செய்திகள் :

மகாராஷ்டிரா: பாஜக கூட்டணியில் சேரும் சரத்பவார்?முதல்வருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

post image

மகாராஷ்டிராவில் முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

2023ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிரிந்த பிறகு கட்சி சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையில் கட்சி தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகிறது. அஜித்பவார் உயிரோடு இருந்தபோது இரு அணிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் அவரது திடீர் மரணம் இந்த பேச்சுவார்த்தையை நிறுத்தி இருக்கிறது.

இதனால் சரத்பவார் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்தார். இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் சரத்பவார் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

ஆனால் சரத்பவார் கட்சியில் இருக்கும் 10 எம்.எல்.ஏ.க்களில் சிலர் மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சரத்பவார்
சரத்பவார்

குறிப்பாக சரத்பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் இதில் தீவிரம் காட்டினார். சரத்பவார் காங்கிரஸ் கட்சியில் இணையும் பட்சத்தில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க கூட்டணிக்குச் செல்லவும் தயாராக இருந்தார். இதையடுத்து சரத்பவார் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது.

நேற்று இரவு சரத்பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுனில் தட்கர, முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் ஆகியோர் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அஜித்பவார்
அஜித்பவார்

முதல் முறையாக இரு கட்சி தலைவர்களும் சேர்ந்து முதல்வர் பட்னாவிஸைச் சந்தித்துப் பேசி இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், அஜித்பவார் கட்சியுடன் இணைவது தொடர்பாக இப்பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஜெயந்த் பாட்டீல் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து இப்பேச்சுவார்த்தை குறித்து விவாதித்துள்ளார்.

சரத்பவார் கட்சி பா.ஜ.க கூட்டணியில் சேரும் பட்சத்தில் பா.ஜ.க கூட்டணியில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சரத்பவார் கட்சியில் 8 எம்.பி.க்கள் இருக்கின்றனர். ஜெயந்த் பாட்டீல் பா.ஜ.க செயலாளர் வினோத் தாவ்டேயுடனும் இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஆனாலும் சரத்பவார் தொடர்ந்து இவ்விவகாரத்தில் மவுனம் சாதித்து வந்தார். எதிர்க்கட்சியில் நீடிப்பது தொகுதி வளர்ச்சி நிதி, நிர்வாக அனுமதிகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதால், சரத்பவார் கட்சியைச் சேர்ந்த பாதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கூட்டணியில் சேர விரும்புவதாக சரத்பவாரிடம் மறைமுகமாகத் தெரிவித்து இருந்தனர்.

இதனால் மகாராஷ்டிரா அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. உத்தவ் தாக்கரே கட்சியில் ஏற்பட்டது போன்ற ஒருநிலையைத் தவிர்க்க சரத்பவார் முயன்று வருகிறார்.

நலங்கிள்ளியின் ’ஆர்எஸ்எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்' நூலுக்கு தடை விதிக்க கோரிக்கை – காரணம் என்ன?

கோவை புத்தகத் திருவிழா வருகின்ற 17ம் தேதியன்று துவங்க உள்ளது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த எதிர் வெளியீடு சார்பில், மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதிய ’ஆர்.எஸ்.எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன... மேலும் பார்க்க

``நான் தமிழனே இல்லை; என் பெயர் திருமாவளவன் இல்லை எனப் பிரசாரம் செய்கிறார்கள்" - திருமாவளவன்

கடலூரில் விசிக சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``ஆரம்பக் காலத்தில் (90-களில்) விசிகவின் கருத்துக்கள் மீது போதிய ஊ... மேலும் பார்க்க

TNRERA கலைப்பு: 6 மாதங்களுக்கு இடைக்கால நிர்வாகம்! - வீடு வாங்குபவர்களுக்கு பாதிப்பு இருக்குமா?

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமான `TNRERA' அமைப்பை தமிழக அரசு உடனடியாக கலைத்து, அதன் அதிகாரங்களை மேற்கொள்ள இடைக்காலமாக மூன்று பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந... மேலும் பார்க்க

மகனுக்காக எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க நிதின் கட்கரி முயற்சி? 4 யூடியூப்பர்கள் மீது வழக்கு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாகனங்களில் எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். பெட்ரோல் மற்றும் டீசலுடன் எத்தனாலை குறிப்பிட்ட அளவு கலந்துப் பயன்படுத்தலாம் என்று கூறி வருகிறா... மேலும் பார்க்க

'ஆபரேஷன் Toofan' - தமிழக முதல்வரை திடீரென சந்திக்கும் கேரள உள்துறை அமைச்சர்! - பின்னணி என்ன?

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை கேரள உள்துறை அமைச்சர் ரமேஶ் சென்னிதலா இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசிக்கவிருக்கிறார். இந்த சந்திப்பின் மையமாக 'ஆபரேஷன் Toofan' இருக்கப்போவதாக கூறுகிறார்கள். இதன்... மேலும் பார்க்க