!' - எடப்பாடி கடும் தாக்கு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசியிருக்கும் அவர், "அண்மையில் கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய் திமுக... மேலும் பார்க்க

`440 பேரை ஒரே இரவில் பரிசீலனை செய்தது எப்படி?' - உச்ச நீதிமன்றம் காட்டம்; சிக்கலில் எஸ்.பி.வேலுமணி!

கடந்த 2021 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தற்பொழுது... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின்போது 18 பெண்கள் இறப்பு - ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த மே மாதம் முதல் பிரசவத்திற்குப் பிறகு 18 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைக்கு உட்படுத்தப... மேலும் பார்க்க

அரியலூர்: `டாஸ்மாக் கடை மீது காட்டிய அக்கறையை மாணவர்கள் மீது காட்டவில்லை'- போலீஸ் மீது குற்றச்சாட்டு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் கடந்த 11ம் தேத... மேலும் பார்க்க