செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு சரத் பவார் கட்சி ஆதரவா? மகள் சுப்ரியா சுலே சொல்வது என்ன?

post image

தொகுதி சீரமைப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே பாராளுமன்றத்தில் ஒரு முறை இம்மசோதா கொண்டு வரப்பட்டு தோல்வி அடைந்துவிட்டது.

இப்போது மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஆதரவைத் திரட்டுவதற்காக பா.ஜ.க ஒவ்வொரு கட்சியிலும் எம்.பி.க்களை மறைமுகமாக தன் பக்கம் இழுத்து வருகிறது.

ஏற்கனவே உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்குத் தாவிவிட்டனர்.

இதே போன்று மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் கணிசமான எம்.பி.க்களைத் தங்களது கூட்டணிக்கு பா.ஜ.க கொண்டு வந்துவிட்டது. அடுத்ததாக மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சி பக்கம் பா.ஜ.க-வின் பார்வை திரும்பி இருக்கிறது.

சரத்பவார்
சரத்பவார்

சரத்பவார் கட்சிக்கு மக்களவையில் 8 எம்.பி.க்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ஆனால் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்குத் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) ஆதரவளிப்பதாகக் கூறப்படும் வதந்திகளையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைய இருப்பதாக் கூறப்படும் கருத்துகளையும் அக்கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்த விவகாரத்தை 'ஒரு தேநீர்க் கோப்பையில் எழுந்த புயல்' என்றும், இது குறித்து எந்த மீடியாவிற்கும் நாங்கள் செய்தி கொடுக்கவில்லை என்றும், மசோதா இன்னும் விவாதத்திற்கு வரவில்லை என்றும், வரும்போது 24 மணி நேரத்திற்கு முன்பு அது பற்றி முடிவு எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக இது குறித்து சுப்ரியா சுலே இது குறித்து தனது தந்தை சரத்பவார், கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெயந்த் பாட்டீல், சசிகாந்த் ஷிண்டே ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

சுப்ரியா சுலே இது குறித்து மேலும் கூறுகையில், ''மத்திய அரசு பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு குறித்து விவாதிக்கத் தயாராக இருந்தால், அந்தத் திட்டத்தை கட்சி ஆராயும்.

50 சதவீத தொகுதி இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க அரசாங்கம் சம்மதித்தால் தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து நாங்கள் பரிசீலிப்போம்'' என்றும் தெரிவித்தார்.

சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே

பா.ஜ.க தலைமையிலான கூட்டணியுடன் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) நெருங்கி வருவதாக வெளியாகும் செய்திகளை மறுத்த சுப்ரியா சுலே, எங்களுக்கு பா.ஜ.க கூட்டணி அல்லது காங்கிரஸிடம் இருந்து எந்த வாய்ப்பும் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளன என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக நேற்று இரவு தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். வரும் 20 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் புதிய தொகுதி எல்லை மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்முஸ் நீர்ச்சந்தியை வைத்து `சதுரங்க வேட்டை' ஆடும் அமெரிக்கா, ஈரான் - பின்னணி என்ன?

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேதான் போர். ஆனால், இந்த மூன்று நாடுகளைத் தாண்டி, மொத்த உலக நாடுகளும் பாதித்துள்ளது. இதற்கு காரணம், 'ஹார்முஸ் நீர்ச்சந்தி'. இந்தப் போர் தொடங்கியதில... மேலும் பார்க்க

``செத்த பாம்பை அடிச்சதாலதான் கருநாகம் உள்ளே வந்துருச்சி" - என்ன சொல்கிறார் ஆர்.எஸ். பாரதி?

காமராஜன் பிறந்தநாளை முன்னிட்டு ஆலந்தூரில் உள்ள அவரது சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தி.மு.க அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களைச் சந்தித்... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு; ஆபரேஷன் ‘Toofan’ என்றால் என்ன? - கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஆபரேஷன் Toofan’ குறித்து தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தாலா ஆலோசனை நடத்தினார். சென்னை ... மேலும் பார்க்க

TVK: லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி? ``இதுதான் ஊழல் ஒழிப்பு லட்சணம்" - சாடும் டிடிவி தினகரன்

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சித் தலைவரும், த.வெ.க நிர்வாகியுமான வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.முதல்வர... மேலும் பார்க்க

"2 மணி நேரம் பயணம்; கையூட்டு இல்லை; அந்தக் காவலர்தான் உண்மையான ஹீரோ!" - நெகிழும் அண்ணாமலை

நாளைய பத்திரிகையாளர்களை உருவாக்கும் விகடன் குழுமத்தின் கனவுத் திட்டமான 'மாணவப் பத்திரிகையாளர்' திட்டத்தின் கூட்டுப் பயிற்சி முகாம், ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. மாந... மேலும் பார்க்க

நலங்கிள்ளியின் ’ஆர்எஸ்எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்' நூலுக்கு தடை விதிக்க கோரிக்கை – காரணம் என்ன?

கோவை புத்தகத் திருவிழா வருகின்ற 17ம் தேதியன்று துவங்க உள்ளது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த எதிர் வெளியீடு சார்பில், மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதிய ’ஆர்.எஸ்.எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன... மேலும் பார்க்க