செய்திகள் :

'அமெரிக்காவிடம் பாகுபாடு' - சிறப்பு அதிகாரத்தின் கீழ், கனடா மீது 50% வரி விதித்த ட்ரம்ப்!

post image

சில கனடா பொருள்கள் மீது 50 சதவிகித வரியை விதித்து உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

கனடா மீது அமெரிக்கா சொல்லும் குற்றச்சாட்டு என்ன?

கனடா நாடு, அமெரிக்காவின் மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகன பாகங்கள் ஏற்றுமதிக்கு எதிராகப் பாகுபாடு காட்டியும், நியாயமற்ற மற்றும் சமமற்ற வரிகளை விதித்தும் அமெரிக்க வர்த்தகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பிற நாடுகளின் வர்த்தகத்தில் பின்பற்றப்படுவதில்லை... பிற நாடுகளின் வர்த்தகத்திற்குக் கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது கனடா.

ஏற்றுமதி-இறக்குமதி
ஏற்றுமதி-இறக்குமதி

இதனால், அமெரிக்க மோட்டார் வாகனங்கள் மீது கனடா விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள் நியாயமற்றவை. இது அமெரிக்க வர்த்தகத்திற்குப் பாரத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு சட்டத்தின் படி...

கனடாவின் இந்தப் பாகுபாட்டிற்கு எதிராக அமெரிக்காவின் 1930-ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டத்தின் படி, அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிராக ஒரு வெளிநாடு காட்டும் பாகுபாடு அல்லது சமமற்ற கட்டுப்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளை ஈடுகட்டுவதற்காக, அந்த வெளிநாட்டின் இறக்குமதிகள் மீது கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது.

இதனால்...

வருகிற ஆகஸ்ட் 19-ம் தேதி முதல், இதில் குறிப்பிட்ட கனடா பொருள்களுக்கு 50 சதவிகித கூடுதல் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட உள்ளது.

இந்த வரி, பிரிவு 338-ன் கீழ் அமல்படுத்தப்பட உள்ளது. காரணம், இந்தப் பிரிவின் கீழ், ஒரு வெளிநாட்டின் சமமற்ற வரி விதிப்பு அல்லது பாகுபாட்டினால் அமெரிக்க வர்த்தகத்திற்கு ஏற்படும் எந்தவொரு சுமை அல்லது பாதிப்பையும் ஈடுகட்ட, 50 சதவீதத்திற்கு மிகாமல் கூடுதல் மதிப்புக்கூட்டு வரிகளை அறிவிக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு.

பாடகர் அறிவு கைது: ``பாஜக என்ற பெயரைச் சொல்லக் கூட தயங்குகிறது இந்த அரசு" - கனிமொழி கண்டனம்

முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை தி... மேலும் பார்க்க

'அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்' - தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்; ஹை அலர்ட்டில் உளவுத்துறை!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் CJP கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் CJP கட்சியின் தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.Cockroach Protestநீட் வினாத்தாள் கசிவுக்க... மேலும் பார்க்க

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் து... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" - ராகுல் காந்தி கேள்வி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க