செய்திகள் :

'40 நிமிட அமைச்சரவை கூட்டம்; கடுமையாக எச்சரித்த முதல்வர் விஜய்!' - ஜெர்க் ஆன அமைச்சர்கள்!

post image

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் அமைச்சர்களுக்கு சில கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

CM Vijay
CM Vijay

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தவெகவின் சீனியர்கள் சிலர், 'கடந்த மாதம் அமைச்சரவை கூட்டம் நடந்த போதே 'நாம் க்ளீன் கவர்மெண்டை நடத்த வந்திருக்கிறோம். ஊழலற்ற ஆட்சியை கொடுத்து மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டுமென முதல்வர் உறுதியாக கூறியிருந்தார். ஆனால், கடந்த ஒரு மாதத்தில் சில அமைச்சர்களின் மீது கமிஷன் மற்றும் முறைகேடு புகார்களை உளவுத்துறை நோட் போட்டு முதல்வரிடம் கொடுத்திருக்கிறது.

இதனால் அமைச்சர்களை எச்சரிக்கும் தொனியில்தான் முதல்வர் கூட்டத்துக்கே வந்தார். மொத்தம் 40 நிமிடங்கள் கூட்டம் நடந்தது. பட்ஜெட் சார்ந்து முக்கியமான துறைகளின் எதிர்பார்ப்பு மற்றும் தேவை குறித்து விரிவாக பேசப்பட்டது. உத்தண்டி மேம்பால திட்டத்தின் பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதிய டெண்டர் விடுவதற்கான ஏற்பாடுகளையும் முதல்வர் செய்ய சொல்லியிருக்கிறார். இதுபோக நீர்வளத்துறையின் திட்டங்கள் சிலவற்றுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. சமீபமாக சில அமைச்சர்கள் மீது வந்த புகார்களை கண்டு முதல்வர் கொதித்து போயிருக்கிறார். அதனால்தான் 'லஞ்சம், ஊழல் என எதாவது புகார் வந்தால் பொறுத்துக் கொள்ளமாட்டேன். தெரிந்தவர், தெரியாதவர் என யாராக இருந்தாலும் அமைச்சரவையிலிருந்து தூக்கி வீசி விடுவேன்' என கறாராகவே கூறியிருக்கிறார்.

அமைச்சரவை கூட்டம்
அமைச்சரவை கூட்டம்

உத்தரவை மீறி எதாவது நடந்தால் விளைவுகளை எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள் எனவும் எச்சரித்திருக்கிறார்" என்றனர்.

"அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை; வன்னிய மக்களை வைத்து..!"- பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்

"பாமகவினர் அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை. வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும்"- என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் பேசியிருக்கிறார். சேலத்தில் தன... மேலும் பார்க்க

பழநி : "முன்னாள் அமைச்சர் மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார்.!"- நிர்மல் குமார் பகீர்

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூலை.16) நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "இன்று நடைபெற்றது பட்ஜெட்... மேலும் பார்க்க

விழுப்புரம்: குப்பைக் கிடங்காக மாறிய திண்டிவனம் மேம்பாலம்! - கண்டுகொள்ளாத நகராட்சி; தீர்வு?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மேம்பாலத்தை, நகரின் இதயப்பகுதி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை பொதுப் போக்குவரத்துடன் இணைக்கும் பாலம... மேலும் பார்க்க

’கோவை தவெக-வில் உட்கட்சிப் பூசலா?’ – சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்!

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் நேற்றிரவு கணியூர் பகுதியில், தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு வாகனத்தில் சென்றபடி நன்றி தெரிவித்தார். அப்போது அங்கு திரண... மேலும் பார்க்க

"உங்கள் பிரதமரின் வயது என்ன? நான் எப்போதாவது கேட்டேனா?" - மம்தா பானர்ஜி தாக்கு

15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு, இந்த முறை சொந்த தொகுதியிலேயே வெற்றியைத் தரவில்லை மக்கள். ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்திற்குள் 'நோ' ஸ்மார்ட் வாட்ச்; வாகனத்தில் 10 கி.மீ மேல் வேகம் 'நோ'; MP-களுக்கான ரூல்ஸ்!

வருகிற ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை, நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.இந்தக் கூட்டத்தொடர்களை அவை தலைவர்கள் வழிநடத்துவார்கள்... நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள்.... மேலும் பார்க்க