செய்திகள் :

அன்பே டயானா: "எனது பயணம் 'ஜமா' படத்தில் தொடங்கியது இல்லை, 2013-ல்..!"- பாரி இளவழகன் எமோஷனல்

post image

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அன்பே டயானா'. இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அன்பே டயானா படத்தில்...
அன்பே டயானா படத்தில்...

இப்படம் நாளை (ஜூலை.17) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அப்போது பேசிய பாரி இளவழகன், "எனது பயணம் 'ஜமா' படத்தில் தொடங்கியது இல்லை. 2013-ல் நடிப்பிற்கான வகுப்பில் சேர்ந்ததில் இருந்து எனது பயணம் தொடங்கியது.

இந்தப் பயணம் எனக்கு மிகவும் கடினமாகத் தான் இருந்தது. சின்ன சின்னக் கதாபாத்திரங்கள் செய்துதான் இந்த இடத்திற்கு வந்தேன். 'ஜமா' படம் வந்தபோது திரையரங்கில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

ஆனால் 'அன்பே டயானா' முழுக்க முழுக்க திரையரங்கிற்காக எடுக்கப்பட்ட படம் தான்.

பாரி இளவழகன்
பாரி இளவழகன்

இந்தப் படத்திற்கு கிடைக்கும் வெற்றி எனக்கு மட்டும் கிடைக்கும் ஒரு வெற்றியாக இருக்காது.

என்னை மாதிரி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிற உதவி இயக்குநர்களுக்கும், இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்குமான வெற்றியாக இருக்கும்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

Arasan: ஸ்லிமான சிலம்பரசன், ஈ.சி.ஆரில் பிரமாண்ட வடசென்னை செட்; மீண்டும் ரெடியாகும் 'அரசன்'- அப்டேட்

வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படப்பிடிப்பு இன்னும் 60 நாள்கள் மட்டுமே மீதம் இருப்பதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு இடையே சிலம்பரசன் அடுத்ததொரு கெட்டப்பிற்கு ரெடியாகிறார் என்றும் தக... மேலும் பார்க்க

இதயம் முரளி: "இது சரியான ரீ என்ட்ரியாக இருக்கும்னு தோணுச்சு" - 'கனா கானும் காலங்கள்' மோனிஷா ஷேரிங்ஸ்

'கனா காணும் காலங்கள்' தொடரின் முதல் சீசனில் சங்கவியாக நடித்து மக்களுக்கு பேவரிட்டானவர் மோனிஷா ரவிஷங்கர். அத்தொடருக்குப் பிறகு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நடிப்பிலிருந்து முழுமையாகவே விலகி... மேலும் பார்க்க

"சர்க்கார் படப்பிடிப்பில் சொன்னதை நினைத்து சிரித்தோம்" - விஜய்யைத் தன் கணவருடன் சந்தித்த வரலட்சுமி

திரைபிரபலங்கள் தொடர்ந்து முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கணவருடன் முதல்வரைச் சந்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்... மேலும் பார்க்க

``விவேக் சார் இருந்திருந்தால் நான் எப்பவோ இயக்குநர் ஆகியிருப்பேன்!" - உருகும் கிளி ராமச்சந்திரன்

நடிகர் விவேக் உடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்... மேலும் பார்க்க

"நானும் பகத் பாசிலும் எப்போதும் அதைப் பற்றி பேசுவோம்!" - 'இதயம் முரளி' கேமியோ பற்றி மாளவிகா மோகனன்

'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'இதயம் முரளி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப்... மேலும் பார்க்க

Harshath Khan: "என்னைப் பார்த்து யாரும் இன்ஸ்பையர் ஆகாதீங்க!" - ஹர்ஷத் கான் பேட்டி

2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ஹர்ஷத் கான் ரெட் கார்பெட் வரவேற்பில் நம்மிடையே சுவார... மேலும் பார்க்க