செய்திகள் :

`லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம்' - வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியிருக்கும் தமிழ்நாடு அரசு!

post image

தமிழக அரசு ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கோரினால், அதுகுறித்து 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு செய்தி அனுப்பி இனி பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

ஊழலை ஒழிப்பதற்காகத் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து அரசுத் துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வுப் பலகைகள் பொதுமக்களுக்குத் தெளிவாகத் தெரியும்படி வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

லஞ்சம்
லஞ்சம்

இந்த வாட்ஸ்அப் எண் அனைத்து அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்களிலும், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இணையப் பக்கத்திற்கான லிங்குடன் (Link) பதிவேற்றம் செய்யப்படும்.

முன்னதாக, அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் பலகைகளை வைக்குமாறு அரசாணைகளும் கடிதங்களும் அனுப்பப்பட்ட போதிலும், பல அலுவலகங்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லை. பல அலுவலகங்களில் இந்த விழிப்புணர்வுப் பலகைகள் சரிவர வைக்கப்படவில்லை என்பது தற்போதைய அரசின் கவனத்திற்கு வந்தது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே, புதிய சுற்றறிக்கையின்படி, 'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாகும்' என்ற வாசகத்தை அனைத்து அலுவலகங்களிலும் கட்டாயமாகத் தெரியப்படுத்த வேண்டும் எனத் துறைத் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றறிக்கையுடன், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அமைய வேண்டிய 'லஞ்ச ஒழிப்பு முழக்கம்' மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கும் வழிமுறைகள் அடங்கிய மாதிரிப் பலகை வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது.

லஞ்சம்
லஞ்சம்

லஞ்சம் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு (DVAC) dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 044-22321090, 22321085, 22310989 மற்றும் 22342142 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாகவோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

நேரடிப் புகார்கள் அல்லது தபால் மூலமான புகார்களை அனுப்ப வேண்டிய முகவரி:

லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC), எண். 293, எம்.கே.என் சாலை, ஆலந்தூர், சென்னை - 600016.

தமிழகத்தில் அதிவிரைவு சாலைகள் அமைக்க திட்டம்; விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க உத்தரவு

தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அதிவிரைவு சாலைகள் (Expressways) அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்... மேலும் பார்க்க

``ரூ. 104 கோடி மதிப்பிலான 1.27 கோடி படுக்கை விரிப்புகள் திருட்டு" - இந்திய ரயில்வே தகவல்

இந்திய ரயில்வேயின் ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் பெட்ஷீட்கள், துண்டுகள், தலையணை உறைகள் மற்றும் போர்வைகள் போன்ற படுக்கை விரிப்பு பொருட்கள் பெருமளவில் திருடப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமை... மேலும் பார்க்க

சாதியும் ஆணவமும் நம் பிள்ளைகளைக் கொலை செய்வதைத் தடுப்போம்!

இலக்கியத்திலும் சினிமாக்களிலும் காதலைக் கொண்டாடுகிற நம் சமூகம், எதார்த்தத்தில் அதற்கு எதிராகவே செயல்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாள்களில் மட்டும் காதலித்த குற்றத்துக்காக பல இளம் உயிர்கள் பறிபோயுள்... மேலும் பார்க்க

விகடன் செய்தி எதிரொலி: பயன்பாட்டுக்கு வந்த பூம்புகார் கடற்கரை கழிவறை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் பகுதியானது வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகும். இங்கு கடற்கரை மட்டுமன்றி, இரட்டைக் காப்பியங்களைப் பறைசாற்றும் சிலப்பதிகார கலைக்கூடமும் இடம்பெற்றுள்ளது.... மேலும் பார்க்க

``எழுத்தாளர் பூமணியின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை" - முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமையும், சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான பூமணி (79), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார்.கரிசல் ம... மேலும் பார்க்க

ITR Filing சீசன் இது; இன்னும் ஆதார் - பான் எண்ணை இணைக்கவில்லையா? என்ன, எப்படி செய்யலாம்? | How to

ஆதார் கார்டும், பான் கார்டும் இணைக்க வேண்டும். அப்படியில்லை என்றால், பான் கார்டு செல்லாது என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த வலியுறுத்தல் எப்போது முக்கியமோ, இல்லையோ, இப்போது இதை கட... மேலும் பார்க்க