செய்திகள் :

நலங்கிள்ளியின் ’ஆர்எஸ்எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்' நூலுக்கு தடை விதிக்க கோரிக்கை – காரணம் என்ன?

post image

கோவை புத்தகத் திருவிழா வருகின்ற 17ம் தேதியன்று துவங்க உள்ளது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த எதிர் வெளியீடு சார்பில், மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதிய ’ஆர்.எஸ்.எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்’ என்ற சுயசரிதை புத்தகமும் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த புத்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சண்முகம் என்ற வழக்கறிஞர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

நலங்கிள்ளி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர் அல்ல.

இது குறித்து சண்முகம் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ் என்பது நாடு முழுவதும் லட்சக்கணக்கான உறுப்பினர்களையும், தன்னார்வலர்களையும் கொண்ட நன்கு அறியப்பட்ட ஒரு சமூக மற்றும் கலாச்சார அமைப்பாகும். ஆர்.எஸ்.எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன் நூலின் ஆசிரியர் நலங்கிள்ளி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் அல்ல.

இந்த நூலின் தலைப்பை வைத்து பார்க்கும் போதே, இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு எதிரான கருத்துகளை கொண்ட புத்தகம் என்பது தெரியவருகிறது. இந்த நூல் வெளியிடப்பட்டால் ஆர்.எஸ்.எஸ். பற்றி பொதுமக்களிடத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தவும், நற்பெயரை கெடுக்கவும், பொது அமைதி மற்றும் நல்லிணத்தை குலைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த புத்தகத்திற்கு காவல் துறையினர் தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் காவல் துறையினர் நடவடிக்கையை பொறுத்து உயர் நீதிமன்றத்தை நாடுவோம்” என்றார்.

நலங்கிள்ளி
நலங்கிள்ளி

பொய் எதுவும் சொல்லவில்லை!

எழுத்தாளர் நலங்கிள்ளியிடம் விளக்கம் கேட்டபோது, “நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தது உண்மை. நான் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன். பிராமணர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்துள்ளேன். பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில், அதில் கலந்து கொள்ள ஆசைப்பட்டவன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக, பல அமைப்புகளை எதிர்த்து வாதாடியுள்ளேன்.

நான் எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்டேன், பின்னர் எழுந்த விமர்சனங்களால் எப்படி அந்த அமைப்பில் இருந்து வெளியேறினேன் என்பதை இந்த புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தில் நான் பொய் எதுவும் சொல்லவில்லை. கருத்தை கருத்தால்தான் எதிர் கொள்ள வேண்டும். புத்தகத்திற்கு தடை கேட்பது அபத்தமானது. தடை கேட்டு நீதிமன்றம் சென்றாலும் வழக்கு நிற்காது. இந்த புத்தகத்தை படிப்பவர்கள் உண்மையை அறிந்து மனம் மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

அனுஜ்
அனுஜ்

காட்டுமிராண்டிதனம்

எதிர் வெளியீடு உரிமையாளர் அனுஜ், “ஒருவரின் வாழ்க்கை வரலாறை சொல்ல அவருக்கு முழு உரிமை உள்ளது. புத்தகத்தை முழுமையாக படிக்காமல் வெறும் தலைப்பை மட்டும் வைத்து முன்முடிவு எடுத்து தடை கோருவது நியாயமல்ல. இப்புத்தகத்திற்கு எதிர் கருத்து இருந்தால், அவ்வமைப்பினர் அக்கருத்துகளை புத்தகமாக எழுதலாம். ஆனால் இந்த 21ம் நூற்றாண்டிலும் புத்தகத்திற்கு தடை கேட்பது காட்டுமிராண்டிதனம்” என்றார், காட்டமாக.

``நான் தமிழனே இல்லை; என் பெயர் திருமாவளவன் இல்லை எனப் பிரசாரம் செய்கிறார்கள்" - திருமாவளவன்

கடலூரில் விசிக சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``ஆரம்பக் காலத்தில் (90-களில்) விசிகவின் கருத்துக்கள் மீது போதிய ஊ... மேலும் பார்க்க

TNRERA கலைப்பு: 6 மாதங்களுக்கு இடைக்கால நிர்வாகம்! - வீடு வாங்குபவர்களுக்கு பாதிப்பு இருக்குமா?

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமான `TNRERA' அமைப்பை தமிழக அரசு உடனடியாக கலைத்து, அதன் அதிகாரங்களை மேற்கொள்ள இடைக்காலமாக மூன்று பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பாஜக கூட்டணியில் சேரும் சரத்பவார்?முதல்வருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

மகாராஷ்டிராவில் முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. 2023ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிரிந... மேலும் பார்க்க

மகனுக்காக எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க நிதின் கட்கரி முயற்சி? 4 யூடியூப்பர்கள் மீது வழக்கு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாகனங்களில் எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். பெட்ரோல் மற்றும் டீசலுடன் எத்தனாலை குறிப்பிட்ட அளவு கலந்துப் பயன்படுத்தலாம் என்று கூறி வருகிறா... மேலும் பார்க்க

'ஆபரேஷன் Toofan' - தமிழக முதல்வரை திடீரென சந்திக்கும் கேரள உள்துறை அமைச்சர்! - பின்னணி என்ன?

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை கேரள உள்துறை அமைச்சர் ரமேஶ் சென்னிதலா இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசிக்கவிருக்கிறார். இந்த சந்திப்பின் மையமாக 'ஆபரேஷன் Toofan' இருக்கப்போவதாக கூறுகிறார்கள். இதன்... மேலும் பார்க்க