செய்திகள் :

"நான் திருமணம் செய்த பெண்கள் மதம் மாறவில்லை" - பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு ஆமீர் கான் பதிலடி

post image

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த கெளரி என்ற பெங்களூரு பெண்ணை குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

இத்திருமணம் குறித்து மகாராஷ்டிரா பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ரானே அளித்திருந்த பேட்டியில், ஆமீர் கான் காதல் ஜிஹாத்தில் ஈடுபடுவதாகவும், காதல் ஜிஹாத்தின் தூதர் என்றும் பேசி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.

தற்போது இந்தச் சர்ச்சைக்கு ஆமீர் கான் பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், ''எனது குடும்பம் எப்போதும் மதங்களுக்கு இடையேயான உறவுகளை ஏற்றுக்கொள்கிறது. எனது திருமணங்கள் எதுவும் மத மாற்றத்தில் ஈடுபடவில்லை.

ஆமீர் கான்

எனது குடும்ப உறுப்பினர்கள் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இத்திருமணத்தில் எந்த மத மாற்றமும் இருந்ததில்லை. உண்மை என்னவென்றால், எங்களுடைய குடும்பம் மிகவும் வித்தியாசமானது. எனது சகோதரிகள் இருவரும் இந்துக்களை திருமணம் செய்தவர்கள்.

எனது மகளும் இந்துவை மணந்துள்ளார். எனது உறவினர் மன்சூர் ஒரு கிறிஸ்தவரை மணந்துள்ளார். நான் சிவில் திருமணம் செய்து கொண்டதால் கௌரி, கிரண் அல்லது ரீனா மூவரும் தங்கள் மதத்தை மாற்றவில்லை. கௌரி இந்து இல்லை, அவர் பிறப்பால் கிறிஸ்தவர். ஆனால் கிறிஸ்தவ மதத்தை அவர் பின்பற்றுவதும் இல்லை'' என்று குறிப்பிட்டார்.

ஆமீர் முதலில் ரீனா தத்தாவை 1986ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் 2002 விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் 2005ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் கிரண் ராவைத் திருமணம் செய்து 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர்.

கடந்த ஆண்டு கெளரியைத் தனது துணை என்று ஆமீர் கான் அறிவித்து தற்போது திருமணம் செய்து கொண்டார். ஆனால் மூன்று பேருமே இஸ்லாம் மதத்திற்கு மாறி பெயரை மாற்றிக்கொள்ளவில்லை. அதேசமயம் விவாகரத்து செய்து கொண்ட இரு பெண்களும் ஆமீர் கானுடன் ஒரே கட்டிடத்தில் வேறு வேறு வீட்டில் வசித்து வருகின்றனர்.

``அமீர் கானைக் கொல்பவருக்கு ரூ.5 கோடி பரிசு" - பகிரங்க மிரட்டல் விடுக்கும் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகுக் கலை நிபுணரான கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். மும்பையில் பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையான... மேலும் பார்க்க

'ஏழைகளுக்கு உதவுவார் எனக் கேள்விப்பட்டேன்' - சல்மான் கானிடம் பண உதவி பெற வந்த பெண் மும்பையில் மீட்பு

மும்பையில் பாலிவுட் நடிகர்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆசையில் தினமும் ஏராளமானோர் மும்பைக்கு வந்துகொடிருக்கின்றனர். அது போன்று நடிகர் சல்மான் கானைச் சந்திக்க அசாமில் இருந்து மும்பை வந்து தெருக்களில் அநாதை... மேலும் பார்க்க

`பத்து லட்சத்தில் ஒன்று; 256 மணிநேரம்,131 ஊழியர்களின் உழைப்பு' - மனைவிக்கு ஆமீர் கான் கொடுத்த பரிசு

பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது நீண்ட நாள் துணையான கெளரி ஸ்ப்ராட் என்பவரை கடந்த 5ம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் அமீர்கானின் ... மேலும் பார்க்க

Kriti Sanon: "நான் என் கருமுட்டையை உறையவைத்துள்ளேன்!" - கீர்த்தி சனூன்

பாலிவுட் நடிகை கீர்த்தி சனூன் தனது கருமுட்டைகளைச் சேமித்து வைத்திருப்பதாகச் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியவர், இந்த தகவலைப் பகிர்ந... மேலும் பார்க்க

Kajal Agarwal: "அது தூக்கமற்ற இரவுகளைத்தான் தந்தது..!" - காஜல் அகர்வால் அதிர்ச்சி!

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படம், உணவு கலப்படங்கள் பற்றிய விஷயங்களைப் பேசும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. The India Storyஇத்திரைப்படத்தின் கதையைக் கேட்டபோத... மேலும் பார்க்க

"உனக்கு என்ன நஷ்டம்? அவர் என் கணவர்" - நடிகர் கோவிந்தா குறித்த கேள்விக்கு மனைவி காட்டம்

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் பிரியப்போகிறார்கள் என்றும் அடிக்கடி செய்தி வெளியாகி வருகிறது. தற்போது இயக்குநர் பரா கா... மேலும் பார்க்க