செய்திகள் :

"2 மணி நேரம் பயணம்; கையூட்டு இல்லை; அந்தக் காவலர்தான் உண்மையான ஹீரோ!" - நெகிழும் அண்ணாமலை

post image

நாளைய பத்திரிகையாளர்களை உருவாக்கும் விகடன் குழுமத்தின் கனவுத் திட்டமான 'மாணவப் பத்திரிகையாளர்' திட்டத்தின் கூட்டுப் பயிற்சி முகாம், ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது.

மாநிலம் முழுவதிலிருந்தும் தேர்வான 65 மாணவர்கள் இதில் பங்கேற்று, முன்னணி ஆளுமைகளுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெற்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை, மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை
அப்போது 'உங்க வாழ்க்கையை படமாக எடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். யார் ஹீரோவாக நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் நினைக்கிறீர்கள்?' என்று மாணவப் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு...

சிரித்துக்கொண்டே… ”அந்த அளவிற்கு நான் வொர்த் இல்லை என்று நினைக்கிறேன். நான் பெங்களூரில் காவல் துணை ஆணையராகப் பணியாற்றும்போது இரவு ரோந்துப் பணிகளுக்குச் செல்வேன். அப்போது ஒரு காவலருடன் பேசினேன். இரண்டு மணி நேரம் பயணித்து வேலைக்கு வருவதாகக் கூறினார். ‘ஏன் நகர்த்திலேயே வீடு எடுத்து தங்கலாமே, எதற்கு வீணாக அலைகிறீர்கள்?' என்று கேட்டேன்.

அதற்கு அவர், ’இல்ல சார் சிட்டிக்குள்ள வாடகைக்கு எடுத்து தங்கினால், வாங்குற சம்பளத்துல 15,000 ரூபாய்க்கு மேல வாடகைக்குப் போயிரும். ஆனா, இப்போ ரெண்டு மணி நேரம் பயணம் என்றாலும் வாடகை குறைவுதான்' என்றார். அவர் நினைத்திருந்தால் கையூட்டு வாங்கி சூழலைச் சமாளித்திருக்கலாம். ஆனால் அவர் நேர்மையுடன் நடந்து கொண்டார்.

அந்த நேர்மை கொண்டாடப்பட வேண்டியது. அவரைப் போலவே இன்னும் எத்தனையோ நேர்மையான காவலர்கள் இருக்கிறார்கள். நான் காவல் பணியில் இருந்து வெளியே வந்ததும், ‘ஸ்டெப்பிங் பியாண்டு காக்கி’ (Stepping Beyond Khaki) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினேன். உங்களின் எழுத்து அவரைப் போன்ற நேர்மையான காவலர்களைப் படமாக மாற்ற உதவ வேண்டும்" என்றார்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு சரத் பவார் கட்சி ஆதரவா? மகள் சுப்ரியா சுலே சொல்வது என்ன?

தொகுதி சீரமைப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே பாராளுமன்றத்தில் ஒரு முறை இம்மசோதா கொண்டு வரப்பட்டு தோல்வி அடைந்துவிட்டது. இப்போது மூன்றி... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு; ஆபரேஷன் ‘Toofan’ என்றால் என்ன? - கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஆபரேஷன் Toofan’ குறித்து தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தாலா ஆலோசனை நடத்தினார். சென்னை ... மேலும் பார்க்க

TVK: லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி? ``இதுதான் ஊழல் ஒழிப்பு லட்சணம்" - சாடும் டிடிவி தினகரன்

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சித் தலைவரும், த.வெ.க நிர்வாகியுமான வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.முதல்வர... மேலும் பார்க்க

நலங்கிள்ளியின் ’ஆர்எஸ்எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்' நூலுக்கு தடை விதிக்க கோரிக்கை – காரணம் என்ன?

கோவை புத்தகத் திருவிழா வருகின்ற 17ம் தேதியன்று துவங்க உள்ளது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த எதிர் வெளியீடு சார்பில், மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதிய ’ஆர்.எஸ்.எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன... மேலும் பார்க்க

``நான் தமிழனே இல்லை; என் பெயர் திருமாவளவன் இல்லை எனப் பிரசாரம் செய்கிறார்கள்" - திருமாவளவன்

கடலூரில் விசிக சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``ஆரம்பக் காலத்தில் (90-களில்) விசிகவின் கருத்துக்கள் மீது போதிய ஊ... மேலும் பார்க்க

TNRERA கலைப்பு: 6 மாதங்களுக்கு இடைக்கால நிர்வாகம்! - வீடு வாங்குபவர்களுக்கு பாதிப்பு இருக்குமா?

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமான `TNRERA' அமைப்பை தமிழக அரசு உடனடியாக கலைத்து, அதன் அதிகாரங்களை மேற்கொள்ள இடைக்காலமாக மூன்று பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந... மேலும் பார்க்க