செய்திகள் :

TVK: லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி? ``இதுதான் ஊழல் ஒழிப்பு லட்சணம்" - சாடும் டிடிவி தினகரன்

post image

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சித் தலைவரும், த.வெ.க நிர்வாகியுமான வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இது குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் தளப் பக்கத்தில், ``தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றார் போல திரைப்பட வசனங்களை அடுக்கிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது? எப்படி ஒழிக்கப் போகிறார்?

ஏற்கனவே ஊழல் புகார்களுக்கு உள்ளாகி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க-வில் இருந்து விலகி, தவெகவில் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட திரு.வீராசாமி அவர்கள், தற்போது ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், அவர் மீது ஏற்கனவே குவிந்திருக்கும் ஊழல் புகார்களையும், பொதுமக்கள் அவர் மீதி வைத்த குற்றச்சாட்டுகளையும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

தவெக நிர்வாகி வீரா
தவெக நிர்வாகி வீரா

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் சொந்தமான கோயில் நிலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது தவெக நிர்வாகி ஒருவர் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், தவெகவின் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றின் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

எனவே, ஒப்பந்ததாரரிடம் தவெக நிர்வாகி லஞ்சம் வாங்குவது போல சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகளை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி, லஞ்சம் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் ஊழல் ஒழிப்பைப் பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹார்முஸ் நீர்ச்சந்தியை வைத்து `சதுரங்க வேட்டை' ஆடும் அமெரிக்கா, ஈரான் - பின்னணி என்ன?

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேதான் போர். ஆனால், இந்த மூன்று நாடுகளைத் தாண்டி, மொத்த உலக நாடுகளும் பாதித்துள்ளது. இதற்கு காரணம், 'ஹார்முஸ் நீர்ச்சந்தி'. இந்தப் போர் தொடங்கியதில... மேலும் பார்க்க

``செத்த பாம்பை அடிச்சதாலதான் கருநாகம் உள்ளே வந்துருச்சி" - என்ன சொல்கிறார் ஆர்.எஸ். பாரதி?

காமராஜன் பிறந்தநாளை முன்னிட்டு ஆலந்தூரில் உள்ள அவரது சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தி.மு.க அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களைச் சந்தித்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு சரத் பவார் கட்சி ஆதரவா? மகள் சுப்ரியா சுலே சொல்வது என்ன?

தொகுதி சீரமைப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே பாராளுமன்றத்தில் ஒரு முறை இம்மசோதா கொண்டு வரப்பட்டு தோல்வி அடைந்துவிட்டது. இப்போது மூன்றி... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு; ஆபரேஷன் ‘Toofan’ என்றால் என்ன? - கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஆபரேஷன் Toofan’ குறித்து தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தாலா ஆலோசனை நடத்தினார். சென்னை ... மேலும் பார்க்க

"2 மணி நேரம் பயணம்; கையூட்டு இல்லை; அந்தக் காவலர்தான் உண்மையான ஹீரோ!" - நெகிழும் அண்ணாமலை

நாளைய பத்திரிகையாளர்களை உருவாக்கும் விகடன் குழுமத்தின் கனவுத் திட்டமான 'மாணவப் பத்திரிகையாளர்' திட்டத்தின் கூட்டுப் பயிற்சி முகாம், ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. மாந... மேலும் பார்க்க

நலங்கிள்ளியின் ’ஆர்எஸ்எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்' நூலுக்கு தடை விதிக்க கோரிக்கை – காரணம் என்ன?

கோவை புத்தகத் திருவிழா வருகின்ற 17ம் தேதியன்று துவங்க உள்ளது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த எதிர் வெளியீடு சார்பில், மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதிய ’ஆர்.எஸ்.எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன... மேலும் பார்க்க